News January 8, 2025

விஐபி தரிசனத்தை ஒழிக்க வேண்டும்!

image

விஐபி தரிசனம் என்ற எண்ணமே தெய்வீகத்திற்கு எதிரானது என குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தங்கர் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் உள்ள ஸ்ரீ மஞ்சுநாத கோயிலில் வரிசை வளாகத்தை தொடங்கி வைத்து பேசிய அவர், கோயில்களில் விஐபி தரிசன கலாச்சாரத்தை அகற்ற வேண்டும் என்றார். ஒருவருக்கு முன்னுரிமை அளித்து விவிஐபி அல்லது விஐபி என்று முத்திரை குத்துவது சமத்துவ கருத்தை இழிவுபடுத்துவதாகவும் கூறினார்.

News January 8, 2025

ஜனவரி 8: வரலாற்றில் இன்று

image

*1297 – மொனாக்கோ விடுதலை பெற்றது *1642 – வானியலாளர் கலீலியோ கலிலி மறைந்தார் *1828 – ஐக்கிய அமெரிக்காவின் ஜனநாயக கட்சி தொடக்கம் *1942 – இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் பிறந்தார் *1973 – ரஷ்யாவின் லூனா 21 விண்கலம் விண்ணில் பாய்ந்தது *1986 – கன்னட நடிகர் யாஷ் பிறந்தார் *1995 – தமிழீழ விடுதலைப் புலிகள் – சந்திரிகா அரசு இடையே போர் நிறுத்தம் ஆரம்பம்.

News January 8, 2025

இந்தியாவின் ஜிடிபி 6.4% வளரும் எனக் கணிப்பு

image

2024-25இல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.4% வளர்ச்சியடையும் என்று மத்திய புள்ளியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. கட்டுமானத் துறை, நிதி, ரியல் எஸ்டேட் மற்றும் தொழில்துறை சேவைகள் துறை ஆகியவை 7.3% வளர்ச்சியை காணும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய உள்கட்டமைப்பு மேம்பாடு, வீட்டு தேவை மற்றும் நகரமயமாக்கல் போக்குகளைப் பிரதிபலிக்கிறது.

News January 8, 2025

அன்னை தெரேசாவின் பொன்மொழிகள்

image

*சிலர் உங்கள் வாழ்க்கையில் ஆசீர்வாதங்களாக வருகிறார்கள். சிலர் உங்கள் வாழ்க்கையில் பாடங்களாக வருகிறார்கள். *மிகுந்த அன்புடன் செய்யப்படும் சிறிய விடயங்கள் இந்த உலகை மாற்றும். *உங்களுக்காக எதுவும் செய்ய முடியாதவர்களை நீங்கள் எவ்வாறு நடத்துகிறீர்கள் என்பதன் மூலம் உங்களின் உண்மையான குணம் அளவிடப்படுகிறது. *நேற்று என்பது கடந்துவிட்டது. நாளை என்பது இன்னும் வரவில்லை. எங்களுக்கு இன்று மட்டுமே உள்ளது.

News January 8, 2025

ஷேக் ஹசீனாவின் பாஸ்போர்ட் ரத்து

image

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பாஸ்போர்ட்டை அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது. இடஒதுக்கீடு விவகாரத்தில் வன்முறை வெடித்ததால், பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இது தொடர்பான வழக்கில், சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அவருக்கு 2ஆவது முறையாக கைது வாரண்ட் பிறப்பித்த நிலையில், ஷேக் ஹசினா உள்பட 97 பேரின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது.

News January 8, 2025

11ஆம் தேதி முதல் ‘புஷ்பா 2’ புதிய வெர்ஷன்

image

3.15 மணி நேரம் ஓடும் ‘புஷ்பா 2’ படத்தில், கூடுதலாக 20 நிமிட காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. வரும் 11ஆம் தேதி முதல் புதிய வெர்ஷன் திரையிடப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 5ஆம் தேதி வெளியான இத்திரைப்படம், 32 நாட்களில் உலகம் முழுவதும் ₹1,831 கோடியை வசூலித்துள்ளது. விரைவில் ₹2,000 கோடியை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News January 8, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: பிறனில் விழையாமை ▶குறள் எண்: 142 ▶குறள்: அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரின் பேதையார் இல். ▶பொருள்: அறத்தை விட்டுத் தீநெறியில் நின்றவர் எல்லாரிலும் பிறன் மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில் சென்று நின்றவரைப் போல் அறிவிலிகள் இல்லை.

News January 8, 2025

சிறுமி வன்கொடுமை வழக்கில் இருவர் கைது

image

சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் இன்ஸ்பெக்டர் ராஜி, அதிமுக நிர்வாகி சுதாகர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளி எனக் கருதப்படும் சதீஷுக்கு ஆதரவாக செயல்பட்டதாக சுதாகர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புகார் அளிக்க சென்ற சிறுமியின் பெற்றோரைத் தாக்கியதாக ராஜி கைது செய்யப்பட்டுள்ளார். இருவரையும் ஜன. 21ஆம் தேதி வரை சிறையில் அடைக்க போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News January 8, 2025

இஸ்ரோவின் புதிய தலைவர் வி.நாராயணன்

image

இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணனை நியமித்தது மத்திய அரசு. வரும் 14ஆம் தேதி அவர் பொறுப்பேற்கவுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தைப் பூர்வீகமாக கொண்ட அவர், திருவனந்தபுரம் வலியமலாவில் உள்ள LPSCயின் இயக்குநராக பணியாற்றி வருகிறார். இஸ்ரோவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். இஸ்ரோவின் தற்போதைய தலைவராக உள்ள சோம்நாத்தின் பதவிக்காலம் வரும் 14ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

News January 8, 2025

இன்றைய (ஜன. 8) நல்ல நேரம்

image

▶ஜனவரி 8 ▶மார்கழி- 24 ▶கிழமை: புதன் ▶ நல்ல நேரம்: 09:30 AM – 10:30 AM, 4.30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM, 06:30 PM – 07:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 01:30 PM ▶எமகண்டம்: 07:30 AM – 09:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: நவமி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶நட்சத்திரம்: அஸ்வினி ▶சந்திராஷ்டமம்: உத்திரம்

error: Content is protected !!