News July 10, 2025

ஸ்டாலின் சமரசம்.. நோட்டீஸை வாபஸ் பெற தயாநிதி முடிவு

image

கலாநிதிக்கு அனுப்பிய நோட்டீஸை வாபஸ் பெற தயாநிதி மாறன் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பல கோடி ரூபாய் சன் டிவி நிறுவன பங்குகளை மோசடி செய்ததாக கூறி, கலாநிதி மாறனுக்கு தயாநிதி நோட்டீஸ் அனுப்பியிருந்தார். ஸ்டாலினின் நெருங்கிய உறவினர்கள் இடையேயான இந்த மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஸ்டாலின் ஞாயிறு மாலை இருவரையும் அழைத்துப் பேசி சமரசம் செய்துள்ளார்.

News July 10, 2025

கல்லூரிகளில் ஒரே கால அட்டவணையில் தேர்வுகள்

image

தமிழகம் முழுவதும் உள்ள கலை & அறிவியல் கல்லூரிகளில் ஒரே நேரத்தில் தேர்வு நடத்திடும் வகையிலான கால அட்டவணையை கல்லூரிக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ளார். இதன்படி, ஆகஸ்ட்18-25 வரை முதல் Internal, செப்.23-30 வரை இரண்டாவது Internal நடத்தப்படும். அக்.16-27 வரை மாடல் எக்ஸாம் நடத்தப்பட்டு, அக்.31-ல் செமஸ்டர் தேர்வுகள் தொடங்கும். நடப்பு செமஸ்டரின் கடைசி வேலை நாள் அக்.28 ஆகும்.

News July 10, 2025

2,00,00,000 உறுப்பினர்கள்.. விஜய் போடும் மாஸ்டர் ப்ளான்!

image

2 கோடி தொண்டர்களை கொண்ட இயக்கம் என அதிமுக சொல்கிறது. 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என திமுக களப்பணியாற்றி வருகிறது. இந்த வரிசையில் விஜய்யும் இணைந்திருக்கிறார். ஜூலை 15-ல் உறுப்பினர் சேர்க்கைக்காக செயலியை அறிமுகம் செய்யும் அவர், <<17013074>>2 கோடி தொண்டர்களை<<>> இணைக்க உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே வீட்டிற்கு ஒருவரை தவெகவில் இணைக்குமாறு அவர் குறிப்பிட்டிருந்தார். மெகா ப்ளான் விஜய்க்கு கை கொடுக்குமா?

News July 10, 2025

வார விடுமுறை… நாளை முதல் ஸ்பெஷல் பஸ்கள் அறிவிப்பு

image

வார விடுமுறை நாள்களில் மக்கள் நெரிசலின்றி சொந்த ஊர்களுக்குச் செல்ல அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை (ஜூலை 11) முதல் ஜூலை 13 வரை முக்கிய நகரங்களில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. www.tnstc.in இணையதளம், TNSTC செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். SHARE IT.

News July 10, 2025

அழகான சருமத்துக்கு டாப் 5 டிப்ஸ்…

image

அழகான சருமம் வேண்டும் என்ற யாருக்குதான் ஆசை இல்லை. ஆனால் தூசி, மாசு, உணவு & வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக சருமத்தில் பருக்கள், எண்ணெய் பசை, Black Heads போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. இவற்றை சரி செய்ய சரும பராமரிப்பு போதும். க்ரீம்கள், பேஸ்வாஷ் போன்றவற்றை அதிகமாக பயன்படுத்தினால், மேலும் பிரச்னைகள் தான் எழும். உங்களுக்கும் நல்ல அழகான சருமம் வேண்டும் என்றால் இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க.

News July 10, 2025

மல்லை சத்யா வெளியேறலாம்.. வைகோ திடீர் காட்டம்

image

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா வெளியேறினால் எந்த தாக்கமும் கட்சிக்கு இருக்காது என வைகோ தெரிவித்துள்ளார். துரை வைகோ, மல்லை சத்யா இடையே சமரசம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், துரோகம் இழைத்துவிட்டு கட்சியில் இருந்து வெளியேறிய சிலருடன் சத்யா கை கோர்த்து செயல்படுவதாக வைகோ குற்றம்சாட்டியுள்ளார். மல்லை சத்யா இனி தனது விருப்பப்படி முடிவெடுக்கலாம் எனவும் வைகோ கூறியுள்ளார்.

News July 10, 2025

கண்ணை மறைத்த காமம்.. கணவன் கொடூரக் கொலை!

image

முறையற்ற உறவால் கணவன்கள் கொல்லப்படும் கொடூர சம்பவங்கள் தொடர்கதையாக நீண்டு கொண்டே இருக்கின்றன. உ.பி.யில் மனைவி ஷீபா, ஃபர்மான் என்பவருடன் நெருங்கிப் பழகியதை கணவன் இம்ரான் கண்டித்துள்ளார். இதனால், காதலனுடன் சேர்த்து கணவனை தீர்த்துக் கட்டிய ஷீபா, கழுத்தை அறுத்து தலையில்லாத உடலை சாக்கடையில் வீசியுள்ளார். போலீஸ் கிடுக்கிப்பிடி விசாரணையில் சிக்கிய அவர், தற்போது காதலனுடன் கம்பி எண்ணுகிறார்.

News July 10, 2025

VIRAL: 79 வயது காதலனை கரம் பிடித்த 75 வயது காதலி!

image

காதல் எப்போது வரும் என்பது தெரியாது என்பதற்கு இந்த செய்தியும் ஒரு சாட்சி. பிள்ளைகள் கைவிடப்பட்டு முதியோர் இல்லத்தில் தவித்த விஜயராகவன் (79) & சுலோச்சனா (75) ஆகியோருக்கு இடையே காதல் பூ பூத்துள்ளது. திருமணம் செய்து கொள்ள விரும்ப, அவர்களது திருமணம் இனிதே நடந்தேறியுள்ளது. கேரளாவின் ராமவர்மபுரத்தில் முதியோர் இல்லத்திலேயே நடந்த இந்த காதல் திருமணம் சொல்வது ஒன்றை தான்.. காதலிக்க எதுவும் தடையில்லை!

News July 10, 2025

சூப்பர் பக் மூன் பார்க்கலாமா? இன்று இரவு ரெடியா இருங்க!

image

சூப்பர் பக் மூன் பார்க்க எல்லாரும் ரெடியா? இன்று இந்தியாவில் தெரிகிறதாம். இந்த முழு நிலவின் அழகை நாட்டின் எந்த மூலையிலிருந்தும் இன்று (ஜூலை 10) இரவு 7.42 மணிக்கு கண்டு ரசிக்கலாம். இந்த நிகழ்வு ஏன் இந்தப் பெயரில் அழைக்கப்படுகிறது தெரியுமா? ஆண் மான்களின் கொம்புகள் இந்த ஜூலை மாத முழு நிலவு நாளிலே வளரத் தொடங்கும் என்பதால் இவ்வாறு கூறப்படுகிறதாம். நீங்கள் தயாரா?

News July 10, 2025

அதிமுக மூத்த நிர்வாகி நீக்கம்.. தொடரும் இபிஎஸ் நடவடிக்கை

image

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அதிமுகவை தயார்படுத்தும் வகையில், நிர்வாகிகளை பதவிகளில் இருந்து அடுத்தடுத்து இபிஎஸ் நீக்கி வருகிறார். அந்த வரிசையில் தற்போது அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளராக இருந்த எஸ்.எம்.மாரிமுத்துவை அவரது பொறுப்பில் இருந்து இபிஎஸ் விடுவித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதேபோல் மேலும் சில நிர்வாகிகளை இபிஎஸ் விரைவில் நீக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

error: Content is protected !!