News August 20, 2025

கட்சி தாவுபவர்களுக்கே பதவி.. திமுகவினர் குமுறல்

image

கோவை பொறுப்பாளராக இருக்கும் செந்தில் பாலாஜி, கட்சிதாவி வருபவர்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுவரை முன்னாள் அதி​முக எம்​பி ஏ.பி.​நாக​ராஜன், கணபதி ப.ராஜ்கு​மார், எம்​எல்​ஏ ஆறுகுட்​டி, நாதக ராஜீவ்​காந்தி ஆகியோருக்கு வந்த வேகத்தில் கட்சிப் பதவி முதல் MP வரை ஆக்கியுள்ளதாகவும் காலங்காலமாக உள்ள திமுகவினர் குமுறுகின்றனர். 2026 தேர்தலில் கொங்கில் கோலோச்சுமா திமுக?

News August 20, 2025

GST வரியில் மாற்றம்.. இன்று முக்கிய முடிவு

image

GST தொடர்பாக மாநில நிதியமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை நடத்துகிறார். வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டு குறைந்த வரி விதிப்பு முறை இந்த ஆண்டு தீபாவளிக்குள் கொண்டு வரப்படும் என PM <<17409932>>மோடி <<>>சமீபத்தில் அறிவித்தார். அதனைத்தொடர்ந்து, தற்போது 5 விதமாக இருக்கும் GST வரி, 2 விதமாக (5%, 18%) மாற்றுவது குறித்து இன்று முடிவு எடுக்கப்படவுள்ளன. இதனால், பல பொருள்களின் விலை குறைய வாய்ப்புள்ளது.

News August 20, 2025

திருப்பனந்தாள் காசிமடத்தின் பீடாதிபதி காலமானார்

image

300 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட திருப்பனந்தாள் காசிமடத்தின் பீடாதிபதியான மகாமுனிவர் முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகள் (95) முக்தி அடைந்தார். ‘கயிலை மாமுனிவர்’ என போற்றப்படும் இவர், ஆன்மிகம், சைவ சித்தாந்தம், தமிழ், கல்வி, சமூகப் பணியில் ஆற்றிய சேவை என்றும் அழியாது, தலைமுறைகளாக வாழ்வில் ஒளியாக நிலைத்திருக்கும். அவரது மறைவிற்கு அண்ணாமலை உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

News August 20, 2025

வைரத்தை இழந்துவிட்டோம், தங்கத்தை.. தவெக பேனர்

image

விஜயகாந்தை மானசீக குருவாக ஏற்றால் அவரது போட்டோவை தவெக பயன்படுத்த அனுமதிப்பதாக பிரேமலதா தெரிவித்திருந்தார். இந்நிலையில், ‘வைரத்தை இழந்துவிட்டோம், தங்கத்தை இழந்துவிட மாட்டோம்’ என்ற வாசகம் அடங்கிய பேனர் மதுரை தவெக மாநாட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, <<17459105>>அண்ணா, MGR<<>> போட்டோக்களை பயன்படுத்தியதற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், விஜயகாந்த் போட்டோ இடம்பெற்றது பேசுபொருளாகியுள்ளது.

News August 20, 2025

இதுவரை ரஜினி – கமல் இணைந்து நடித்த படங்கள்

image

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி – கமல் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சாத்தியமானால் 46 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் சேர்ந்து நடிப்பது தற்போதைய சூழலில் மரண மாஸாக இருக்கும். இதுவரை, அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, அவர்கள் 16 வயதினிலே, நினைத்தாலே இனிக்கும், தப்புத் தாளங்கள், தில்லு முல்லு, அலாவுதீனும் அற்புத விளக்கும் உள்ளிட்ட 21 படங்களில் நடித்துள்ளனர்.

News August 20, 2025

இந்தியா – பாக்., போர்: மீண்டும் அழுத்திச் சொன்ன USA

image

இந்தியா – பாக்., மோதலை முடிவுக்கு கொண்டு வர ‘வர்த்தகம்’ என்ற சக்திவாய்ந்த ஆயுதத்தை டிரம்ப் பயன்படுத்தியதாக வெள்ளை மாளிகை செயலாளர் கரோலின் லீவிட் கூறியுள்ளார். உலகம் முழுவதும் அமைதியை மீட்டெடுப்பதில் டிரம்ப் பெருமை கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். USA-வின் இந்த கூற்றுக்கு INDIA கூட்டணி மத்திய அரசிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது. இதற்கு ‘தற்சார்பு இந்தியா’ என PM மோடி மறைமுக பதிலளித்திருந்தார்.

News August 20, 2025

பட்டுக்கோட்டையில் போட்டி? TTV தினகரன் பதில்

image

2026 தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவதாக TTV தினகரன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பட்டுக்கோட்டை தொகுதியில் அமமுக, பாஜக கூட்டணியில் போட்டியிடுமா என்பது டிசம்பர் இறுதியில் தெரியவரும் என்று TTV கூறியுள்ளார். அதிமுக, மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்த பிறகு, அமமுக NDA-விலேயே உள்ளதாக நயினார் தெரிவித்தார். ஆனால் இதுகுறித்து பாஜகவிடம் கேளுங்கள் என EPS கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

News August 20, 2025

ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்தது

image

கடந்த ஒரு வாரத்திற்கு மேல் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹440 குறைந்து ₹73,440-க்கும், கிராமுக்கு ₹55 குறைந்து ₹9,180-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ₹1 குறைந்து ₹125-க்கும், கிலோ வெள்ளி ₹1000 குறைந்து ₹1,25,000-க்கும் விற்பனையாகிறது.

News August 20, 2025

தமிழக மக்களுக்கு அள்ளிக் கொடுத்தவர் மோடி: H ராஜா

image

துணை ஜனாதிபதி தேர்தலில் INDIA கூட்டணி போட்டியிட்டாலும், உறுப்பினர்களின் எண்ணிக்கைபடி NDA வேட்பாளரே வெற்றி பெறுவார் என H ராஜா தெரிவித்துள்ளார். சிவகங்கையில் பேசிய அவர், R வெங்கட்ராமனுக்குப் பிறகு தமிழகத்தில் இருந்து யாரும் துணை ஜனாதிபதியாக வராததால் திமுக MP-க்கள் CPR-ஐ ஆதரிக்க வேண்டும் எனக் கூறினார். அதிக முறை தமிழகத்துக்கு வந்த PM மோடி, மக்களுக்கு அள்ளி கொடுத்துள்ளார் என்றார்.

News August 20, 2025

BEAUTY TIPS: முடி உதிர்வை வெங்காயம் தடுக்குமா?

image

சின்ன வெங்காயத்தை அரைத்துப் பூசினால் வழுக்கைத் தலையில்கூட முடி வளரும் என்று சொல்லப்படுவதை அரோமாதெரபிஸ்ட்டுகள் மறுத்துள்ளனர். கந்தகத்தன்மை (சல்ஃபர்) அதிகமுள்ள சின்ன வெங்காயத்தின் சாற்றை தலைமுடியில் பூசினால், முடி மெலிந்து, உடையும் என்கிறார்கள். மேலும், தலையில் இயற்கையாகச் சுரக்கும் எண்ணெய்ப் பசையை அகற்றி, வறண்டுபோக செய்து, முடி உதிர்வு & வழுக்கை பாதிப்பை மோசமாக்கும் என எச்சரிக்கின்றனர். SHARE IT.

error: Content is protected !!