News August 27, 2025

குஜராத் மாடலில் தொடங்கிய வாக்கு திருட்டு: ராகுல் காந்தி

image

வாக்கு திருட்டு நடப்பதாலேயே, அடுத்த 40 ஆண்டுகளுக்கு BJP ஆட்சியில் இருக்கும் என அமித்ஷாவால் கூற முடிகிறது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பிஹார் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பிஹாரில் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதற்கான காரணத்தை தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். குஜராத் மாடலில் இருந்து BJP, வாக்குகளை திருடத் தொடங்கியதாகவும் கடுமையாக விமர்சித்தார்.

News August 27, 2025

போர்க்குரல் எழுப்பியுள்ளது பிஹார்: CM ஸ்டாலின்

image

வாக்குத் திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்து ராகுல் காந்தி பிஹாரில் நடத்திவரும் யாத்திரையில் CM ஸ்டாலின் கலந்துகொண்டார். தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், சமூக நீதி, மதச்சார்பின்மைக்காக 2,000 கிமீ கடந்து வந்துள்ளதாக கூறினார். இந்திய ஜனநாயகத்திற்கு ஆபத்து வருகிறது என்பதால் பிஹார் போர்க்குரல் எழுப்பியுள்ளதாக தெரிவித்தார். BJP-க்கு பயப்படாமல் அரசியல் செய்தவர் லாலு பிரசாத் யாதவ் என்றார்.

News August 27, 2025

மகளிர் உரிமைத் தொகை.. 24 மணி நேரத்தில் சர்ப்ரைஸ்

image

முதல் முதலில் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அடுத்த 24 மணி நேரத்தில் குறுஞ்செய்தி (SMS) மூலம் பதில் அனுப்பப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது. மகளிர் உரிமைத் தொகை தொடர்பான தகவல்களை விண்ணப்பதாரர்கள் https://kmut.tn.gov.in/என்ற இணையதளத்தில் நேரடியாக அறிந்து கொள்ளலாம். “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் மட்டும் 15 லட்சம் பெண்கள் மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பித்துள்ளனர்.

News August 27, 2025

ADMK-ஐ RSS வழி நடத்துவதில் என்ன தவறு: எல்.முருகன்

image

ஆர்எஸ்எஸ் கையில் அதிமுக என தவெக தலைவர் விஜய்யின் விமர்சனத்திற்கு எல்.முருகன் பதிலடி கொடுத்துள்ளார். அதிமுகவை ஆர்எஸ்எஸ் வழி நடத்துவதில் என்ன தவறு என்று கேள்வி எழுப்பிய அவர், ஆர்எஸ்எஸ் சமூக சேவைக்கான இயக்கம், அந்த இயக்கத்தின் கருத்துக்களை அதிமுக கேட்பது வரவேற்கத்தக்கது. ஆர்எஸ்எஸ்-ஐ பார்த்து விஜய் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

News August 27, 2025

‘பார்க்கிங்’ இயக்குநருடன் இணையும் விக்ரம்?

image

’பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் உடன் விக்ரம் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ஷாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம். ஏற்கெனவே இந்நிறுவனத்தின் தயாரிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ளார். அத்துடன், ‘96’ பட இயக்குநர் பிரேம்குமார் உடனும் அவர் கைகோர்த்துள்ளார். இதனிடையே ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸுக்கும் விக்ரம் ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் உள்ளனர்.

News August 27, 2025

மருத்துவமனையில் அமைச்சர்… வெளியானது புதிய தகவல்

image

அமைச்​சர் ஐ.பெரிய​சாமி உடல்நிலை குறித்து மதுரை மீனாட்சி மிஷன் ஹாஸ்பிடல் ​தரப்​பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. வயிற்று வலி உள்​ளிட்ட சிறு உடல் உபாதைகளுக்​காக 2 நாள்களுக்கு முன்பு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் அடிப்​படை​யில், டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வரு​கின்​றனர். தற்​போது அவர் நலமாக உள்​ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 27, 2025

அனைத்து முடிவும்.. ஒரு தொடக்கத்துக்கு தான்!

image

IPL-ல் இருந்து ஓய்வை அறிவித்துள்ள அஸ்வின், அனைத்து முடிவும், புது தொடக்கத்திற்கு தான் என குறிப்பிட்டுள்ளார். மேலும், IPL-ல் இருந்து விடைபெற்றாலும், மற்ற வெளிநாட்டு லீக் போட்டிகளில் கவனம் செலுத்தவுள்ளதாக பதிவிட்டுள்ளார். வாய்ப்பளித்த IPL அணிகளுக்கும், BCCI-க்கும் நன்றி சொன்ன அவர், அடுத்து வர இருப்பதை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். உங்களுக்கு பிடிச்ச அஸ்வினின் IPL இன்னிங்ஸ் எது?

News August 27, 2025

அரசியலுக்கு வந்த ஒரே ஆண்டில் பிரதமர் பதவி!

image

ஐரோப்பிய நாடான லிதுவேனியாவின் புதிய பிரதமராக இங்கா ருகினீனே(44) தேர்வாகியுள்ளது அரசியலில் விநோதமாக பார்க்கப்படுகிறது. கடந்தாண்டு பொதுத்தேர்தலுக்கு முன்புதான் அவர், சமூக ஜனநாயக கட்சியில் சேர்ந்தார். பின்னர், MP-யாகி 2024 டிசம்பர் முதல் அந்நாட்டின் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவருக்கு பிரதமர் பதவி தேடி வந்துள்ளது. இவர், அந்நாட்டின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

News August 27, 2025

பகல் 12 வரை இன்று.. முக்கிய செய்திகள்!

image

✪அரசியல்வாதி போல் <<17530864>>விஜய் <<>>நடக்க வேண்டும்: தமிழிசை
✪IPL-ல் இருந்து ஓய்வு அறிவித்தார் <<17531275>>அஸ்வின்<<>>
✪டிரம்ப்பின் 50% வரி <<17530648>>அமலானது<<>>.. ஸ்தம்பித்த துறைகள்
✪தங்கத்தின் <<17530907>>விலை <<>>சவரனுக்கு ₹280 உயர்ந்தது
✪கடத்தல் <<17531464>>வழக்கு<<>>.. நடிகை லட்சுமி மேனன் தப்பியோட்டம்

News August 27, 2025

BREAKING: விஜய் மீது பதிவானது முதல் கிரிமினல் வழக்கு

image

மதுரை மாநாட்டில் <<17484937>>தொண்டரை பவுன்சர் தூக்கி வீசிய<<>> சம்பவத்தில் விஜய் மீது முதல் கிரிமினல் வழக்கு பதிவாகியுள்ளது. தவெகவின் சரத்குமார், பெரம்பலூர் SP ஆபிஸில் கொடுத்த புகாரின் பேரில் குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். FIR 346/2025-ல் கொலை மிரட்டல், கூட்டு தாக்குதல் உள்ளிட்ட 3 பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இவ்வழக்கில் முதல் குற்றவாளியாக விஜய், மேலும், பவுன்சர்கள் 10 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!