India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் பும்ரா களம் காண்கிறார். 2-வது டெஸ்ட் அவருக்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில் இன்றைய போட்டியில் பிரசித்துக்கு பதில் களம் இறங்குகிறார். இங்கிலாந்து தரப்பில் டங்கிற்கு பதில் சோஃப்ரா ஆர்ச்சர் அணியில் இணைந்துள்ளார். இதனால் இரு அணிகளின் பந்து வீச்சு பலமும் அதிகரித்துள்ளது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் உள்ளது குறிப்பிடத்தக்கது. யார் கை ஓங்கும்?
பிஹாரில் தற்போது ECI நடத்தும் <<17017994>>SIR செயல்முறையை <<>>எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, SIR செயல்முறையில் தவறில்லை. அதை செய்யும் காலம் தான் தவறு என்ற நீதிபதி, நவம்பரில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இப்போது இதை செய்ய வேண்டிய அவசியம் என்ன? தேர்தல் இல்லாத நேரங்களில் இந்த பணியை ECI செய்திருக்கலாமே, பாதிக்கப்பட்டவர் தீர்வு பெற கால அவகாசம் இல்லையே எனக் கேள்வி எழுப்பினார்.
நெல்லை, கூட்டப்புளி கிராம மீனவர்கள் சிலர் தங்களின் படகுகளில் தவெக பெயரை குறிப்பிட்டிருந்ததால் மானியம் வழங்க முடியாது எனக் கூறுவது எதேச்சதிகாரப் போக்கு என்று விஜய் விமர்சித்துள்ளார். எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு உரிய மானியம் என்பது வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஸ்டாலின் தலைமையிலான கபட நாடக திமுக அரசுக்கு கண்டனம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. முதல் டெஸ்டில் தோல்வியடைந்தாலும் 2-வது டெஸ்டில் அபார வெற்றி பெற்றது இந்தியா. இதனால் 3-வது டெஸ்ட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த போட்டியில் பும்ரா அணியில் இல்லை என்றாலும் அந்த இடத்தை ஆகாஷ் சிறப்பாக நிரப்பினார். இந்தியாவின் பேட்டிங், பௌலிங் அபாரமாக உள்ளதால் இங்கிலாந்துக்கு இந்த ஆட்டம் சவாலாகவே இருக்கும்.
அருணாசலப் பிரதேச மாநிலத்தில் முன்னாள் எம்எல்ஏவை யானை மிதித்து கொன்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திராப் மாவட்டம் நாம்சங்க் கிராமத்தில் முன்னாள் எம்எல்ஏ காப்சென் ராஜ்குமார் காலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த காட்டு யானை அவரை துரத்தியது. பின்னர் கீழே தள்ளி ராஜ்குமாரை சரமாரியாக மிதித்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பலியானார்.
பிரகாஷ் ராஜ், ராணா, விஜய் தேவரக்கொண்டா உள்ளிட்ட 29 நட்சத்திரங்கள் மீது ED வழக்கு பதிவு செய்துள்ளது. தெலங்கானாவை சேர்ந்த பனீந்தர் சர்மா என்பவர், பிரபலங்கள் பெட்டிங் ஆப்களை ஊக்குவித்து சட்டவிரோத கமிஷனாகப் பெரும் தொகையாகப் பெற்றதாக கொடுத்த புகாரைத் தொடர்ந்து இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. கேமிங் சட்ட பிரிவுகள் 3, 3(A),4 & BNS 318(4), 112 போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடலூர் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தது தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மா குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அவர் வேலை நேரத்தில் பலமுறை தூங்கியதும், நல்வாய்ப்பாக பலமுறை விபத்து தவிர்க்கப்பட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பங்கஜின் அலட்சியத்தால் பிஞ்சுகள் உதிர்ந்து போனது பெரும் வேதனை.
சமீபத்தில் லாக்-அப் டெத்தில் உயிரிழந்த காவலாளி அஜித்குமாரின் வீட்டுக்குச் சென்று ஆறுதல் தெரிவித்த விஜய், அவரது குடும்பத்தினருக்கு நிதியுதவியும் செய்தார். இந்நிலையில், கடந்த நான்காண்டு கால திமுக ஆட்சியில் போலீஸ் ஸ்டேஷனில் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2026 தேர்தல் களம் 4 முனைப்போட்டியாக உள்ள நிலையில், தவெகவின் நகர்வுகள் வேகமெடுக்கிறது.
‘போர் தொழில்’ இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் வேல்ஸ் இன்டர்நேஷனல் ஐசரி கணேஷ் தயாரிப்பில், தனுஷ் நடிக்கும் ‘D54’ படத்தின் அறிவிப்பு வெளிவந்துள்ளது. நிலப்பரப்பு ஒன்று எரிந்துக் கொண்டிருக்க, தனுஷ் வருத்தத்துடன் நிற்கும் படியான போஸ்டருக்கு ‘Sometimes staying dangerous is the only way to stay alive’ என கேப்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் (Special Intensive Revision- SIR) நாடு முழுவதும் நடைபெறும் என சுப்ரீம் கோர்ட்டில் ECI அறிவித்துள்ளது. பிஹாரில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தம் இப்போது நடத்தப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவின் விசாரணையில் ECI இதை தெரிவித்தது. பிஹாரில் மட்டுமல்ல, நாடு முழுவதும் இந்த சரிபார்ப்பு செயல்முறை நடத்தப்படும் அது விளக்கம் அளித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.