India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶ஜனவரி 9 ▶மார்கழி- 25 ▶கிழமை: வியாழன் ▶ நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 01:30 AM, 06:30 PM – 07:30 PM ▶ராகு காலம்: 01:30 PM – 03:00 PM ▶எமகண்டம்: 06:00 AM – 07:30 AM ▶குளிகை: 09:00 AM – 10:30 AM ▶திதி: நவமி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶நட்சத்திரம்: பரணி ▶சந்திராஷ்டமம்: அஸ்தம்
இன்று (ஜன. 9) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பக்தர்களின் குடும்பங்களுக்கு ஆந்திர CM சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். சோக சம்பவம் குறித்து டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகளிடம் பேசிய அவர், கூட்டத்தை கட்டுப்படுத்த தவறியது குறித்து கேள்வி எழுப்பினார். மேலும், படுகாயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார். இந்நிலையில், அவர் இன்று திருப்பதி செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (ஜன. 9) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
2010ல் ஆர்டர் செய்த 40 தேஜஸ் போர் விமானங்கள் கூட இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை என விமானப்படை தளபதி ஏபி சிங் கவலை தெரிவித்துள்ளார். சீனா தனது விமானப்படைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும், நாம் அதில் மிகவும் பின்தங்கி இருப்பதாகவும் அவர் வருத்தத்துடன் கூறியுள்ளார். சீனா 6ஆவது தலைமுறை போர் விமானத்தை வைத்திருக்கும் நிலையில், இந்தியாவின் 5ஆம் தலைமுறை விமானம் இன்னும் கட்டமைப்பு நிலையிலேயே உள்ளது.
மகாராஷ்டிராவில் இன்று நடந்த திருமண நிகழ்ச்சியில் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. மணப்பெண்ணின் தாய்மாமா, திருமண விருந்தில் திடீரென விஷத்தை கலந்துள்ளார். இதை பார்த்த சிலர் அவரை பிடிக்க முயல, அவர் தப்பியோடிவிட்டார். விசாரணையில், அவரது பெயர் மகேஷ் என்பதும், அவரது விருப்பமில்லாமல் திருமணம் நடைபெறுவதால் இச்செயலில் அவர் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர். மாமாவே இப்படி செய்யலாமா?
இஸ்ரோ தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள வி.நாராயணனுக்கு, எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், விண்வெளித்துறையின் முக்கிய பொறுப்பில் நாராயணன் நியமிக்கப்பட்டது, தமிழகத்திற்கு பெருமை எனக் கூறியுள்ளார். மேலும், நாராயணன் தலைமையில் விண்வெளி ஆராய்ச்சியில் நாடு பல உச்சங்களை தொட வாழ்த்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாங்கள் பணியாற்றும் நிறுவனத்தின் மீதான விருப்பு, வெறுப்புகளை ராஜினாமா கடிதத்தில் காட்டும் காலம் இது. அந்த வகையில், ஐடி ஊழியர் ராகுல் எழுதிய ராஜினாமா கடிதம் வைரலாகிறது. அதில், “2 வருட கடின உழைப்பை தந்தும் எனது சம்பளம் உயரவில்லை. வேகமான ஃபோனான IQOO 13-ஐ கூட என்னால் வாங்க முடியவில்லை எனில், எனது கெரியர் எப்படி வேகமாக முன்னேறும். எனவே, வளர்ச்சி தரும் நிறுவனத்தில் சேரவுள்ளேன்” என அவர் கூறியுள்ளார்.
AUSக்கு எதிரான BGT டெஸ்ட் தொடரில் தோல்வி குறித்து BCCIன் உயர்மட்ட அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இக்கூட்டத்தில் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் ரோஹித் ஷர்மா கலந்து கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் ரோஹித், கோலியின் மோசமான ஃபார்ம், அஸ்வினின் திடீர் ஓய்வு குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
➤மேஷம் – உற்சாகம் ➤ ரிஷபம் – வரவு ➤மிதுனம் – ஆர்வம் ➤கடகம் – வெற்றி ➤சிம்மம் – கவலை ➤கன்னி – அச்சம் ➤துலாம் – பக்தி ➤விருச்சிகம் – நன்மை ➤தனுசு – சாந்தம் ➤மகரம் – நஷ்டம் ➤கும்பம் – பெருமை ➤மீனம் – தொல்லை.
Sorry, no posts matched your criteria.