India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் குழந்தைகளுக்கு சிந்தனை திறன் தற்போது குறைந்துவிட்டதாக ரோபோ சங்கர் மகளும் அவரது கணவரும் தெரிவித்த கருத்து ஆதாரமற்றது என தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கமளித்துள்ளது. யூடியூப் சேனலில் அவர்கள் தெரிவித்துள்ள பெரும்பாலான தகவல்கள் தவறானது என்றும், Right Brain activation & ஹெகுரு பயிற்சிகளுக்கு மத்திய அரசு எந்தவித பட்ஜெட்டும் ஒதுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான காந்திமதிநாதன் தவெகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். புஸ்ஸி ஆனந்திற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தென் மாவட்டங்களில் மிகப்பெரிய சமூகத்தை சார்ந்தவர்களுக்கு மா.செ. பதவி வழங்காததால் அந்த சமூகத்தின் வாக்குகளை தவெகவால் பெற முடியாது என அதிருப்தி தெரிவித்துள்ளார். தனது அரசியல் பயணத்தை முடித்துக் கொள்வதாகவும் காந்திமதிநாதன் குறிப்பிட்டுள்ளார்.
தெற்கு ரயில்வேயில் 276 லெவல் கிராசிங் கேட்களில் இன்டர்லாக்கிங் இல்லை என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 10,000-க்கும் அதிகமான வாகனங்கள் கடக்கும் ரயில்வே கேட்களில் <<17013093>>இன்டர்லாக்<<>> அமைப்புகள் நிறுவப்படும் எனக் கூறியுள்ளனர். அதேநேரம், தெற்கு ரயில்வேயில் ஆளில்லாத ரயில்வே கேட்களே இல்லை என்றும் உறுதியளித்துள்ளனர். கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய வம்சாவளி நடிகை மலேசியாவில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. செபாங் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு நடிகை லிசால்லினி கனரன் சென்றபோது, அங்கிருந்த சாமியார் அவரது மார்பை தொட்டுள்ளார். பின்னர் நடிகை மீது நீரை தெளித்துள்ளார். ஜூன் 21-ல் நடந்த இந்த சம்பவம் குறித்து நடிகை லிசால்லினி போலீஸ் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, தலைமறைவான சாமியாரை போலீஸ் தேடி வருகிறது.
அரக்கோணம் – செங்கல்பட்டு ரயில் வழித்தடத்தில் உள்ள லெவல் கிராசிங் (LC) பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது LC 40 & LC 44-ல் பணி நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்ததாக கார்த்திகேயன் & ஆஷிஷ்குமார் ஆகிய 2 கேட் கீப்பர்களும் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடலூர் ரயில் விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழப்புக்கு கேட் கீப்பர் தூங்கியதே காரணம் எனத் தெரிய வந்த நிலையில், ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.
பாஜகவின் டப்பிங் வாய்ஸில் பேசிக் கொண்டிருந்த இபிஎஸ் தற்போது ஒரிஜினல் BJP வாய்ஸிலேயே பேசுவதாக CM ஸ்டாலின் சாடியுள்ளார். திருவாரூரில் பேசிய அவர், அதிமுகவை மீட்க முடியாத இபிஎஸ் தமிழகத்தை மீட்பதாக கூறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஆட்சியில் அமர வைத்தவருக்கு அவர் துரோகம் செய்ததாகவும் CM விமர்சித்துள்ளார். கோயில் நிதியில் கல்லூரி திறப்பதற்கு பாஜகவினரே பேசுவதில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
பலருக்கும் பிடித்த பயண முறை ரயில் பயணம்தான். அதிகப்படியான நேரம் எடுத்தாலும் கூட, நல்ல அனுபவங்களை ஏற்படுத்தி தருவது இதுதான். உலகம் முழுவதும் இருக்கும் இந்த ரயில் போக்குவரத்து கடந்து செல்லும் சில இடங்கள் மனதை வருடி விடுகிறது. அப்படி மயக்கும் டாப் 6 ரயில் பயணங்களை பட்டியலிட்டுள்ளோம். பார்க்கும் போதே ’வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்த ரயில் பயணம் போணும்’னு தோணுதுல? இதில் உங்களை அதிகமாக கவர்ந்தது எது?
ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் ஆபரணத் <<17014491>>தங்கத்தின் விலை<<>> இன்று சற்று அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், கடந்த ஒரு வாரத்தில் சவரனுக்கு ₹680 குறைந்திருக்கிறது. அதாவது, கடந்த வியாழனில் (ஜூலை 3) 22 கேரட் தங்கம் 1 சவரன் ₹72,840 ஆக இருந்தது. அதேநேரத்தில், இன்றைய நிலவரப்படி, 1 சவரன் ₹72,160-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது நடுத்தர மக்களுக்கு சற்று ஆறுதலாக அமைந்திருக்கிறது.
டாணாக்காரன் படத்தை இயக்கிய தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் புதிய படத்திற்கு ‘மார்ஷல்’ என பெயரிடப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், சத்யராஜ், பிரபு ஆகியோர் நடிக்கும் நிலையில், நிவின் பாலி வில்லனாக நடிக்கிறார் எனக் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு சாய் அப்யங்கர் தான் இசையமைக்கிறார்.
தமிழகத்தை பெருந்துயரில் ஆழ்த்திய பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்து தொடர்பான விசாரணை வேகமெடுத்துள்ளது. 3 பேர் கொண்ட குழுவினர் இன்றுமுதல் விசாரணையை தொடங்கியுள்ளனர். கேட் கீப்பர், லோகோ பைலட், உதவி லோகோ பைலட், ரயில் மேலாளர், பள்ளி வேன் ஓட்டுநர் என 13 பேரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
Sorry, no posts matched your criteria.