India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 13ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சென்னையில் இருந்து 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 5,736 சிறப்பு பேருந்துகள் என 4 நாள்களுக்கு மொத்தம் 14,104 பேருந்துகளும், திருச்சி, கோவை உள்ளிட்ட பிற ஊர்களில் இருந்து 7,800 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது. மொத்தமாக 21,904 பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. அத்தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவால் கடந்த மாதம் காலமானார். இதைத் தொடர்ந்து, பிப். 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என EC அறிவித்தது. இந்நிலையில், பொங்கல் மற்றும் வார இறுதி நாள்கள் நீங்கலாக ஜன. 10, 13 மற்றும் 17 ஆகிய தேதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. அதிகாலையில் நம்பெருமாள் கோயிலில் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசித்தனர். ரத்னாங்கி அலங்காரத்தில் தங்கப் பல்லக்கில் எழுந்தருளிய நம்பெருமாளை கண்ட பக்தர்கள் “கோவிந்தா கோவிந்தா…” என முழக்கமிட்டு, பக்தி பரவசம் அடைந்தனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த TOMBAT என்ற நிறுவனம் ‘ஜீனீ’ என்ற ரோபோ நாய்க்குட்டியை உருவாக்கியுள்ளது. பார்ப்பதற்கு லாப்ரடார் வகை நாய் வகையைபோல காட்சியளிக்கும் இந்த ரோபோ, அல்சைமர் மற்றும் டிமென்ஷியா மறதி பாதிப்புள்ள வயதானவர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடுதல் மற்றும் குரல் கட்டளைகளுக்கு பதிலளிக்கும் இந்த நாய் ரோபோ, AI மூலம் உருவாக்கப்பட்ட குரலில் குரைக்கும்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று ஒரே நாளில் 3 திரைப்படங்கள் திரைக்கு வருகின்றன. ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘கேம் சேஞ்சர்’, பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வணங்கான்’, சோனு நிகம், கலையரசன் ஆகியோர் நடித்துள்ள ‘மெட்ராஸ்காரன்’ ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன. இதில் நீங்கள் பார்க்க விரும்பும் திரைப்படம் எது? கமெண்டில் சொல்லுங்க.
மியான்மர் ராணுவம் விமானப்படை மூலம் நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்தனர். மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ராணுவத்திற்கும், ஆயுதம் ஏந்திய இன சிறுபான்மையினர், புரட்சி குழுக்கள் இடையே மோதல் நீடித்து வருகிறது. இதில் பல பகுதிகளை ஆயுதக் குழு தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இந்நிலையில், ராம்லீ தீவில் மியான்மர் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
*1863 – உலகின் முதல் நிலத்தடி ரயில் சேவை லண்டனில் தொடக்கம் *1912 – பிரிட்டிஷ் மன்னர் 5ஆம் ஜார்ஜ், ராணி மேரி இந்தியாவை விட்டு வெளியேறினர் *1917 – பெண்களுக்கு வாக்குரிமை கேட்டு வெள்ளை மாளிகைக்கு எதிராக போராட்டம் தொடங்கியது *1962 – பெருவில் ஏற்பட்ட சூறாவளியில் 4,000 பேர் பலி *1974 – யாழ்ப்பாணத்தில் நடந்த 4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளில் இலங்கை காவல்துறை சுட்டதில் 11 பேர் பலி
*நீங்கள் ஒரு வேலையை நன்றாகச் செய்ய விரும்பினால், அதை நீங்களே செய்யுங்கள். *உங்கள் எதிரி ஒரு தவறு செய்யும்போது ஒருபோதும் குறுக்கிடாதீர்கள். *நீங்கள் உங்கள் சிறகுகளை விரிக்கும் வரை, உங்களால் எவ்வளவு தூரம் பறக்க முடியும் என்று உங்களுக்கே தெரியாது. *பெரும் விடாமுயற்சி கொண்டவருக்கே வெற்றி சொந்தமானது. *வரலாறு என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட பொய்களின் தொகுப்பு.
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்காக ரேஷன் கடைகள் இன்று செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தைப் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீள கரும்பு ஆகியன வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் இதை விரைந்து பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொஹீன், அவரது மனைவி அஸ்மா தாளில் சுற்றப்பட்ட நிலையிலும், அவர்களது மகள்கள் அப்சா(8), அஜேசா(4), அதிபா(1) ஆகியோர் படுக்கை பெட்டிகளில் சடலமாகவும் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். கொலைக்கான காரணம் குறித்து தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.