News July 10, 2025

BREAKING: காலையில் குலுங்கிய தலைநகரம்!

image

தலைநகர் டெல்லியில் காலை சரியாக 9.04 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஹரியானாவின் ரோத்தக் என்ற பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்ட 4.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் டெல்லி, குருகிராம், நொய்டா, காசியாபாத், மீரட் போன்ற பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளன. மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், பெரிய சேதங்கள் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.

News July 10, 2025

சோழர் காலத்திலும்.. இபிஎஸ்-க்கு சேகர்பாபு பதிலடி

image

இந்து சமய அறநிலையத்துறை (HRCE) கல்லூரிகளில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்களே பயில்வதாக சேகர்பாபு கூறியுள்ளார். பக்தர்களின் காணிக்கையைக் கொண்டு கல்லூரிகள் கட்டுவதா என இபிஎஸ் கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில், இதற்கு பதிலளித்த அமைச்சர், சோழர்கள் காலத்தில் கூட கோயில் சார்பில் கல்விச்சாலைகள் இருந்ததாக தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் 4 HRCE கல்லூரிகள் தொடங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

News July 10, 2025

தமிழகத்தில் 4,000 காலிப்பணியிடங்கள்

image

அந்தந்த மாவட்ட சுகாதார சங்கங்கள் மூலம் 2,500 செவிலியர்கள், 1,500 மருந்தாளுநர்கள் & லேப் டெக்னீசியன்களை நியமிக்க தேசிய நலவாழ்வு குழுமம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, இதனை MRB நிரப்பி வந்த நிலையில், இம்முறை மாற்றப்பட்டுள்ளது. இப்பணியானது தற்காலிகமானது. மேலும், 11 மாத கால ஒப்பந்தத்தில் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. எனவே, இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் மாவட்டந்தோறும் வெளியாகும்.

News July 10, 2025

‘றெக்க மட்டும் இருந்தா தேவதை மச்சான்’

image

பிரியா பவானி ஷங்கர் மாடர்ன் டிரஸ்ஸில் மயக்கும் போட்டோஷூட் நெட்டிசன்களை கிறங்கடித்துள்ளது. ‘பேசும் பார்வை கண்களின் நயம், பிரியாவின் நிழலில் பொழியும் நயம்’ என கவிதை தான் எழுத தோன்றுகிறது. ‘இவ்வளோ அழகா இருக்குறது ரொம்ப தப்பு மேடம்’ என கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது அவர் ‘டிமான்டி காலனி 3’ படத்தில் நடித்து வருகிறார். உங்களுக்கு பிடிச்ச பிரியா பவானி ஷங்கர் படம் எது?

News July 10, 2025

ஸ்மார்ட்போன்கள் விலை கணிசமாக குறையும்..!

image

செல்போன்களின் விலை குறைய வாய்ப்புள்ளதாக கவுண்டர் பாயிண்ட் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தாண்டின் முதல் 6 மாதங்களில் பல பிராண்டுகளின் செல்போன்கள் தேக்கம் அடைந்துள்ளதாகவும், கையிருப்பைக் குறைக்க பெரும் தள்ளுபடியை வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பண்டிகை நாள்களில் OnePlus, Xiaomi, iQOO, Realme, Oppo, Nothing பிராண்டுகள் தள்ளுபடியை வழங்க வாய்ப்புள்ளதாம்.

News July 10, 2025

அன்புமணி நீக்கம்? தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்

image

பாமகவில் நீடித்துவரும் அப்பா – மகன் மோதலால், தலைவர் பதவி மட்டுமின்றி, கட்சியில் இருந்தே அன்புமணியை நீக்க ராமதாஸ் ஆயத்தமாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பாமக தலைவராக அன்புமணியின் பதவி மே 28 உடன் முடிவடைந்ததால், 29-ல் ராமதாஸ் தலைவராக பொறுப்பேற்றார். இதனை முன்வைத்து, பாமக முழுவதையும் ராமதாஸ் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நோக்கில், தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

News July 10, 2025

இங்கிலாந்து மண்ணில் சாதனை படைத்த இந்திய அணி!

image

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சாதனை படைத்துள்ளது. 4-வது T20-ல் இங்கிலாந்தை 6 விக்கெட் இந்திய அணி வீழ்த்தியுள்ளது. இதன் மூலம், முதல் முறையாக இங்கிலாந்து மண்ணில் T20 தொடரை வென்று சாதித்துள்ளது இந்திய மகளிர் அணி. முதலில் பேட் செய்த இங்கிலாந்து 127 ரன்கள் எடுக்க, இந்திய அணி 17 ஓவர்களில் வெற்றி பெற்றது. 5 போட்டித் தொடரில் இந்தியா 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

News July 10, 2025

Kill bill’ நடிகர் மைக்கேல் மேட்சன் மரணம்: அதிர்ச்சி தகவல்!

image

‘Kill bill’ நடிகர் மைக்கேல் மேட்சன் மரணம் குறித்த காரணம் வெளிவந்து ரசிகர்களை அதிரவைத்துள்ளது. அவருக்கு தொடர்ந்து குடிப்பழக்கம் இருந்ததாகவும், அதனால் உண்டான இருதய பிரச்னையால் தான் அவர் மரணமடைந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக புகழ் பெற்ற ‘Reservoir Dogs’, ‘Kill bill’ போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்த இவர் கடந்த 3ம் தேதி மரணமடைந்த நிலையில், திரைத்துறையினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News July 10, 2025

மீண்டும் நார்மல் போனுக்கு மாறினால்…

image

தற்போது ஆண்ட்ராய்டு ஜெனரேஷனில் எந்த இடத்திற்கு போனாலும், அனைவரது கையிலும் போன்தான். மனிதனின் 6-வது விரல் போலவே மாறிவிட்ட இந்த போன்களை இனி உபயோகிக்ககூடாது, பழைய சாதாரண போன்களை மட்டும் தான் வைத்திருக்க வேண்டும் என்ற நிலைமை வந்தால் எப்படி இருக்கும். லாஜிக் பாக்காதீங்க… அப்படி நடந்தா எப்படி இருக்கும் என்ற மேஜிக்கை மட்டும் யோசித்து பாருங்க. தோன்றுவதை கமெண்ட்டில் பதிவிடவும்….

News July 10, 2025

டிரம்பை கொலை செய்ய ஈரான் திட்டம்?

image

ஈரான்-இஸ்ரேல் இடையேயான போர் 12 நாட்களுக்கு பின் முடிவடைந்தது. தற்போது போர் முடிந்தாலும் ஈரான் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் டிரம்பை கொலை செய்ய அங்கு சிலர் திட்டமிடுவதாக தகவல்கள் உள்ளன. ஃபுளோரிடாவில் உள்ள டிரம்பின் பங்களாவில் வைத்தே கொலை செய்ய டிரோன் போதுமானது என ஈரான் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அதைபோன்று அவரை கொலை செய்ய 27 மில்லியன் டாலர் நிதி திரட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!