India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காலையில் எழுந்ததும் அனைவரும் தேடுவது போனை தான். படுக்கையில் படுத்தபடியே போனை நோண்டுகிறோம். கண் விழித்ததும் போனை நோண்டுவது கண்ணிற்கு சோர்வை கொடுக்கும். படுகையில் படுத்தபடியே போனை நோண்டுவதால் உடல் சோர்ந்து போகும். இதனை கொஞ்சம் மாற்றுங்கள். கண் விழித்ததுமே படுக்கையை விட்டு வெளியேறி உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுங்கள். 1 மணி நேரமாவது போனை தொடாதீர்கள். உடலும், மனதும் புத்துணர்ச்சியும் பெறும். SHARE IT
‘வாடிவாசல்’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2020ஆம் ஆண்டே தொடங்கப்பட்ட இப்படத்தின் ஷூட்டிங், வெற்றிமாறன் இயக்கிய விடுதலை 1, 2 படங்களால் தாமதமானது. இந்நிலையில், இந்த ஆண்டு இறுதியில் மீண்டும் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. சி.சு.செல்லப்பா எழுதிய நாவலை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதையை வெற்றிமாறன் எழுதியுள்ளார்.
2 மாவட்டங்களில் பள்ளி- கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி கடலூர், உத்தரகோசமங்கை ஆருத்ரா தரிசனத்தையொட்டி ராமநாதபுரம் ஆகிய 2 மாவட்டங்களில் இன்று (ஜன.13) பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பொங்கலுக்கு இந்த 2 மாவட்டங்களுக்கு மட்டும் ஒருநாள் கூடுதல் விடுமுறை வருகிறது.
மத்திய அரசின் சைனிக் பள்ளிகளில் 6, 9ஆம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். கடந்த டிச.24ஆம் தேதி முதல் விண்ணப்பப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. பிப்ரவரியில் தேர்வு நடைபெற உள்ளது. https://exams.nta.ac.in/AISSEE என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக SC/ST பிரிவினர் ₹650, பொது பிரிவினர் ₹800 செலுத்த வேண்டும்.
பணமோசடி வழக்கில் கைதாகி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மோசடி மன்னன் சுகேஷ், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் கிடைத்த ₹22,410 கோடி வருமானத்திற்கு வரியாக ₹7,460 கோடியை கட்டத் தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், பிரதமர் மோடியின் மிகச்சிறந்த தலைமையின் கீழ் தற்போது பெருமைமிக்க இந்தியனாக இருப்பதாகவும் ஐஸ் வைத்துள்ளார்.
பண்டைய தமிழர்கள் தை முதல் நாளையே புத்தாண்டாக கொண்டாடி வந்தனர். ஆண்டின் கடைசி நாளில், அந்த ஆண்டு முழுவதும் நடந்த நிகழ்வுகளை நினைவுகூர்ந்து தவறுகளை திருத்திக் கொள்ளவும், நல்லவற்றை தொடரவும், அதாவது ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என உறுதி ஏற்பார்கள். அதுவே ‘போக்கி’ பண்டிகை என்றாகி தற்போது போகி என மருவியுள்ளது. தை மாதத்தில் தனது பயணத்தை மாற்றிக் கொள்ள இருக்கும் சூரியனை வரவேற்க போகியை கொண்டாடினர்.
ஆப்கானிஸ்தானில் பெண்களை மனிதர்களாக கூட தாலிபன் அரசு கருதவில்லை என நோபல் பரிசு பெற்ற மலாலா விமர்சித்துள்ளார். பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மத நம்பிக்கைகளின் அடிப்படையில் நியாயப்படுத்துவதாகவும், ஆனால், உண்மையில் இஸ்லாமில் இதுபோன்ற பாகுபாடுகள் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பொது வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தில் இருந்தும் பெண்களை முற்றிலும் நீக்க விரும்புவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பெரியார் குறித்து தவறாக பேசுபவர்களின் பிறப்பை சந்தேகப்படுவதாக அமைச்சர் துரைமுருகன் கூறியதற்கு, தங்கள் பிறப்பு நல்ல பிறப்புதான் என அண்ணாமலை பதிலளித்துள்ளார். பெரியார் சில மனிதர்கள் பற்றி பேசியதை, 1962ஆம் ஆண்டு வெளியான முரசொலியில் படித்து தெரிந்து கொள்ளவும் அவர் கூறியுள்ளார். மேலும், ED தனது வீட்டிற்கு கடப்பாறையை எடுத்துக் கொண்டு ரெய்டுக்கு வரவில்லை எனவும் சாடியுள்ளார்.
டென்மார்க் நாட்டின் தன்னாட்சி பிராந்தியமான கிரீன்லாந்தை அமெரிக்கா வாங்க விரும்புவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆர்க்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையே அமைந்துள்ள இந்த தீவு அமெரிக்காவின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. கடந்த 2019 ஆண்டிலேயே இந்த தீவை வாங்க வேண்டும் என டிரம்ப் கூறியிருந்தார். இதன் விலை $12.5 முதல் $77 பில்லியன் டாலர் வரை போகும் என கூறப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கான PD Champions Trophy 2025 லீக் ஆட்டத்தில், PAKஐ 109 ரன்கள் வித்தியாசத்தில் IND அணி வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த IND, நிர்ணயிக்கப்பட்ட 19 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக நிகில் 59 ரன்களை எடுத்தார். அடுத்து களமிறங்கிய PAK 51 ரன்களில் சுருண்டது. இந்த தொடரில் ரோஹித் ஷர்மா இந்திய அணியின் ஃபீல்டிங் கோச்சாக செயல்பட்டு வருகிறார்.
Sorry, no posts matched your criteria.