India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
A.R.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி படத்தின் இசைவெளியீட்டு விழா ஆக.24-ம் தேதி நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையிலுள்ள பிரபல கல்லூரியில் இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்துவருவதாகவும், அதே மேடையில் படத்தின் டிரெய்லரும் வெளியிடப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. கூலி படத்துக்கு பிறகு வெளியாகும் அடுத்த பெரிய படம் இது என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
புடின் உடனான பேச்சுவார்த்தை வெற்றி அடைந்ததாக டிரம்ப் தெரிவித்துள்ளார். உக்ரைன் போரில் அமைதி நிலவும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள், NATO பொது செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், அனைத்தும் நன்றாக நடக்கும் பட்சத்தில் ஜெலன்ஸ்கி விரைவில் புடினை சந்திப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
துணை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வுக்கு வரும் 19-ம் தேதி ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இந்நிலையில், வேட்பாளருக்கான உத்தேச பட்டியலில் அண்ணாமலை பெயரும் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், JP நட்டா, ராஜ்யசபா துணை தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், டெல்லி கவர்னர் சக்சேனா, குஜராத் கவர்னர் ஆச்சார்யா தேவ்விரத், Ex CM கர்பூரி தாக்கூரின் மகன் ராம் நாத் தாக்கூர் ஆகியோர் பெரும் பட்டியலில் உள்ளதாம்.
தலைமை செயலகத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி அறைக்கு செல்லும் நுழைவு வாயிலுக்கு பூட்டு போட்டதை EPS விமர்சித்துள்ளார். உத்தமர் என கூறிக்கொள்ளும் நீங்கள், அறையை திறந்துவிடுங்கள் எனவும், எந்த தவறும் செய்யவில்லை என்றால் ஏன் அறையை பூட்டு போட்டு பூட்டி வைக்கிறீர்கள் என்றும் அவர் சாடியுள்ளார். முன்னதாக, அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் இன்று ED ரெய்டு நடத்தியது.
வாழ்க்கையில் தர்ம சங்கடமான சூழலை சந்தித்தேன் என சிலர் சொல்லுவார்கள். இதை படித்தால் இதைவிட தர்மசங்கடமான சூழல் எதுவும் இல்லை என்பது உங்களுக்கு புரியும். வெளிநாட்டில் ஏழ்மை காரணமாக தத்து கொடுத்த மகனை அடையாளம் தெரியாமல் பெண் ஒருவர் காதலித்து திருமணம் செய்ததோடு 2 குழந்தைகளை பெற்றுள்ளார் தற்போது DNA சோதனையில், அந்த இளைஞர் தனது மகன் என்பதை அறிந்த அவர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். So Sad..!
தனுஷ் தற்போது இட்லிகடை படத்தை இயக்கி நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நித்யா நடிக்க, இவர்களுடன் அருண்விஜய், சத்யராஜ், பார்த்திபன், ராஜ்கிரண் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படத்தில் தனுஷுக்கு தங்கையாக ஷாலினி பாண்டே நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படம் அக்டோபர் 1-ம் தேதி ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
பட்டாவில் திருத்தம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பிப்பது, அரசு அலுவலகங்களுக்கு செல்வது என இனி அலைய வேண்டாம். திருத்தம் செய்ய விரும்புவோர் தங்களது ஆதார் அட்டை, ஏதேனும் ஒரு அடையாள ஆவணம், சொத்து குறித்த பத்திரங்கள், வில்லங்க சான்றிதழ் உள்ளிட்டவற்றுடன் உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு சென்றால் போதும். அனைத்து துறை அதிகாரிகளும் அங்கு இருப்பதால் வேலை உடனடியாக முடிந்து விடுகிறதாம்.
தொடர்ந்து ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் ஒரு 3 நாள்களுக்கு, போன் பயன்படுத்துவதை நிறுத்தினால், ஆச்சரியகரமான மாற்றம் ஏற்படுவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இளைஞர்கள் சிலரை 72 மணிநேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதை நிறுத்தி சோதித்தனர். அப்போது அவர்களின் மூளை அதிசயிக்கத்தக்க முறையில் தன்னைத் தானே ரீபூட் செய்துகொண்டு சிறப்பாக செயல்பட்டதை கண்டறிந்தனர். நீங்களும் ட்ரை பண்ணலாமே?
திமுக கூட்டணி கட்சிகளின் ஒற்றுமை பலரது கண்களை உறுத்துவதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சேலம் இந்திய கம்யூ., மாநில மாநாட்டில் பேசிய அவர், கூட்டணி கட்சிகளின் ஒற்றுமையைப் பார்த்து வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்வதாகவும், எப்படியாவது பிரிந்து விட மாட்டார்களா என புலம்புவதாகவும் கூறியுள்ளார். மேலும், தங்களுக்குள் இருக்கும் கொள்கை நட்பை, தலைமுறை கடந்தும் சொல்லியாக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
புடின் உடனான பேச்சுவார்த்தைக்கு பின்பு இந்தியா மீதான வரிவிதிப்பு குறித்து டிரம்ப் பேசியுள்ளார். ரஷ்யா கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளான சீனா, இந்தியா போன்ற நாடுகளுக்கு மேலதிக வரிவிதிக்க போவதில்லை எனவும், அப்படி வரி விதித்தால் அந்நாடுகள் பேரழிவை சந்திக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தங்களுடைய வரிவிதிப்புகளுக்கு பின்னர் ரஷ்யா, இந்தியா போன்ற கஸ்டமரை இழந்துள்ளதாகவும் கிண்டலாக கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.