India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராம் சரண் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ படம் இன்று வெளியாகியுள்ளது. மறைந்த IAS அதிகாரி டி.என்.சேஷனை இன்ஸ்பிரேஷனாக வைத்தே, ஹீரோ கேரக்டர் உருவாக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டை சேர்ந்த சேஷன், 1990களில் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த போது, தேர்தல் முறையில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்தார். அதனால் ஆட்சியில் உள்ளோர், அரசியல்வாதிகளுடன் மோதல்கள் ஏற்பட்ட போதும் அஞ்சாமல் செயல்பட்டார்.
திருவள்ளுவர் தினமான ஜனவரி 15ஆம் தேதி, டாஸ்மாக் கடைகள் செயல்படாது என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ராஷ்மி சித்தார்த் அறிவித்துள்ளார். கள்ளுண்ணாமையை வலியுறுத்தியவர் திருவள்ளுவர். அந்த வகையில், திருவள்ளுவர் தினத்தில் மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, முதல் மாவட்டமாக சென்னையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து பிற மாவட்டங்களிலும் அறிவிப்பு வெளியாகும்.
விவசாய நிலங்களை சேதப்படுத்துவதால், பல பகுதிகளில் காட்டுப்பன்றிகள் அதிக அளவில் சுட்டுக்கொல்லப்படுகின்றன. எனினும், வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி இது குற்றமாகும். மேலும், இதற்கு அபராதமும், சிறைத்தண்டனையும் உண்டு. இந்நிலையில், காப்பு காடுகளில் இருந்து 1-3 கி.மீ. தொலைவுக்கு வரும் காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல அனுமதி அளிக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி சட்டமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
காட்டுப் பன்றி இறைச்சி சுவையாக இருக்கும் என சட்டப்பேரவையில் கூறி, எம்.எல்.ஏ வேல்முருகன் சர்ச்சையில் சிக்கியுள்ளார். பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பட்டியலில் இருக்கும் காட்டுப் பன்றி இறைச்சியை அவர் எப்படி சுவைத்தார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். காப்புக் காடுகளிலிருந்து 3 KM தூரம் வரும் பன்றிகளை மட்டும் சுட்டுக்கொல்ல வனத்துறைக்கு அனுமதி உள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் கூறினார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்திய அணியின் கீப்பருக்கான ரேஸில் ராகுல், பண்ட், சாம்சன் இடையே போட்டி உள்ளது. இவர்களில் இருவர் அணியில் சேர்க்கப்படுவர். ODIல் 77 போட்டிகளில் விளையாடியுள்ள ராகுல், 2,851 ரன்களை எடுத்துள்ளார். பண்ட் 31 போட்டிகளில் 871 ரன்களையும், சாம்சன் 16 போட்டிகளில் 510 ரன்களையும் எடுத்துள்ளனர். இவர்களில் யார் அணியில் இருந்தால் நல்லது என நீங்கள் நினைக்கிறீர்கள்? கமெண்ட் பண்ணுங்க.
மாதம் ஒருமுறை மின் கட்டணம் வசூலிக்கப்படும் என 2021 தேர்தலில் DMK வாக்குறுதி அளித்தது. எனினும், தற்போது வரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில், பேரவையில் இன்று இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, நாட்டிலேயே TNல் தான் மின் கட்டணம் குறைவாக இருப்பதாகவும், மாநிலத்தில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டதும் மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வரும் எனவும் உறுதியளித்தார்.
ஜப்பானில் 41 வயதான ஷோஜி மோரமோடோ எதுவும் செய்யாமல் இருந்து ஆண்டுக்கு ரூ.69 லட்சம் சம்பாதிக்கிறார். இதனை Do Nothing Job என்கிறார்கள். தன்னை தானே வாடகைக்கு விடுகிறார் ஷோஜி. மாரத்தான் ஓடும்போது தண்ணீர் கொடுக்க, வீடு சுத்தம் செய்யும்போது பேசிக் கொண்டிருக்க, கான்செர்ட்டுக்கு துணையாக இவரை Clients புக் செய்கிறார்கள். ஆண்டுக்கு 1,000 புக்கிங் மேல் வருகிறதாம். நல்ல வேலையா இருக்கே.
உலகில் எந்தெந்த நாடுகளுக்கு எத்தனை செயற்கைக்கோள்கள் உள்ளன என்ற புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது. USAவிடம் 8,530 செயற்கைக்கோள்கள், ரஷ்யாவிடம் 1,545 , சீனாவிடம் 724 செயற்கைக்கோள்கள் இருக்கின்றன. இங்கிலாந்திடம் 658, ஜப்பானிடம் 208, பிரான்ஸிடம் 105, இந்தியாவிடம் 105 செயற்கைக்கோள்கள் உள்ளன. ஐரோப்பிய யூனியன் விண்வெளி நிறுவனத்திடம் 95 செயற்கைக்கோள்கள் இருக்கின்றன.
மாநில அரசுகளுக்கு ₹1,73,000 கோடி வரிப்பகிர்வை மத்திய அரசு விடுவித்துள்ளது. GST உள்ளிட்ட வரிகளை மொத்தமாக வசூலிக்கும் மத்திய அரசு, அதில் மாநிலங்களுக்கான வரிப்பகிர்வை வழங்கி வருகிறது. தமிழகத்திற்கு ₹7,057.89 கோடி வரிப்பகிர்வை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக, உ.பி.க்கு ₹31,039 கோடியும், அடுத்ததாக பீகாருக்கு ₹17,403 கோடியும், 3வதாக ம.பி.க்கு ₹13,582 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அயர்லாந்து vs இந்திய மகளிர் அணிகள் மோதும் முதல் ODI போட்டி இன்று நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த IREW அணி, 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக கேப்டன் கேபி லெவிஸ் 92, லியா பால் 59 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணி சார்பில், ப்ரியா மிஸ்ரா அதிகபட்சமாக 2 விக்கெட்களை கைப்பற்றினார். இந்த ODI தொடரில் மொத்தம் 3 போட்டிகள் நடைபெற உள்ளன.
Sorry, no posts matched your criteria.