India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியா – அமெரிக்கா இடையில் சிக்கலான உறவு நீடிப்பதாக அமெரிக்க கருவூலத்துறை செயலாளர் ஸ்காட் பெஸண்ட் தெரிவித்துள்ளார். இருப்பினும் இரு நாட்டு தலைவர்களும் நட்புறவை பேணுவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், உலகின் மிகப்பெரிய ஜனநாயகமான இந்தியாவும், உலகின் மிகப்பெரிய பொருளாதாரமான அமெரிக்காவும் சேர்ந்து பயணித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பிஹார் மைந்தர்கள் தாக்கப்பட்டபோது CM ஸ்டாலின் எங்கே போனார் என பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்டாலினை பிஹாருக்கு அழைத்ததன் மூலம் தேஜஸ்வி யாதவ், காங்கிரஸின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் பிஹாரிகள் குறிவைத்து தாக்கப்படுவதாக பொய் செய்திகள் பரப்பப்பட்டதை நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
நாளை (ஆக.28) அனைத்து பள்ளிகளிலும் மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த வேண்டும் என்றும் போதைப் பொருள்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுமாறும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் இருந்து 100 மீ. சுற்றளவில் புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை இல்லாததை உறுதி செய்யவும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறி விற்றால் போலீஸில் புகாரளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணிக்கு தவெக வரவேண்டும் என ஆர்.பி உதயகுமார் அழைப்பு விடுத்துள்ளார். திமுகவை வீழ்த்த நினைத்தால் விஜய் அதிமுக கூட்டணிக்கு வரவேண்டுமென்றார். திமுகவை வீழ்த்த கூடிய சக்தி அதிமுகவிற்கு தான் உள்ளது என டெல்லியில் உள்ள பாஜகவிற்கு தெரியும் போது, விஜய்க்கு ஏன் தெரியவில்லை என்றார். முதல்வராக வேண்டும் என்பதற்காக தவெக தொண்டர்களின் உழைப்பு, எதிர்பார்ப்பை விஜய் வீணடித்திட வேண்டாம் என்றார்.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு விதமான விநாயகர் சிலைகள் தமிழகம் முழுவதும் வைக்கப்பட்டு அது பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அவை என்னென்ன, எங்கு வைக்கப்பட்டுள்ளன என்பதை மேலே போட்டோக்களில் கொடுத்துள்ளோம். Swipe செய்து பார்க்கவும்.
புதுமண தம்பதியின் படுக்கை அறையில் ரகசிய வீடியோ பதிவு செய்ததோடு, அந்த வீடியோவை காட்டி பெண்ணை படுக்கைக்கு அழைத்த 20 வயது கொடூர இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். சிவகங்கை அருகே இந்த அவலம் அரங்கேறியுள்ளது. இதுபோன்ற கேவலமான செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு உடனடியாக தண்டனை கொடுக்க வேண்டும் என கூறும் சமூக ஆர்வலர்கள், நாமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என எச்சரிக்கின்றனர். மக்களே உஷார்..!
உக்ரைன் -ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்தி போரை நிறுத்தாவிட்டால் இருநாடுகள் மீதும் பொருளாதார போர் தொடுக்கப்படும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். இதில் தனக்கு விருப்பம் இல்லை என்றாலும், இது பேரிழப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா பல்வேறு முயற்சிகளை செய்தும், புடினும், ஜெலன்ஸ்கியும் அதற்கு பிடிகொடுக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
HIV தொற்று நோய்க்கான ரஷ்யாவின் Sputnik V தடுப்பூசி இன்னும் 2 ஆண்டுகளில் தயாராகிவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க மரபணு ரீதியில் வடிவமைக்கப்பட்ட தடுப்பூசியாக இருக்கும் எனவும், வைரஸை தடுக்கும் வகையில் உடல் செல்களுக்கு மரபணு வழிகாட்டல்களை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, சில அமெரிக்க மருத்துவ நிறுவனங்களும் தடுப்பூசியை உருவாக்கும் பணியில் மும்முரம் காட்டி வருகின்றன.
உங்கள் குழந்தை உங்கள் பேச்சை மதிப்பதே இல்லை என கவலையா? இந்த சிம்பிள் விஷயங்கள் உங்கள் மேல் உள்ள அவர்களது பார்வையை மாற்றும். ▶ காலையில் குழந்தையை அன்பாக எழுப்புங்கள் ▶அவர்கள் செய்யும் சின்ன சின்ன விஷயத்தையும் பாராட்டவும் ▶உணவு நேரத்தை இனிமையாக்குங்கள் ▶குழந்தைகள் முன் சண்டை வேண்டாம் ▶மற்றவர்கள் முன் அவர்களை திட்டக்கூடாது ▶கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி திட்ட வேண்டாம். SHARE IT.
விநாயகர் சதுர்த்தியை கொண்டாட சொந்த ஊருக்கு சென்றுவிட்டு சென்னை திரும்ப நினைத்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆம்னி பஸ்களில் விமானத்தை விட கட்டணம் அதிகரித்துள்ளது. வழக்கமாக மதுரை – சென்னைக்கு ₹600 – ₹900 வசூலிக்கப்படும் நிலையில் இன்று ₹6,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருச்சி – சென்னை ₹2,300, நாகர்கோவில் – சென்னை ₹4,500, நெல்லை – சென்னை ₹5,000 வரை உள்ளதால் பொதுமக்கள் புலம்புகின்றனர்.
Sorry, no posts matched your criteria.