News January 12, 2025

CM-க்கு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் உருக்கமான கடிதம்

image

பெண்களை பின்தாெடர்ந்தால் 5 ஆண்டு ஜெயில் என அண்மையில் சட்டப்பேரவையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதை சுட்டிக்காட்டி, முதல்வர் ஸ்டாலினுக்கு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் உருக்கமாக கடிதம் எழுதியுள்ளது. அதில் ஆண்களுக்கு எதிராக பெண்கள் பொய் புகார் அளிக்க வாய்ப்புள்ளது. அதுபோல புகார் அளிக்கும் பெண்ணுக்கு 5 ஆண்டு ஜெயில் அளிக்கும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும் என கோரியுள்ளது.

News January 12, 2025

திமுகவிற்கு மஜக, மமக ஆதரவு

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் INDIA கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுகவிற்கு மஜக ஆதரவு தெரிவிப்பதாக அக்கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார். மமக தலைவர் ஜவாஹிருல்லாவும் ஆதரவு தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, திமுக வெற்றி பெற தவாக பாடுபடும் என வேல்முருகன் அறிவித்திருந்தார். திமுகவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு காங்கிரஸும் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியிருந்தது.

News January 12, 2025

தோல்வியால் துவண்டு உள்ளீர்களா…இதை படியுங்கள்

image

விவேகானந்தரின் பிறந்தநாளில் இவற்றை நினைவு கூர்வோம். “தோல்வியைக் கண்டு ஏமாறாதே. வெற்றி முடிவல்ல, தோல்வி இறுதிப் படி அல்ல”. மற்றொன்று “ஒரு யோசனையை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த ஒரு யோசனையை வாழ்க்கை ஆக்குங்கள், அதை நினைத்துப் பாருங்கள், கனவு காணுங்கள், அந்த எண்ணத்தில் வாழுங்கள். உடலின் ஒவ்வொரு பகுதியும் அந்த எண்ணத்தால் நிறைந்திருக்கட்டும், மற்ற யோசனைகளை விட்டுவிடுங்கள். இதுவே வெற்றிக்கான வழி ”.

News January 12, 2025

இந்தியப் பொருளாதாரம் சற்று பலவீனம் அடையும்: IMF

image

2025இல் இந்தியாவின் பொருளாதாரம் “சற்று பலவீனமாக” இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) கணித்துள்ளது. இது குறித்து பேசிய IMF நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, உலகப் பொருளாதாரம் நிலைத்தன்மையுடன் இருக்கும் நிலையில், இந்திய பொருளாதாரம் சற்று பலவீனமடையும். பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சிகளில், புதிய பாதிப்புகள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் எனக் கூறியுள்ளார்.

News January 12, 2025

வேல்முருகனுக்கு அதிகாரிகள் இட்ட உத்தரவு!

image

தமிழக அரசு ஆளுநருடன் பகைத்துக் கொள்ளாமல் இருப்பதற்கு சில முயற்சிகளை எடுத்து வருவதாக தகவல் கிடைத்துள்ளதாக தவாக தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து பேசிய அவர், “நான் ஏதாவது செய்தால், திமுக அரசின் சாதனை பட்டியலைக் கொண்ட உரையை வாசிக்காமல் சென்றுவிடுவார் என அதிகாரிகள் நினைத்துள்ளனர். அதனால் ஆளுநர் வரும்போது, பிரச்னை செய்யக்கூடாது என உத்தரவிட்டு இருக்கின்றனர்” என்றார்.

News January 12, 2025

ஜன.23 முதல் நூற்றாண்டு அரசுப் பள்ளிகளில் விழா

image

TNல் நூற்றாண்டைக் கடந்த பள்ளிகளில் விழா நடத்துமாறு மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். 2,238 அரசுப் பள்ளிகள் 100 ஆண்டுகளைக் கடந்து நம்பிக்கைக்கு உரியவையாக விளங்குகின்றன. இப்பள்ளிகளில் நூற்றாண்டைக் கொண்டாடுவதன் மூலம் மக்களிடையே அரசுப் பள்ளிகள் மீதான நம்பிக்கை வலுப்பெறும் என்று கூறிய அவர், வரும் 23ம் தேதி முதல் பள்ளிகளில் விழா நடத்த அறிவுறுத்தியுள்ளார்.

News January 12, 2025

ஈரோட்டில் நாதக வேட்பாளர் யார்? பொங்கலில் அறிவிப்பு

image

ஈரோடு கிழக்குத் தொகுதியில் திமுக தனது வேட்பாளரை அறிவித்து விட்டது. அதிமுக, தேமுதிக ஆகியன புறக்கணிப்பதாக தெரிவித்து விட்டன. தேர்தலில் போட்டியிடுவதாக நாதக தெரிவித்துள்ளது. ஆனால் வேட்பாளர் குறித்து எப்போது அறிவிப்பு வெளியாகும் என சீமான் தெரிவிக்காமல் இருந்தார். இந்நிலையில், வளசரவாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொங்கல் அன்று வேட்பாளரை அறிவிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

News January 12, 2025

புதிய கேப்டனை தேடுங்கள்: BCCIக்கு சொன்ன ரோஹித்!!

image

BGT தொடரை அடுத்து கடும் விமர்சனத்திற்கு உள்ளான ரோஹித் ஷர்மா, BCCI உடன் நடைபெற்ற மீட்டிங்கில் அடுத்த கேப்டனை தேடும் படி கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கேப்டனாக தொடர சில காலங்கள் அதாவது சாம்பியன்ஸ் ட்ராபி வரை அவர் கேட்டதாகவும் கூறப்படுகிறது. அடுத்த டெஸ்ட் கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. அடுத்து யார் இந்திய அணியின் கேப்டனாக வேண்டும். கமெண்ட்ல சொல்லுங்க.

News January 12, 2025

டிரம்பின் பதவியேற்பு விழாவில் யார் பங்கேற்கிறார்கள்?

image

டொனால்ட் டிரம்பின் பதவியேற்பு விழாவில் இந்தியாவில் இருந்து கலந்து கொள்பவர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் ஜெய்சங்கரின் பெயரை மத்திய அரசு இறுதி செய்துள்ளது. அவர் இந்திய குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்துவார். இந்த நிகழ்வில், இந்தியத் தொழிலதிபர்கள் & பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். ஜன. 20இல் டிரம்ப் 2ஆவது முறையாக அதிபராக வெள்ளை மாளிகை அரியணையில் அமரவுள்ளார்.

News January 12, 2025

போகி அன்று எதை எரிக்கலாம்? எதை எரிக்கக்கூடாது?

image

பழையன கழிதலும் புதியன புகுதலமே போகி. பல இடங்களில் பிளாஸ்டிக், டயர் போன்றவற்றை கொளுத்தி, காற்று மாசுவை அதிகரிக்கிறார்கள். பழைய முறம், உடைந்து போன மரக்கூடை, கிழிந்து போன உடைகள், கோணிப்பை, துடைப்பம் ஆகியவற்றை எரிக்கலாம். மேலும், இவற்றை தீயில் இட்டு மனதில் இருக்கும் தீய எண்ணத்தை கைவிடுகிறேன் என முடிவு செய்து கொள்ளுங்கள். பிரம்ம முகூர்த்தத்தில் இருந்து காலை 5.30 மணிக்குள் பொருட்களை எரிக்கலாம்.

error: Content is protected !!