India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
₹4 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட ஒரு சினிமா செட்டை, விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட ஷூட்டிங்கிற்கு கொடுத்துள்ளாராம் தனுஷ். அதுவும் பணம் ஏதும் வாங்காமால். முன்பு, வடசென்னை படத்திற்காக தனது போட்டி நடிகரான சிம்புவுக்கும் NOC சான்றிதழை தனுஷ் வழங்கியிருந்தார். இதுதொடர்பான தகவல் வைரலாக, ‘எங்க லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராகிட்ட மட்டும் ஏன் காசு கேட்குறீங்க’ என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
✪<<17015271>>கோவை <<>>குண்டுவெடிப்பு.. 28 ஆண்டுகள் கழித்து கைது
✪<<17013987>>அன்புமணி <<>>நீக்கம்.. தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்
✪<<17013085>>நமீபியா <<>>நாடாளுமன்றத்தில் PM மோடி… உற்சாக வரவேற்பு
✪<<17013477>>ஈரான் <<>>திட்டம்: அதிபர் டிரம்ப் உயிருக்கு ஆபத்து?
✪<<17013201>>வெற்றியை <<>>தொடருமா இந்தியா?.. இன்று 3-வது டெஸ்ட் ✪<<17013334>>மீண்டும் <<>>புஷ்பா காம்போ.. அட்லீ படத்தில் ரஷ்மிகா
புதுச்சேரியில் ஆளும் NR காங்கிரஸ் – பாஜக கூட்டணி இடையே மோதல் வலுத்து வருகிறது. <<17004404>>CM ரங்கசாமியை<<>> சமாதானம் செய்யும் முயற்சி பயனளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே, இருகட்சிகளின் முக்கியத் தலைவர்களும் தனித்தனியாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதால் கூட்டணி முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அடுத்தடுத்த திருப்பங்களால் இருகட்சி தொண்டர்களும் கலக்கத்தில் உள்ளனர்.
intel நிறுவனம் USA-ல் உள்ள ஓரிகன் அலுவலகத்தில் இருந்து 529 ஊழியர்களை நீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிர்வாகச் செலவை குறைக்கும் நோக்கிலும், Chip துறையை மீட்டெடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த பணிநீக்க நடவடிக்கை இருக்கும் என கூறப்படுகிறது. முன்னதாக, AI-ன் மூலம் HR வேலைகளை நிவர்த்தி செய்வதன் பொருட்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பணிநீக்கத்தை கையிலெடுத்திருந்தது.
அன்புமணி – ராமதாஸ் இடையேயான அதிகாரப் போட்டியில் பாமக இரண்டாக பிரிந்து கிடக்கிறது. இந்நிலையில், அன்புமணிக்கு எதிராக அவரது சகோதரியான காந்திமதியை களமிறக்க ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாயின. இந்நிலையில், பாமகவில் காந்திமதிக்கு பதவி வழங்கப்படுமா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, போகப்போக தெரியும் என ராமதாஸ் பாடல் பாடியபடி பதிலளித்துள்ளார். ஒருவேளை இருக்குமோ?
திருமணமாகி 3 மாதத்தில் உயிரிழந்த சென்னை வழக்கறிஞர் கவிதா குறித்து அடுத்தடுத்து பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவர் பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியாரின் கொள்ளுப்பேத்தி எனத் தெரியவந்துள்ளது. மாரடைப்பால் கவிதா உயிரிழந்ததாக கணவன் வீட்டார் கூறிய நிலையில், தனது மகள் மரணத்திற்கு வரதட்சணை கொடுமையே காரணம் என கவிதாவின் தந்தை குற்றஞ்சாட்டியுள்ளார்.
கூலி படத்தில் இருந்து ‘Monica’ என்ற 2-வது பாடல் இன்று மாலை வெளியாகிறது. ஆக.14-ல் படமும் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில், படத்தின் டீசர், டிரெய்லர் ஏதும் வெளியிடாமல், புதுவித புரோமோஷன் செய்யும் பணிகளில் தயாரிப்பு நிறுவனம் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், இம்மாத இறுதியில் படத்தின் ஆடியோ லாஞ்ச் நடைபெறவுள்ளது. லோகேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை 1 & கணினி பயிற்றுநர் நிலை 1 ஆகிய பிரிவுகளில் காலியாக உள்ள 1,996 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியிட்டுள்ளது. இதற்கான தேர்வு செப்.28 முதல் நடைபெறவுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆக.12. மேலும் விவரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க இங்கே <
மகளிர் உரிமைத்தொகை திட்ட விரிவாக்கம் ஜூலை 15-ல் தொடங்குகிறது. இதற்கு விண்ணப்பிக்க குடும்பத் தலைவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய அரசு ₹7 கோடி மட்டுமே கூடுதலாக ஒதுக்கியுள்ளதாகவும், புதிதாக 5,833 பேருக்கு மட்டுமே ₹1,000 கொடுக்க முடியும் என்றும் <<17013157>>அன்புமணி<<>> குண்டை தூக்கி போட்டுள்ளார். புதிய பயனர்களுக்கு பணம் கிடைக்க தாமதமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராஜஸ்தானில் இருக்கும் இந்த லூனி நதியை உள்ளூர் மக்கள் ‘மாயா நதி’ என்கின்றனர். Satellite map-ல் பார்த்தால், பெரிய நதி போலத் தெரியும். ஆனால், நேரில் சென்று பார்த்தால், ஒரு துளி நீரும் இல்ல! வெறும் மணலும், வறண்ட பாதையும் தான். பண்டைய காலத்தில் இங்கு நதி இருந்திருக்கலாம் எனப்படுகிறது. தற்போது அடைமழையின் போது மட்டும் இங்கு நீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது… அதுவும் சில நாள்களுக்கு மட்டுமே!
Sorry, no posts matched your criteria.