News January 8, 2025

இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது அதிமுக?

image

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு அடுத்த மாதம் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடலாமா, வேண்டாமா என்பது குறித்து ஆலோசிக்க வருகிற 11ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற இருக்கிறது. கடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பு செய்தது. அதுபோல ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலையும் அதிமுக புறக்கணிக்க வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

News January 8, 2025

அடிக்கடி வெளிநாட்டு நம்பரில் இருந்து போன் வருதா?

image

அடிக்கடி வெளிநாட்டு நம்பர்களில் வரும் மோசடி அழைப்புகளைத் தடுப்பதற்கு; * ஸ்பாம் எண்களை சிவப்பு நிறத்தில் காட்டி எச்சரிக்கும் TrueCallerஐ உபயோகிக்கலாம் * தொடர்ந்து அழைப்புகள் வந்தால், அந்த எண்ணை பிளாக் செய்யுங்கள் * அது குறித்து 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணில் புகார் அளிக்கவும் * வாட்ஸ்அப் வெளிநாட்டு நம்பரில் இருந்து வரும் அழைப்புகளை தடுக்க “Silent Unknown Calls” என்ற அம்சத்தை பயன்படுத்தலாம்.

News January 8, 2025

‘இல்லம் தேடி கல்வி’ திட்ட ஆசிரியர்கள் விடுவிப்பு

image

‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தில் பள்ளி மாணவர்களை மேம்படுத்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டு வந்த ஆசிரியர்கள் விடுவிக்கப்படுகின்றனர். இத்திட்டத்தில் 23,000 தன்னார்வலர்கள் கற்பித்தல் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், விடுவிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பதிலாக, தற்போதுள்ள தன்னார்வலர்களை ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கவும், அவர்களுக்கு மாதம் ₹12,000 மதிப்பூதியம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

News January 8, 2025

நடிகர் விஷால் ஹாஸ்பிட்டலில் அனுமதி

image

மதகதராஜா பட விழாவில் விஷால் பேசுகையில் கை நடுங்கிய வீடியோ வெளியாகி வைரலானது. இதையடுத்து அவரின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், கை நடுக்கத்தைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள தனியார் ஹாஸ்பிட்டலில் அவர் அனுமதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர் சில நாள்கள் டாக்டர்கள் கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

News January 8, 2025

இந்தியன் ரயில்வேயில் 1,036 பணியிடங்கள்

image

இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 1,036 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை RRB வெளியிட்டுள்ளது. ஆசிரியர், வழக்கறிஞர் உள்ளிட்ட பணிகளில் சேர ஆர்வம் உள்ளவர்கள் பிப்.,6 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி: Degree. வயது வரம்பு: 18-48. சம்பளம்: ₹35,400-₹47,600. தேர்வு முறை: கணினி வழி தேர்வு, திறன் தேர்வு. கூடுதல் தகவல்களுக்கு https://www.rrbchennai.gov.in/ சென்று பார்க்கவும்.

News January 8, 2025

காலையில் செய்யும் இந்த ‘3’சீக்ரெட்ஸ்…ஆயுளை கூட்டும்

image

➞ எழுந்தவுடன் 1 லிட்டர் தண்ணீர் குடிப்பது, உடல் உபாதைகள் வெளியேற்ற உதவும் ➞ காலை நேரத்தில் செய்யும் உடற்பயிற்சி, தியானம் அன்றைய தினம் உடலையும், மனதையும் சுறுசுறுப்பாக வைக்க உதவும் ➞ எந்த காரணத்தினாலும் காலை உணவைத் தவற விடக்கூடாது. ஊட்டச்சத்து மிக்க உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறாக செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் உடல் ஆரோக்கியத்தை அதிகரித்து ஆயுளை அதிகரிக்கும். ட்ரை பண்ணுங்க…SHARE IT.

News January 8, 2025

ஆளுநர் உரை மீது பேரவையில் இன்று விவாதம்

image

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. தொடர்ந்து, நாளை மறுநாள் வரை இவ்விவாதம் நடைபெறும். வரும் ஜன.11ல் இந்த விவாதத்திற்கு CM பதிலளிப்பார். நேற்றைய தினம் மன்மோகன் சிங், EVKS இளங்கோவனுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இன்று அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக விவாதிக்கக் கோரி EPS கவன ஈர்ப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

News January 8, 2025

ஹாரிஸ் ஜெயராஜ் எனும் இசை மந்திரவாதி

image

2000ம் ஆண்டுகளில் இவர் போட்ட ஹிட் பாடல்களுக்கு இன்று வரை VIBE செய்யாத ஆளே இல்லை. தனது மின்னலான பாடல்களால் ரசிகர்கள் என்னமோ ஏதோ என விழி மூடி யோசித்தாலும் நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழையாய் உனக்கென வேணும் சொல்லு என அனைத்து உணர்ச்சிகளையும் ஹிட் பாடல்களாக ஒன்றா ரெண்டா என்ற கணக்கில்லாமல் அள்ளி தெளித்தவர். இன்று இந்த இசை மந்திரவாதியின் 49வது பிறந்தநாள். உங்களின் ஃபேவரிட் ஹாரிஸ் மாம்ஸ் பாட்டு எது?

News January 8, 2025

நிலநடுக்கம்: 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டம்

image

நேபாள், திபெத்தில் நேரிட்ட சக்திவாய்ந்த <<15093617>>நிலநடுக்கத்தில்<<>> 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. திபெத்தை மையமாக கொண்டு நேற்று இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் அங்குள்ள 3 பெரிய நகரங்கள், 27 கிராமங்களில் பெரிய அழிவு ஏற்பட்டுள்ளது. கட்டிட இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர்களைத் தேடும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

News January 8, 2025

இந்தியாவில் ₹25,500 கோடி முதலீடு செய்யும் மைக்ரோசாப்ட்

image

இந்தியாவில் சுமார் ₹25,500 கோடி முதலீடு செய்ய உள்ளதாக மைக்ரோ சாப்ட் நிறுவன தலைவர் சத்யா நாதெள்ளா தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள அவர் பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது, தொழில்நுட்பம் மற்றும் ஏ.ஐ., விரிவாக்க பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறினார். மேலும், 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு கோடி இந்தியர்களுக்கு ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

error: Content is protected !!