India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உலக அளவில் மதுபானங்களால் வரும் வருவாயில், இந்தியா 6ஆவது இடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிலும், இந்தியாவில் தயாரிக்கப்படும் சில வகை மதுபானங்களுக்கு சர்வதேச மார்க்கெட்டில் தனி மவுசே உள்ளது. குறிப்பாக, MC DOWELLS விஸ்கிக்கு உலக அரங்கில் தனி மார்க்கெட்டே உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு அடுத்த இடத்தில் INDRI SINGLE MALT விஸ்கி உள்ளதாம். தூள் கிளப்புறாங்களே..
தமிழறிஞரும் பேராசிரியருமான சாலமன் பாப்பையா அவர்களது மனைவி ஜெயபாய்(86) அம்மையார் காலமானார். மதுரையில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட உடலுக்கு, தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்பட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
மனித இனம் அழிந்த பிறகு, எந்த உயிரினம் உலகை ஆளும் என்பதை அறிந்தால் ஷாக் ஆகிவிடுவீர்கள். ஆக்ஸ்போர்டு பல்கலை., விஞ்ஞானிகள் நடத்திய ஆராய்ச்சியில் ஆக்டோபஸ்கள்தான் அடுத்து உலகை ஆளக்கூடும் எனக் கணித்துள்ளனர். அதீத நுண்ணறிவு, தகவமைக்கும் தன்மை, பிரச்னைகளை தீர்க்கும் உத்தி ஆகியவற்றில் ஆக்டோபஸ்தான் சிறந்து விளங்குகிறதாம். ஆக்டோபஸ்கள் பரிணாம வளர்ச்சி அடைந்தால், அதுதான் ‘கிங்’ என்கின்றனர் விஞ்ஞானிகள்.
பிக்பாஸ் சீசன் 8 இறுதி வாரத்தை நெருங்கியுள்ள நிலையில், இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்துள்ளது. அருண் பிரசாத் நேற்று வெளியேற்றப்பட்டார். இன்று தீபக் வெளியேறுவார் எனக் கூறப்படுகிறது. டபுள் எவிக்ஷனுக்கு பிறகு, ரயான், செளந்தர்யா, ஜாக்குலின், பவித்ரா, முத்துக்குமரன், விஷால் ஆகிய 6 பேர் இறுதிச் சுற்றுக்கு செல்கின்றனர். ஜன.19 அன்று ஃபைனல் நடக்கவுள்ளது. யார் டைட்டில் ஜெயிப்பாங்கனு நீங்க நினைக்கிறீங்க?
டெல்லியில் ஆட்சிக்கு வந்தால் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதம் ரூ.8,500 அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. இதுகுறித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட், தனியார் நிறுவனங்கள் மூலம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவற்றின் மூலம் இத்தாெகையை அரசு வழங்கும் என்று தெரிவித்தார். இதேபோல் அண்மையில் மேலும் 2 திட்டங்கள் முன்னறிவிக்கப்பட்டன.
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டித் தொடர் வரும் மார்ச் 23ஆம் தேதி தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய அதன் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, 18-ஆவது ஐபிஎல் போட்டித் தொடர் தொடங்கும் தேதியை வெளியிட்டார்.
உ.பி. கும்பமேளாவில் 3 வயதான சாமி, ஷ்ரவன் புரி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். வயதுக்கு மீறிய பக்குவத்துடன் காணப்படும் ஷ்ரவன், 3 மாத குழந்தையாக இருந்தபோது ஹரியானா ஆசிரமத்துக்கு அவரது பெற்றோரால் தானமாக வழங்கப்பட்டுள்ளார். அப்போதில் இருந்து ஆசிரம கவனிப்பில் வளர்கிறவர், பள்ளியில் சேர்க்கப்பட்டு இருந்தாலும் இந்த வயதிலேயே ஆன்மிக கல்வியை பெற்றுவருகிறாராம். ரியல் லைப் ‘நான் கடவுள்’!
ஜனவரி 15 திருவள்ளுவர் தினம், ஜனவரி 26 குடியரசு தினத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன், அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் உத்தரவு அனுப்பியுள்ளார். அதில் அவர், 15, 26ஆம் தேதிகளில் டாஸ்மாக் கடைகளை உத்தரவை மீறி திறக்கக் கூடாது. அதையும் மீறி கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக புறக்கணித்ததால், DMK, NTK இடையே நேரடி போட்டி உருவாகியுள்ளது. கடந்த இடைத்தேர்தலில் மறைந்த MLA ஈவிகேஎஸ் 1,10,556 வாக்குகள் பெற்று 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக 43,981, நாதக 7,984, தேமுதிக 1,115 வாக்குகள் பெற்றன. இம்முறை ADMK, DMDK, BJP களமிறங்கவில்லை. அக்கட்சிகளின் வாக்குகள் நாதகவுக்கு செல்லுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பிஜாப்பூர் மாவட்டம் இந்திராவதி தேசிய பூங்கா அருகே பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த நக்சல்களுடன் துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இதில் 3 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து தானியங்கி துப்பாக்கி உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
Sorry, no posts matched your criteria.