News January 11, 2025

மண்ணுக்குள் புதைந்திருக்கும் தமிழரின் பாரம்பரியம்

image

விருதுநகர் வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 3ஆம் கட்ட அகழாய்வில், அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையலின் பகுதி, பச்சை கண்ணாடி மணி கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அணிகலன்கள், சுடுமண் உருவ பொம்மை, வட்டச் சில்லு, தங்கமணிகள் என 3,000-க்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளன. 5000 ஆண்டுகளாக மண்ணுக்குள் புதைந்திருக்கும் தமிழரின் அழகுணர்வு, கலாசாரத்தை இவை பறைசாற்றுகின்றன.

News January 11, 2025

6 மாதங்களாக பிரிட்ஜில் இருந்த இளம்பெண் சடலம்

image

லிவ் இன் பார்ட்னரை கொன்று 6 மாதங்களாக பிரிட்ஜில் மறைத்து வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தூரில் நடந்த இச்சம்பவத்தில் சிக்கிய சஞ்சய் படிதர், ஏற்கனவே 2 குழந்தைகளுக்கு தந்தையான தன்னை திருமணம் செய்யுமாறு பிரகதி வற்புறுத்தியதால் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். கடந்த ஜூன் மாதமே கொன்றுவிட்டு வாடகை வீட்டை காலி செய்த போதிலும், மின்சார துண்டிப்பால் இந்தக் கொலை அம்பலமாகியுள்ளது.

News January 11, 2025

புர்ஜ் கலிஃபாவின் ஓனர் யார்னு தெரியுமா?

image

பலரும் இதனை அரசு கட்டடம் என நினைக்கிறார்கள். ஆனால், புர்ஜ் கலிஃபா தனியாருடையது. UAEயின் புகழ் பெற்ற Emaar Propertiesக்கு சொந்தமானது. இந்த நிறுவனத்தின் தலைவர் முகமது அலப்பர் என்பவர். இருப்பினும், இதன் உருவாக்கம் Samsung C&T (South Korea), BESIX (Belgium), Arabtec (UAE) ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியாகும். 828 மீட்டர் உயரம், 163 அடுக்குகளை கொண்ட புர்ஜ் கலிஃபா 2010ல் கட்டி முடிக்கப்பட்டது.

News January 11, 2025

பிப்.1 முதல் ஆட்டோ கட்டணம் உயர்வு

image

TNஇல் பிப்.1ஆம் தேதி முதல் 1.8 கிமீ-க்கு ₹50, கூடுதலாக ஒரு கி.மீ-க்கு ₹18, வெயிட்டிங் சார்ஜ் நிமிடத்திற்கு ₹1.5 என்ற வகையில் கட்டணம் வசூலிக்கப்படும் என ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்தால் மாநிலம் முழுவதும் ப்ரீபெய்ட் ஆட்டோக்களில் ₹50 வரை கூடுதலாக வசூலிக்கப்படும் என சொல்லப்படுகிறது. ஆட்டோக்கள் கட்டணம் உயர்வது குறித்து உங்க கருத்து என்ன? கமெண்ட்ல சொல்லுங்க..

News January 11, 2025

ஆளுநரின் செயலில் அரசியல் உள்நோக்கம்: CM ஸ்டாலின்

image

கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளால் உருவான சட்டப்பேரவையில் அபத்தமான காரணங்களைக் கூறி ஆளுநர், தனது உரையை நிராகரிப்பதில் அரசியல் உள்நோக்கம் உள்ளதாக CM ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஆளுநரால் ஜீரணிக்க முடியவில்லை எனச் சாடிய அவர், நான் செல்லும் இடமெல்லாம் மக்கள் அளிக்கும் உற்சாக வரவேற்பே அதற்குச் சான்று என்றும் கூறியுள்ளார்.

News January 11, 2025

சட்டப்பேரவையில் சவால்.. ஆதாரம் கொடுத்த முதல்வர்!

image

பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கின் ஆதாரங்களை CM ஸ்டாலின், சபாநாயகரிடம் வழங்கினார். சட்டப்பேரவையில் நேற்று, இந்த வழக்கில் புகார் அளிக்கப்பட்ட 24 மணிநேரத்தில் 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாக இபிஎஸ் பேசினார். அப்போது, குறுக்கிட்ட ஸ்டாலின், 12 நாட்களுக்கு பிறகே FIR பதிவு செய்யப்பட்டதாகவும், நான் சொல்வதில் ஏதேனும் தவறு இருந்தால் நீங்கள் சொல்லும் தண்டனையை ஏற்றுக் கொள்வதாகச் சவால் விட்டிருந்தார்.

News January 11, 2025

அமீரை மிரட்டும் தவெகவினர்!

image

விஜய் குறித்து கேள்வி எழுப்பியதற்காக தவெகவினர் தனக்கு மிரட்டல் விடுப்பதாக இயக்குநர் அமீர் குற்றஞ்சாட்டியுள்ளார். கட்சியின் கொள்கைத் தலைவர் பெரியாா் குறித்த சீமானின் தரம் தாழ்ந்த விமர்சனத்தை TVKவும், அதன் தலைவர்களும் வேடிக்கை பார்ப்பதாக சமூகவலைதளத்தில் விமர்சித்திருந்தார். இதனால், தனக்கு மிரட்டல் வருவதாக கூறிய அமீர், ‘தம்பிகளின் மிரட்டலுக்கு அடிபணியும் அண்ணன் நான் இல்லை’ என்றும் பதிவிட்டுள்ளார்.

News January 11, 2025

நாக சைதன்யாவை செல்லமாக மிரட்டிய சமந்தா!

image

நாக சைதன்யா – சமந்தா நினைவுகளை #ChaiSam இல் ரசிகர்கள் மீண்டும் அசைபோடுகின்றனர். சமந்தா உடனான காதலை நாக சைதன்யா அவரது வீட்டில் சொல்லப் பயந்தபோது ‘நீ சொல்லாவிட்டால் உன் கையில் ராக்கி கட்டி அண்ணனாக்கிவிடுவேன்’ என சமந்தா செல்லமாக மிரட்டினாராம். இதனை நினைவுகூறும் ரசிகர்கள் இவ்வளவு நல்ல ஜோடி பிரிந்துவிட்டதே என தங்களது ஆதங்கத்தைப் பதிவிட்டு வருகின்றனர். உங்க கமெண்ட் என்ன?

News January 11, 2025

மலேசியா வரை தமிழர்களின் வீரம்

image

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை மலேசியாவில் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஏற்கெனவே இலங்கையில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்ட நிலையில், மலேசியாவிலும் மே மாதம் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என அந்நாட்டு MP சரவணன் தெரிவித்துள்ளார். இதற்காக, அங்குள்ள காளைகள் தயார் செய்யப்படுகின்றன. ஒரு காலத்தில் மலேசியா வரை ஆட்சி செய்தவன் தமிழன். இன்றும் நம் புகழ் பரவட்டும்.

News January 11, 2025

விமானக் கட்டணம் பல மடங்கு உயர்வு

image

பொங்கல் விடுமுறையையொட்டி விமானக் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ரயில் கட்டணம் போல அல்லாமல், விமானக் கட்டணங்கள் தேவைக்கேற்ப மாறுபவை. ஆகையால், இன்றும் நாளையும் சென்னையில் இருந்து மதுரை செல்ல ₹18,000, சென்னை – கோவை ₹12,000, சென்னை – தூத்துக்குடி ₹24,000 என உயர்ந்துள்ளது. வெளி மாநிலங்களுக்கு செல்வதற்கான டிக்கெட் கட்டணமும் உயர்ந்துள்ளது.

error: Content is protected !!