India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியாவில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள நகரங்கள் பட்டியலில், கொல்கத்தா முதலிடம் பிடித்துள்ளது. இங்கு 10 km தூரத்தை கடக்க சராசரியாக 34.33 mins ஆகிறது. பெங்களூரு -34.10 mins, புனே -33.22 mins அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 5-வது இடத்தில் உள்ள சென்னையில், 30 mins ஆகிறதாம். உலக அளவில் கொலம்பியாவின் Barranquilla (36 Mins) முதலிடத்தில் உள்ளது. கொல்கத்தா, பெங்களூரு, புனே அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
உங்கள் மனைவி, உங்கள் மீது கோபத்தில் இருப்பதை பின்வரும் அறிகுறிகள் உணர்த்தும்: 1) வழக்கத்துக்கு மாறான அமைதி 2) அடிக்கடி உங்களை விமர்சிப்பது 3) அடிக்கடி எரிச்சல் / கோபம் 4) தலைவலி, தசைப்பிடிப்பு அறிகுறிகள் 5) வழக்கமாக செய்துகொண்டிருந்த விஷயங்களில் இருந்து விலகுவது 6) தாம்பத்ய உறவை தவிர்ப்பது 7) குறைவாக கடமைக்காக பேசுவது, இடித்துப் பேசுவது என பேச்சில் அதிருப்தி.
பிப்.11ஆம் தேதி சனி பகவானின் ராசியான கும்பத்தில் புதன் நுழைவதால், 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போவதாக ஜோதிடர்கள் கணித்துள்ளனர். 1) மிதுனம்: ஆடம்பர வாழ்க்கை தேடி வரும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். நிதிநிலை உயரும். 2) சிம்மம்: தொழிலில் வெற்றி உண்டு. திறமையால் முன்னேறும் நேரம் இது. திடீர் பண வரவு வாழ்வை மாற்றும். 3) துலாம்: முதலீட்டில் பெரிய லாபம் வரும். பணப்பிரச்னை நீங்கும்.
அஜித்குமாரின் அணி, துபாய் கார் ரேஸில் வென்றதற்கு பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் சிவகார்த்திகேயன், ‘AK சார், உங்க விடாமுயற்சிக்கு பெரிய வாழ்த்துகள். பெருமிதமான தருணம் இது’ என வாழ்த்தியுள்ளார். Dy CM உதயநிதி ஸ்டாலின், ‘மனம்நிறைந்த வாழ்த்துகள். தேசத்துக்கும் தமிழகத்துக்கும் பெருமை சேர்க்கும் உங்கள் வெற்றி தொடரட்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.
பறவையால் விமான விபத்து ஏற்படும். அது எப்படி முதலையால் எனக் கேட்கிறீர்களா? ஆம். காங்கோவில் 2010ஆம் ஆண்டு ஒரு விமானத்தில் முதலை ஒன்று ஓடுவதை பயணிகள் பார்த்துள்ளனர். பயந்துபோன அவர்கள், விமானத்தின் பின்பகுதிக்கு ஓடியுள்ளனர். இதனால் விமானம் பேலன்ஸ் தவறி, தரையில் மோதி வெடித்தது. இதில் 21 பயணிகள் உயிரிழந்தனர். ஆனால், அந்த முதலைக்கு ஒன்றும் ஆகவில்லை. விசாரணையில், அது கடத்தி வரப்பட்ட முதலை என தெரியவந்தது.
யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங்கின் சமீபத்திய பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறுகையில், கபில்தேவ் இந்திய டீமுக்கு கேப்டனான போது, என்னை டீமிலிருந்து வெளியேற்றினார். அன்று ஆத்திரத்தில் கபிலின் வீட்டுக்கு துப்பாக்கியுடன் சென்றேன். வெளியே வந்த கபிலிடம், உன் தலையிலேயே சுட்டிருப்பேன். ஆனால், உன் அம்மாவுக்காக உன்னை விடுகிறேன் எனக் கூறிவிட்டு வந்தேன் என யோக்ராஜ் சிங் கூறியுள்ளார்.
நாதகவில் இருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது சேலம் மாநகர மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் அழகரசன் தலைமையில், வணிகர் பாசறை இணை செயலாளர் வசந்தகுமார், சேலம் மேற்கு தொகுதி பொறுப்பாளர் பாஸ்கரன் உள்பட 100க்கும் மேற்பட்டோர் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகியுள்ளனர். இது சேலத்தில் நாதகவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. தொடர்ந்து 5 வாரங்களாக அன்னிய செலாவணி கையிருப்பு சரிந்து வருகிறது. கடந்த 3ஆம் தேதி நிலவரப்படி, அது ரூ.54.64 லட்சம் கோடியாக வீழ்ச்சியடைந்துள்ளது. அதாவது, முந்தைய வார நிலவரத்துடன் ஒப்பிடுகையில் ரூ.49,131 ஆயிரம் காேடி சரிவடைந்துள்ளது. இது 10 மாதங்களில் இல்லாத மிகப்பெரிய வீழ்ச்சியாக கருதப்படுகிறது.
முதலில் தேசிய கீதம் பாடப்படாததால் சட்டமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே ஆளுநர் ரவி வெளியேறி பரபரப்பை ஏற்படுத்தினார். முதலில் தேசிய கீதமும், பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், திருவள்ளூரில் உள்ள மேல் அவுரிவாக்கம் கிராமத்தில் ஆளுநர் ரவி கலந்துகொண்ட பொங்கல் விழாவில் முதலில் தேசிய கீதமும், பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது.
அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 116 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. ராஜ்கோட்டில் இன்று நடைபெற்ற போட்டியில், முதலில் பேட் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 370 ரன்களை குவித்தது. ஜேமியா ரொட்ரிக்ஸ் 102 ரன்கள் விளாசினார். இதையடுத்து விளையாடிய அயர்லாந்து அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 254 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
Sorry, no posts matched your criteria.