India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொங்கல் விடுமுறைக்கு மக்கள் சொந்த ஊர் செல்வதால் இதை பயன்படுத்தி, தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் அதிகம் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக தென் மாவட்ட பேருந்துகளுக்கான டிக்கெட் கட்டணம் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து நெல்லைக்கு ரூ.4,000ம், நாகர்கோவிலுக்கும் ரூ.4,000ம் டிக்கெட் கட்டணம் பெறப்படுகிறது. சென்னையிலிருந்து கோவைக்கு ரூ.2,800 வரை வசூலிக்கப்படுகிறது.
ஜனவரி மாதத்திற்கான ‘மகளிர் உரிமைத் தொகை’ ₹1000 இன்றே பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. மாதந்தோறும் 14ஆம் தேதி செலுத்தப்படும் இந்தத் தொகையானது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முன்னதாகவே வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்த நிலையில், இன்றே வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளன. உங்கள் வங்கிக் கணக்கில் ₹1000 வந்துள்ளதா? கமெண்ட்ல சொல்லுங்க..
பெரியார் குறித்து சீமான் சில கருத்துகளை தெரிவித்து இருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த பெரியார் திராவிடர் கழகம், சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டை இன்று முற்றுகையிடப் பாேவதாக அறிவித்திருந்தது. அப்படி ஒருவேளை முற்றுகையிட்டால் பதற்றம் உருவாகலாம் எனக் கருதி, முன்னெச்சரிக்கையாக சீமானின் வீட்டை சுற்றி தடுப்புகளை அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் விராட் கோலி, ஓய்வு பெற வேண்டும் என நெட்டிசன்கள் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள். அப்படி கோலி ஓய்வு பெற்றால், அது இந்திய அணிக்குதான் பெரிய பாதிப்பாக அமையும் என ஆஸி. வீரர் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார். அடுத்த போட்டியில் கூட கோலி இரட்டை சதம் அடிக்கலாம், அவர் அந்தளவிற்கு திறமையானவர், அவராக ஓய்வு பெறும் வரை விளையாடவிட வேண்டும் என தெரிவித்தார்.
சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.7,225க்கும், 1 சவரன் தங்கம் ரூ. 57,800க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று 1 கிராம் தங்கம் விலை ரூ.35 உயர்ந்து, ரூ. 7,260ஆக விற்கப்படுகிறது. இதேபோல், 1 சவரன் தங்கம் விலை ரூ.280 அதிகரித்து ரூ.58,080க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையில் இன்றும் எந்த மாற்றமில்லை. 1 கிராம் வெள்ளி ரூ.100ஆகவும், 1 கிலோ வெள்ளி ரூ.1 லட்சமாகவும் விற்கப்படுகிறது.
துணை வேந்தர் நியமனம் தொடர்பான அறிவிப்பை எதிர்த்து பேரவையில் இன்று முதல்வர் தனித் தீர்மானம் கொண்டு வர உள்ளார். பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்க கவர்னருக்கு அதிகாரம் வழங்கும், ‘UGC திருத்தப்பட்ட வரைவு வழிகாட்டு நெறிமுறை 2025’-க்கு எதிராக இந்த தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. துணைவேந்தர்களை நியமிக்கும் விவகாரத்தில் கவர்னருக்கும், அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன.
*வீட்டின் மின்சார செலவில் கவனமாக இருங்கள். தேவையற்ற நேரத்தில் ஃபேன், பல்பு, லைட், டிவியை அணைத்து வையுங்கள் *சமைக்கும் விஷயத்தில் கவனம் இருக்க வேண்டும். அதிகளவில் சமையல் பொருட்கள் வீணாவதில் கவனம் வையுங்கள் *சேமிப்புகளில் நாட்டம் கொள்ளுங்கள். அது திடீரென ஏற்படும் செலவு நேரத்தில் உதவும் *பண்டிகை காலங்களில் அதிகப்படியான துணியோ, பொருட்களோ வாங்கிக்குவிக்க வேண்டாம். தேவைக்கேற்ப செலவு செய்வதே நல்லது.
மதகஜராஜா பட விழாவில் விஷால் பேசுகையில் கை விரல் நடுங்கிய வீடியோ வெளியானது. இதையடுத்து வைரஸ் காய்ச்சல் என்று தனியார் ஹாஸ்பிட்டல் அறிக்கை வெளியிட்டது. பின்னர் ஹாஸ்பிட்டலில் விஷால் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், விஷாலின் மேலாளரோ இதை மறுத்துள்ளார். இதையடுத்து விஷாலுக்கு உண்மையில் என்ன ஆனது? அவர் எங்கிருக்கிறார்? என அவரின் ரசிகர்கள் கவலையுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சமூக உள்ளடக்கம், தொழில் துறை உள்ளடக்கம், மக்களின் அனுபவம் ஆகிய 3 குறியீடுகளின் அடிப்படையில் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் எது என அவதார் குழுமம் ஆய்வு நடத்தியுள்ளது. இதில் மாநில பட்டியலில் கேரளம், தெலங்கானா, மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு முதல் 4 இடங்களில் உள்ளன. நகரங்களின் பட்டியலில் குருகிராம், மும்பை, பெங்களூரு, சென்னை முதல் 4 இடத்தில் உள்ளன. சிறிய நகரங்களில் பட்டியலில் கோவை முதலிடத்தில் உள்ளது.
பொங்கலையொட்டி மக்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு, இலவச வேட்டி, சேலை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தை சென்னையில் உள்ள ரேஷன் கடையில் முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி வைக்கவுள்ளார். இதையடுத்து, அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் தொகுப்பு விநியோகம் தொடங்கப்படவுள்ளது. இதையொட்டி ரேஷன் கடைகளில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.