India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
IBPS கிளார்க் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஆக.28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளில் உள்ள 10,270 கஸ்டமர் சர்வீஸ் அசோசியேட் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதில் தமிழகத்துக்கு மட்டும் 894 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வித்தகுதி: டிகிரி தேர்ச்சி, வயது: 20-28, பிரிலிமினரி & மெயின் தேர்வுகள் அடிப்படையில் ஆள்தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்க <
மாநாட்டில் ஒரு கொடிக்கம்பத்தை கூட ஒழுங்காக நட முடியாதவர்கள் எப்படி ஆட்சி நடத்துவார்கள் என விஜய்யை தமிழிசை விமர்சித்துள்ளார். விஜய் அரசியலில் புதியவர், அவர் வரவெல்லாம் பாஜகவை ஒன்றும் செய்யாது என கூறினார். தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாவிட்டாலும் தமிழகத்தில் தாமரை எல்லோரும் ஆச்சரியப்படும் அளவுக்கு மலரப்போகிறது, அதை தம்பி விஜய் பார்க்கத்தான் போகிறார் என்றும் தெரிவித்தார்.
▶ஆகஸ்ட் 23 – ஆவணி 7 ▶ கிழமை: சனிக்கிழமை ▶ நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM, 4:45 PM – 5:45 PM ▶ கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM, 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶ எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶ குளிகை: 6:00 AM – 7:30 AM ▶ திதி: பிரதமை ▶ சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை.
ஒரு காலத்தில் மக்களின் கனவுத் தேசமாக இருந்தது அமெரிக்கா. அந்த நாட்டில் குடியேறவே அனைவரும் விரும்பினர். ஆனால், காலம் மாறிவிட்டது. இப்போது அமெரிக்காவில் இருந்து வெளியேறவே பலரும் விரும்புகின்றனர். ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் வெளியேற முடிவு செய்துள்ள நிலையில், ஏஞ்செலினா ஜோலியும் வெளியேறப் போவதாக கூறப்படுகிறது. அரசியல் நிலையின்மை, அதிகரிக்கும் குற்றங்கள், நிதிச்சுமை போன்றவை இதற்கு காரணங்களாகும்.
நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கான விபத்து மரண இழப்பீட்டுத் தொகை ₹1 லட்சத்திலிருந்து ₹2 லட்சமாக உயர்த்தி வழங்கிட CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதை தவிர, விபத்தினால் ஏற்படும் உடல் உறுப்பு இழப்பிற்கு ₹1 லட்சம் என்றும், இயற்கை மரணத்துக்கு ₹30,000 என்றும், இறுதிச்சடங்குக்கான நிதியுதவி ₹10,000 வழங்கிட CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவில் மழை பெய்தது. இந்நிலையில், இன்று (ஆக. 23) 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அதன்படி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகியுள்ளதால் வெளியே செல்பவர்கள் மிக கவனமா இருங்க!
இன்று (ஆகஸ்ட் 23) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
இன்று (ஆகஸ்ட் 23) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
உடல்நிலை சரியில்லாமல் டாக்டரிடம் சென்றால், நாக்கை நீட்டச் சொல்வதற்கு இதுதான் காரணம்: *நாக்கு மஞ்சள் நிறமாக தோன்றினால்: வயிறு (அ) கல்லீரல் தொடர்பான நோய். *ரோஸ்: ஆரோக்கியமான உடல். *இளம் சிகப்பு: இதயம் & ரத்தம் சார்ந்த நோய். *சிமெண்ட்: செரிமானம் & மூலநோய். *வெளிர் வெள்ளை: உடல்நீர் வற்றிப் போகுதல் & நுண் கிருமிகளால் தொற்றுக் காய்ச்சல். *நீலம்: சிறுநீரக பாதிப்பு.
பாஜக மக்கள் சேவை செய்யும் கட்சி, தங்களுக்கு யாரும் எதிரி இல்லை என நயினார் தெரிவித்துள்ளார். பாஜக தங்களது எதிரி என விஜய் கூறியதற்கு இவ்வாறு அவர் பதிலளித்துள்ளார். மீனவர்களுக்கு பாஜக அரசு எதுவும் செய்யவில்லை என விஜய் கூறியது குறித்து கேட்டதற்கு, கடந்த 2004 – 2014 முதல் மீனவர்கள் பலர் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், 2014-க்கு பின் அதைப்போன்ற சம்பவம் நடைபெறவில்லை என்றார்.
Sorry, no posts matched your criteria.