India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உ.பியில் மகா கும்பமேளா இன்று தொடங்கி பிப்.26 வரை நடைபெற உள்ளது. 45 கோடி பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக 98 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 40,000 போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 1,500 CCTV, AI கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கூட்டத்தில் தொலைந்து போனவர்களை மீட்க Facial Recognition டெக்னாலஜி பயன்படுத்தப்பட உள்ளது.
நடிகர் ரானா டகுபதி மற்றும் அவரது அப்பா உள்ளிட்ட குடும்பத்தினர் மீது ஹைதராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தங்களுக்கு சொந்தமான ஹோட்டலை நந்தகுமார் என்பவர் குத்தகைக்கு விட்ட நிலையில், அதை கடந்த ஆண்டு சட்டவிரோதமாக இடித்து தள்ளியதாக கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோர்ட் உத்தரவிற்கு எதிராக செயல்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
CV Genius என்ற ஆன்லைன் ரெஸ்யூம் தளம் GEN Z ஊழியர்கள் மத்தியில் ஒரு சர்வே நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, தற்போது 27 வயதிற்குள் இருக்கும் ஊழியர்கள், வேலை கிடைத்ததும் முதல் நாள் பணிக்கு செல்லமாட்டார்கள் என தெரியவந்துள்ளது. எத்தனையோ நிறுவனங்களில் தேடி அலைந்து, பல நேர்காணல்களை எதிர்கொண்டு, வேலை உறுதி என சொல்ல பல நாள்கள் காத்திருந்த வெறுப்பை காட்டுவதற்காக அவர்கள் இப்படி செய்கிறார்களாம்.
*உங்கள் அரசின் விவகாரங்களில் அக்கறை காட்டவில்லை என்றால், முட்டாள்களின் ஆட்சியின் கீழ் வாழ நேரிடும். *உண்மையைப் பேசுபவனை விட வேறு யாரும் அதிகமாக வெறுக்கப்படுவதில்லை. *மனித நடத்தை மூன்று முக்கிய மூலங்களிலிருந்து ஊற்றெடுக்கின்றது: ஆசை, உணர்ச்சி மற்றும் அறிவு. *ஒரே நேரத்தில் மிகுந்த செல்வந்தராகவும் நல்லவராகவும் இருப்பது சாத்தியமில்லை. *வறுமை வருவது செல்வம் குறைவதால் அல்ல, ஆசைகள் அதிகரிப்பதால் தான்.
சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் விழாவில் பேசிய பிரதமர் மோடி, விவேகானந்தர் இளைஞர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கை எனக்கும் உள்ளது. இந்திய இளைஞர்களின் பலத்தால், வல்லரசாகும் கனவு நனவாகக் கூடியதே. ஒரே கொள்கைகளால் நமது முடிவுகள் தீர்மானிக்கப்பட்டால் 2047-க்குள் நாம் வல்லரசு ஆவதை யாராலும் தடுக்க முடியாது எனத் தெரிவித்தார். 3000 இளைஞர்கள் மத்தியில் ‘நமது பாரதம்’ என்கிற திட்டத்தை குறித்து அவர் பேசினார்.
18ஆவது ஐபிஎல் சீசன் மார்ச் 21ஆம் தேதி தொடங்கும் நிலையில், இறுதி போட்டி மே 25ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மகளிர் ப்ரீமியர் லீக் நடத்தப்படும் தேதிகள் குறித்து இறுதி கட்ட ஆலோசனைகள் நடந்து வருவதாக BCCI துணை தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். மேலும், சாம்பியன்ஸ் டிராபிக்கு வீரர்களை தேர்வு செய்வது குறித்த ஆலோசனை கூட்டம், வரும் 18-19ஆம் தேதிகளில் நடைபெற உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இயக்குநர் பாலாவை பற்றி பிரபல எழுத்தாளர் அஜயன் பாலா சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அவர் கூறுகையில், “ஒருமுறை ராமேஸ்வரத்தில் ஒரு மாற்றுத்திறனாளி பிச்சைக்காரரை பார்த்த பாலா, அவரை குளிக்க வைத்து, புதுத்துணி வாங்கிக் கொடுத்துள்ளார். பின்னர், கோயிலில் தனக்கான முதல் மரியாதையை அந்த பிச்சைக்காரருக்கு கொடுக்க வைத்து, பரிவட்டம் கட்ட வைத்து அர்ச்சகர்களை அதிர வைத்தார். அவன்தான் பாலா” எனக் கூறினார்.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: பிறனில் விழையாமை ▶குறள் எண்: 147 ▶குறள்: அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள் பெண்மை நயவா தவன். ▶பொருள்: பிறன் மனைவியிடம் பெண்மை இன்பத்தை நாடிச் செல்லாதவனே அறவழியில் இல்வாழ்க்கை மேற்கொண்டவன் எனப்படுவான்.
கார் ரேஸில் அஜித் டீம் 3ஆவது இடத்தை பிடித்துள்ளதை அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இப்படி உற்சாகத்தில் அவர்கள் துள்ளும் நிலையில், கோவை போலீசார் ஒரு மீம்-ஐ போஸ்ட் செய்துள்ளனர். அதில், 7G ரெயின்போ காலனி படத்தில் வரும் அப்பா – மகன் சீன் ஃபோட்டோவை போட்டு, “திறமை இருந்தா அவர மாதிரி களத்துல ஜெயிக்கணும். அத விட்டுட்டு ரோட்ல சாகசத்தை காட்றேனு கேஸ் வாங்கிட்டு கிடக்காத” என கூறப்பட்டுள்ளது.
பஞ்சாப் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. நிர்வாகம் தன் மீது நம்பிக்கை வைத்தது பெருமையாக இருப்பதாகவும், பஞ்சாப் அணிக்கு முதல் கோப்பையை வென்று தந்து அந்த நம்பிக்கையை திரும்ப செலுத்துவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த சீசனில் கொல்கத்தா அணிக்காக கோப்பையை வென்று கொடுத்த ஸ்ரேயாஸை, பஞ்சாப் அணி ₹26.75 கோடிக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.