India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று சரிவுடன் தொடங்கியுள்ளது. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 200 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 50 புள்ளிகளும் சரிந்தன. இதையடுத்து சென்செக்ஸ் 80,000 புள்ளிகளுக்கும் கீழ் சரிந்து 79,920-ஆக வர்த்தகமாகிறது. நிப்டி 24,284 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. பங்குச்சந்தைகள் கடந்த 7 நாள்களாக உயர்வுடன் காணப்பட்டன. இதனால் சென்செக்ஸ் நேற்று 80,000 புள்ளிகளை கடந்தது.
கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்(IMD) தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அதிகபட்ச வெப்பநிலை 36 – 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரில் 3 நக்சல் தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டனர். பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இதில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டை நடக்கிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 2-வது நாளாக குறைந்துள்ளது. இந்த வாரத்தின் முதல்நாளான திங்கட்கிழமை சவரனுக்கு ₹560 உயர்ந்து ₹72,120-க்கும், செவ்வாய்கிழமை சவரனுக்கு ₹2,200 உயர்ந்து ₹74,320-க்கும் விற்பனையானது. இதனிடையே, நேற்று(ஏப்.23) சவரனுக்கு ₹2,200, <<16198239>>இன்று<<>>(ஏப்.24) சவரனுக்கு ₹80 என சரிவைக் கண்டுள்ளது. வரும் நாள்களில் மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கணித்துள்ளனர்.
அயோத்தி படத்தால் 500 குடும்பங்கள் பயனடைந்துள்ளதாக நடிகர் சசிகுமார் கூறியுள்ளார். விரைவில் வெளியாகவுள்ள டூரிஸ்ட் பேமிலி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய அவர், அயோத்தி படத்தால் விமானத்தில் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்லும் நடைமுறைகள் எளிதானதாகவும், அதற்காக ₹1 லட்சம் வரை மானியம் அளிப்பதாகவும், தனக்கே தெரியாமல் ஒரு நல்லது நடந்துள்ளது என்றும் பெருமைப்பட கூறியுள்ளார்.
நடப்பு IPL-ல் இருந்து காயம் காரணமாக விலகிய CSK Ex கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், நேற்று புதுச்சேரியில் சூப்பர் கிங்ஸ் அகாடமியை திறந்து வைத்தார். பின்னர், CSK சிஇஓ காசி விஸ்வநாதன் மற்றும் ருதுராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ருதுராஜ் கருப்பு கண்ணாடியுடன் ரியாக்ஷனே இல்லாமல் இருந்ததை வடிவேலு காமெடியுடன் சேர்த்து மீம் டெம்ப்ளேட்டாக மாற்றியுள்ளனர் மீம் கிரியேட்டர்ஸ். உங்க ரியாக்ஷன் என்ன?
இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் ஆயுதப் போராட்டம் நடத்தி வருகிறது. ஆனால் லஷ்கர், ஜெய்ஸ் இ முகமது போன்ற பாக். தீவிரவாத அமைப்புகள், காஷ்மீரில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகின்றன. இந்நிலையில், ஹமாஸ், பாக். தீவிரவாதிகள் இடையே நெருக்கம் அதிகரித்துள்ளதாக இந்திய உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன. ஹமாஸ் போராட்டமும், காஷ்மீர் தீவிரவாதமும் ஒன்று என சித்திரிக்கும் வேலை நடப்பதாகவும் கூறியுள்ளன.
பாக். ராணுவ முகாமுக்கு அருகில் உள்ள ஜெய்ஸ் இ முகமது தலைமையகத்துக்கு ஹமாஸ் குழு வந்ததாகவும், காஷ்மீர் தீவிரவாதத்திற்கு ஆதரவாக பயங்கரவாத அமைப்புகள் நடத்திய நிகழ்ச்சியில் ஹமாஸ் குழு கலந்து கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தானுக்கு அக்குழுவினர் வருவது அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. புதிதாக எழும் இந்த சவாலை கவனிக்குமா இந்தியா?
‘I kill you’ என இ-மெயில் வாயிலாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரும், பாஜக முன்னாள் எம்பியுமான கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர் இந்த கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக டெல்லி போலீஸில் கம்பீர் புகாரளித்துள்ளார். முன்னதாக, ‘இதற்கு பொறுப்பானவர்கள் விலை கொடுப்பார்கள். இந்தியா தாக்கும்’ என பஹல்காம் தாக்குதலுக்கு கம்பீர் கண்டனம் தெரிவித்திருந்தார்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.24) சவரனுக்கு ₹80 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹9,005-க்கும், சவரன் ₹72,040-க்கும் விற்பனையாகிறது. நேற்று சவரனுக்கு ₹2,200 குறைந்த நிலையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவைக் கண்டுள்ளது. அதேநேரம் வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ₹111-க்கும், பார் வெள்ளி கிலோ ₹1,11,000-க்கும் விற்பனையாகிறது.
Sorry, no posts matched your criteria.