India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியாவுக்கு மீண்டும் கச்சத்தீவை திரும்ப பெற வேண்டும் என விஜய் அண்மையில் கூறியிருந்தார். இதுபற்றி பேசிய இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத், கச்சத்தீவை இந்தியாவுக்கு ஒருபோதும் வழங்க முடியாது என்றும், கச்சத்தீவு இன்று மட்டுமில்லை என்றும் இலங்கையின் ஒரு பகுதி என்றார். தமிழகத்தில் தற்போது தேர்தல் காலம் என்பதால் வாக்குகளை பெற இதைப்போன்ற கருத்துகள் கூறப்படுவதாகவும் விமர்சித்தார்.
அமெரிக்காவின் 50% வரிவிதிப்பால், இந்தியாவின் ஜவுளித்துறை தான் மிக அதிகமாக பாதிக்கப்பட உள்ளது. இதை சரிசெய்ய ரஷ்யா, பிரிட்டன், ஜப்பான், தென்கொரியா உள்பட 40 நாடுகளுக்கு டெக்ஸ்டைல் ஏற்றுமதியை விரிவுபடுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. தரம், நிலைத்தன்மை, புதுமையுடன் இந்திய டெக்ஸ்டைல் பொருள்கள் இருக்கும் என்ற உறுதியுடன் 40 நாடுகளுடன் தூதரகம் வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
2030 காமன்வெல்த் போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கான உரிமை கோருதலுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி இந்தியாவின் விண்ணப்பத்தை CommonWealth Games Federation ஏற்றால் அகமதாபாத்தில் போட்டிகளை நடத்திட ஒப்பந்தம், நிதி குஜராத்திற்கு வழங்கப்படும். இதில் 72 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்பார்கள். இதற்கு முன்பாக இந்தியாவில் 2010ஆம் ஆண்டு டெல்லியில் காமன்வெல்த் போட்டிகள் நடந்தது.
சத்தீஸ்கர் – மகாராஷ்டிரா எல்லையில் உள்ள கட்சிரோலியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 3 பெண்கள் உள்பட 4 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். இதில், 1 ILR, 2 INSAS ரைபிள்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது. மாவோயிஸ்டுகள் ஒழிப்பு நடவடிக்கையில் ஏற்கெனவே நடப்பாண்டில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண், தமிழ் புதல்வன் ஆகிய திட்டங்களில் அரசு மாதந்தோறும் தலா ₹1,000 வழங்குகிறது. 2026 பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையில் இவை முக்கிய பங்கு வகிக்க உள்ளன. பெரும்பாலான குடும்பங்களில் அம்மா, மகள், மகன் என 3 பயனாளர்கள் உள்ளதால் ‘குடும்பத்திற்கு ₹3,000 வழங்கும் அரசு’ என்ற பெயரில் பரப்புரையை மேற்கொள்ள திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பற்றி உங்கள் கருத்து?
TVK மாநாட்டில் தொண்டர்களை பவுன்சர்கள் தள்ளிவிட்டது எல்லா கட்சியிலும் நடப்பது தான் எனவும் திட்டமிட்டு யாரும் செய்வதில்லை என்றும் விஜய்க்கு ஆதரவாக பிரேமலதா கருத்து தெரிவித்துள்ளார். TN-ல் கூட்டணி ஆட்சி அமைவதை DMDK வரவேற்பதாகவும், அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் போது மக்களுக்கு சிறப்பாக பணியாற்ற முடியும் என தாங்கள் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். இதனை, DMDK, TVK-வுடன் நெருங்குவதாக பலரும் கூறுகின்றனர்.
கடந்த 15 வருடங்களில் தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமாக வளர்ச்சியடைந்தவர்கள் என்றால் அனிருத், SK தான் என இயக்குநர் முருகதாஸ் தெரிவித்துள்ளார். இவர்களில் SK மக்களை அதிகளவில் கவர்ந்துவிட்டார் என்றும், மதராஸி படப்பிடிப்பின் போது, அவருக்காக கூடிய ரசிகர் கூட்டத்தை பார்த்து மிரண்டுவிட்டதாகவும் கூறினார். நிறைய திறமையான புதுமுக இயக்குநர்களுடன் அவர் பணியாற்றியதே SK-ன் வெற்றிக்கு காரணம் என்றார்.
டெலிகிராம் செயலியில் இருக்கும் Bots அன்றாடம் உங்களுக்கு தேவையான பல சேவைகளை வழங்குகிறது. 1. Image Enhancer Improve Bot: Low Quality-ல் உள்ள உங்களது போட்டோக்களை HD-ஆக மாற்றும். 2. Voice 2 Text Bot: இதில் உங்கள் குரலை மட்டுமல்ல, வீடியோக்கள் மற்றும் ஆடியோக்களில் வரும் பேச்சையும் Text-ஆக மாற்றி கொடுக்கும். 3. File Converter Bot: இதில், போட்டோக்களை எளிதில் jpeg, png, pdf-ஆக மாற்றலாம். SHARE.
மதுரை, TVK மாநாட்டில் பேசிய விஜய் கச்சத்தீவை இந்தியாவுக்கு பெற்று தரவேண்டும் என தெரிவித்தார். இதுபற்றி பேசிய எச்.ராஜா, விஜய் கொஞ்சமாவது அரசியல் தெரிந்துகொண்டு பேச வேண்டுமென என கூறினார். மேலும், 1974-ல் கச்சத்தீவை தானம் செய்தது காங்., அரசு, கள்ள மவுனம் காத்தது திமுக. இதற்காக காங்கிரஸை ஏன் விஜய் கண்டிக்கவில்லை என கேட்டார். இதன்மூலம் காங்., தவெகவுக்கும் கள்ள உறவு உள்ளதா எனவும் கேள்வி எழுப்பினார்.
பிரபல நடிகரும், அரசியல் தலைவருமான ஜாய் பானர்ஜி(62) காலமானார். மேற்கு வங்கத்தை சேர்ந்த இவர், புகழ்பெற்ற மிலன் திதி, நாக்மதி, சாப்பார் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பாஜகவில் இணைந்த இவர், 2014 லோக்சபா தேர்தலில் பிர்பும் தொகுதி, 2019 தேர்தலில் உலுபேரியா தொகுதியில் BJP சார்பில் போட்டியிட்டு TMC-யிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். ஜாய் பானர்ஜி மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP
Sorry, no posts matched your criteria.