News January 9, 2025

‘விடாமுயற்சி’க்கு U/A

image

அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 2:30 மணி நேரம் ஓடக்கூடிய இப்படத்தில் அஜித்திற்கு பிடித்த மாதிரி பல காட்சிகள் இடம்பெற்றுள்ளதாம். குறிப்பாக, கார் ரேஸ் காட்சியை பார்த்து தணிக்கை அதிகாரிகளே மிரண்டு போனார்களாம். ரசிகர்களை குஷிப்படுத்தும் நோக்கில், விறுவிறுப்பு குறையாத கதைக்களத்துடன் சண்டைக்காட்சிகள், காதல் காட்சிகள், பாடல்கள் என ஒவ்வொன்றும் செதுக்கப்பட்டுள்ளதாம்.

News January 9, 2025

புலிகேசி படமாக மாறிய சட்டப்பேரவை: அண்ணாமலை

image

தற்போது நடந்து வரும் தமிழக சட்டப்பேரவை, வடிவேலு நடித்த ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ படத்தைப் பார்ப்பது போல் இருப்பதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வடிவேலுவைப் போலவே முதல்வரை புகழ்வதில் ஒவ்வொருவருக்கும் இடையே போட்டி இருப்பதாகவும், வடிவேலுவின் இடத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பிடித்துவிட்டதாகவும் கலாய்த்துள்ளார்.

News January 9, 2025

‘புஷ்பா 2 ரீலோடட்’ ரிலீஸ் தள்ளிவைப்பு

image

‘புஷ்பா 2 ரீலோடட்’ ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அல்லு அர்ஜுன், ரஷ்மிகா நடித்த ‘புஷ்பா 2’ வசூலில் மாபெரும் சாதனையை படைத்தது. 3.20 மணி நேரம் ஓடக்கூடிய இந்த படத்தில், கூடுதலாக 20 நிமிடக் காட்சிகள் சேர்க்கப்பட்டு ஜனவரி 11ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு அறிவித்திருந்தது. தொழில்நுட்பக் கோளாறால் ரிலீஸ் தேதி தற்போது ஜனவரி 17க்கு தள்ளிவைக்கப்பட்டுள்து.

News January 9, 2025

பொங்கலுக்கு ₹1000 கிடையாது. அமைச்சர் மீண்டும் உறுதி

image

கடைசி நேரத்தில் கூட பொங்கலுக்கு ₹1000 வழங்கப்படலாம் என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், இன்று சட்டப்பேரவையில் விளக்கமளித்த தங்கம் தென்னரசு, மத்திய அரசு பல்வேறு திட்டங்களுக்கான நிதியை நிலுவை வைத்துள்ளது. குறிப்பாக, வெள்ள நிவாரண பணிகளுக்கு ₹37,000 கோடி கேட்டோம். ஆனால் வெறும் ₹276 கோடி மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், பொங்களுக்கு ₹1000 வழங்கப்படாது என்று உறுதிப்படுத்தினார்.

News January 9, 2025

பொங்கலுக்கு ரூ.1000 தராத கோபம்: வெடிகுண்டு மிரட்டல்

image

நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், விரைவில் ஆட்சியர் அலுவலகத்தில் குண்டு வெடிக்கும் எனக் கூறிவிட்டு ஃபோனை கட் செய்தார். இதையடுத்து, செல்போன் சிக்னலை ட்ரேஸ் செய்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அப்துல் ரகுமானை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1000 இல்லாத கோபத்தில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக அவர் கூறினார்.

News January 9, 2025

சாம்பியன்ஸ் டிராபி துபாய்க்கு மாற்றம்?

image

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான மைதானங்கள் தயாராவதில் சிக்கல் நிலவுவதால், துபாய்க்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. லாகூர், கராச்சி மற்றும் ராவல்பிண்டி மைதானங்களின் மறுசீரமைப்புப் பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மைதானங்களை வரும் 12ஆம் தேதிக்குள் பாகிஸ்தான், ஐசிசியிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

News January 9, 2025

இந்த மாவட்டத்தில் பொங்கல் தொகுப்பு கிடையாது

image

ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் சிறப்புத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, ஆர்வத்துடன் ரேஷன் கடைக்கு சென்ற ஈரோடு கிழக்குத் தொகுதி மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அங்கு இடைத்தேர்தல் நடப்பதால் சிறப்புத் தொகுப்பு வழங்கப்படவில்லை. தேர்தல் ஆணையத்திடம் சிறப்பு அனுமதி பெற்று தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

News January 9, 2025

TNPSC குரூப் 2, 2A இலவச பயிற்சி விண்ணப்பிப்பது எப்படி?

image

குரூப் 2, 2A மெயின்ஸ் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பை தமிழ்நாடு அரசு நடத்தி வருகிறது. இதில் இணைய விரும்புபவர்கள் மெயின்ஸ் தேர்வுக்கு விண்ணப்பித்த படிவத்தின் நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் போட்டோவுடன் சென்னை கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை வேலை நாள்களில் நேரடியாக அணுகலாம். மேலும் விவரங்களுக்கு decgc.coachingclass@gmail.com என்ற E-Mailஇல் தொடர்பு கொள்ளலாம்.

News January 9, 2025

தனித் தீர்மானத்திற்கு அதிமுக, பாமக ஆதரவு

image

UGCஇன் புதிய விதிகளுக்கு எதிராக சட்டப்பேரவையில் CM ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு அதிமுக, பாமகவும் ஆதரவு அளித்தன. அதேவேளையில், இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். முன்னதாக, தீர்மானத்தின் மீது பேசிய CM ஸ்டாலின், புதிய விதிகளைத் திரும்பப் பெறாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என எச்சரித்தார்.

News January 9, 2025

களைகட்டும் பொங்கல் லீவு: இந்த வார OTT ரிலீஸ்!!

image

*சூக்ஷமதர்ஷினி: நஸ்ரியாவின் படம் இன்று ஜீ5 OTTல் வெளியானது * அதோமுகம்: நல்ல வரவேற்பை பெற்ற படம் ஆஹா தமிழ் OTTல் ஜன.10 வெளியாகிறது *மிஷன்: இம்பாசிபிள் – டெட் ரெக்கனிங்: டாம் கூருஸின் படம் நெட்பிளிக்ஸ் OTTல் ஜன.11 வெளியாகிறது * முன்னதாக, பிரஷாந்தின் அந்தகன் (ஜன. 7-ஆஹா தமிழ் OTT), பி.டி.சார் (ஜன.6 – டெண்ட்கொட்டா OTT), சதீஷின் சட்டம் என் கையில் (ஜன.6 – டெண்ட்கொட்டா OTT)யில் வெளியாகின.

error: Content is protected !!