India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மனைவியை இரு நண்பர்கள் பாலியல் வன்கொடுமை செய்வதை சவுதியிலிருந்து வீடியோ காலில் ரசித்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உ.பி., மீரட் அருகே கடந்த 3 ஆண்டுகளாக நண்பர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு, அவர்களது ஆசைக்கு இணங்க மனைவியை வற்புறுத்தியுள்ளார். தற்போது கர்ப்பிணியாக உள்ள அந்த 35 வயது பெண், கொடுமை தாங்காமல் போலீசை நாடியுள்ளார். இந்த கொடூரனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம், நீங்களே சொல்லுங்க..
ஈஸ்வரன், கலகத் தலைவன் படங்களில் நடித்துள்ள நிதி அகர்வால், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் தன்னையும், தனது குடும்பத்தினரையும் கொலை செய்ய போவதாக ஒருவர் சமூகவலைதளத்தில் மிரட்டல் விடுத்து இருப்பதாகவும், அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். அண்மையில் மலையாள நடிகை ஹனிரோஸும் இதேபோல் புகார் தெரிவித்திருந்தார்.
மக்கள் கூடும் இடங்களில் வாழை மரம் கட்டப்பட்டிருக்கும், ஏன் என யோசித்திருக்கிறீர்களா? இன்றளவும் கிராமங்களில் பாம்பு தீண்டினால் விஷத்தை முறிக்க முதலுதவியாக வாழையின் அடிக்கிழங்கில் சுரக்கும் நீரை அருந்த கொடுப்பார்கள். அதே போல, வாழை இலையில் பாலிஃபீனால் (Polyphenol) இருக்கிறது. உணவை வாழை இலையில் வைத்து சாப்பிடும் போது, பாலிஃபீனால்கள் உணவில் கலந்து மனிதனுள் சென்று ஊட்டச்சத்துக்களைத் தருகிறது.
தவெக நிர்வாகிகளுடன் விஜய் நாளை முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் நாளை அவர் ஆலோசனை நடக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தவெக கட்சியை ஆரம்பித்த விஜய், மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்களை நியமிப்பது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மாவட்ட செயலாளர்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகும் எனவும் சாெல்லப்படுகிறது.
வரும் 12ஆம் தேதி 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 11ஆம் தேதி கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இடி, மின்னலுடன் லேசான, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. 12ஆம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
திருப்பதியில் நேர்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த <<15103086>>சேலம் பெண்<<>> மல்லிகாவின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள CM ஸ்டாலின், ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். மல்லிகாவின் சடலத்தை அவரது சொந்த ஊரான மேச்சேரிக்கு கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளைச் செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ஆந்திர அரசு அறிவித்துள்ளது. நேற்று மாலை சொர்க்கவாசல் திறப்பு தரிசன டோக்கன் பெறக் காத்திருந்த பக்தர்கள் இடையே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட 6 பேர் பலியான நிலையில், 40 பேர் ஹாஸ்பிட்டலில் சிகிச்சையில் உள்ளனர்.
12 வருடங்களுக்கு பின்னர், கோலி டெஸ்ட் தரவரிசையில் 20வது இடத்திற்கு வெளியே தள்ளப்பட்டுள்ளார். பட்டியலில் அவர் 27வது இடத்தில் இருக்கிறார். தொடர்ந்து டெஸ்ட்டில் அவரின் ஆட்டம் சொதப்பி வரும் நிலையில், இவ்வளவு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக அவரின் பழைய ஆட்டத்தை ரசிகர்கள் மிஸ் செய்கிறார்கள். இது அவருக்கு மட்டுமின்றி, இந்திய ரசிகர்களுக்கும் கஷ்டம் தான். மீள்வாரா கிங்?
UGC புதிய விதிகளுக்கு எதிராக சட்டப்பேரவையில் CM ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். அதன் மீது பேசிய அவர், பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர்கள் நியமனத்தில் கவர்னருக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது கூட்டாட்சி தத்துவம், மாநில உரிமைகளுக்கு எதிரானது எனக் கூறினார். இது, மாநில அரசை சிறுமைப்படுத்தும் செயல் எனவும், அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெறாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என்றும் தெரிவித்தார்.
<<15104294>>ஜெயக்குமார் <<>>ஒரு பெண்ணுடன் பேசியதாக கூறப்படுவது போன்ற ஆடியோவை திமுக ஐடி விங்க் வெளியிட்டுள்ளது. இதற்கு அதிமுக ஐடி விங்க், பதிலடி கொடுத்துள்ளது. அமைச்சர் பெரிய கருப்பன் படத்துடன் பதிவு வெளியிட்டு, எங்க கிட்டயும் சீப்பு இருக்குன்னு, இந்த மாதிரி மார்பிங் ஆடியோ போடாம, உங்க அமைச்சரோட ஒரிஜினல் வீடியோவையே போட்டுடலாம் தான். ஆனா ரொம்ப அசிங்கமா போய்டும்ன்னு பார்க்குறோம் என எச்சரித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.