News August 16, 2025

அஸ்வின் பேச்சுக்கு CSK பதிலடி

image

2025 IPL சீசனில் டெவால்ட் ப்ரேவிஸை விதிகளின் படி, ₹2.2 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்ததாக CSK விளக்கம் அளித்துள்ளது. கடந்த IPL தொடரின் போது குர்ஜப்னீத் சிங் காயமடைந்தார். அவருக்கு மாற்று வீரராக ப்ரேவிஸை, CSK கூடுதல் தொகை கொடுத்து ஏலத்தில் எடுத்ததாக அஸ்வின் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒரு வீரர் காயம்பட்டால், அவருக்கு கொடுக்கப்பட்ட தொகையையே மாற்று வீரருக்கும் கொடுக்க வேண்டும் என்பது IPL விதி.

News August 16, 2025

பெண்களுக்கு இலவச ஸ்கூட்டர்? PIB FACTCHECK

image

அனைத்து பெண்களுக்கும் இலவச ஸ்கூட்டி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதாகவும், அதற்கு உடனே விண்ணப்பிக்கலாம் எனவும் ஒரு தகவல் சோஷியல் மீடியாவில் உலா வருகிறது. அது உண்மையல்ல என்று மத்திய அரசின் PIBFactCheck மறுத்துள்ளது. ‘இலவச ஸ்கூட்டி திட்டம்’ என்று எந்த திட்டமும் இல்லை. அரசு உறுதிப்படுத்தாத எந்த தகவலையும் நம்பாதீர், யாருக்கும் ஷேர் செய்யவும் வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

News August 16, 2025

SIR சர்ச்சை: வாய் திறக்கும் தேர்தல் ஆணையம்..

image

பாஜகவுடன் சேர்ந்து தேர்தல் ஆணையம்(EC) வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி, பிஹாரில் இருந்து நாளை (ஆக., 17) வாக்காளர்களின் அதிகாரப் பயணத்தை ராகுல் காந்தி தொடங்கவிருக்கிறார். இந்நிலையில், அதே நாளில் (ஆக., 17) பிற்பகல் 3 மணிக்கு செய்தியாளர்களை சந்திப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ராகுலின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News August 16, 2025

TN பற்றிய இந்த தகவல்கள் 99% இந்தியர்களுக்கு தெரியாது..

image

▶இந்தியாவில் உடலுறுப்பு தானத்தில் TN முதலிடம்.
▶அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் மாநிலமாக இருக்கிறது TN.▶அதிக தொழிற்சாலைகள் இருக்கும் இடம் TN(39,000+)▶இந்தியாவுக்கான 80% பட்டாசுகள் சிவகாசியில் தயாரிக்கப்படுகின்றன.▶இந்தியாவின் முதல் ஷாப்பிங் மால்(ஸ்பெஸர் பிளாசா), முதல் உயிரியல் பூங்கா(அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா) முதல் பெரிய அணுமின் நிலையம் (கூடன்குளம்) TN-ல் உருவாக்கப்பட்டது.

News August 16, 2025

CM தொகுதியில் ஒரே வீட்டில் 30 வாக்காளர்கள்? உண்மை என்ன?

image

CM ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் ஒரே வீட்டில் 30 வாக்காளர்கள் இருப்பதாக பாஜக MP அனுராக் தாக்கூர் கூறியது பொய்யான தகவல் என TN Fact Check விளக்கம் அளித்துள்ளது. பாஜக MP கூறிய அவென்யூ எண் 11 என்பது தனி வீடல்ல, அது அடுக்குமாடி குடியிருப்பு எனவும், 30 வாக்காளர்கள் வெவேறு வீடுகளில் வசிப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், அங்கு முஸ்லிம் மட்டுமல்ல, அனைத்து மதத்தினரும் வசிப்பதாகவும் கூறியுள்ளது.

News August 16, 2025

இனி அந்த மாதிரி கேரக்டரில் நடிக்க மாட்டேன்: அனுபமா

image

‘தில்லு ஸ்கொயர்’ தெலுங்கு படத்தில் அதிக கிளாமர் காட்டியதால், எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்டதாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார். அதீத கவர்ச்சி தனக்கு பிடிக்கவில்லை என்றாலும், கதைக்கு தேவைப்பட்டதால் நடித்ததாகவும், அது தன்னுடைய ரியல் கேரக்டருக்கு எதிரானது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இனி இதுபோன்ற படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

News August 16, 2025

ஆக.22-ல் தமிழகம் வரும் அமித்ஷா!

image

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 22-ம் தேதி தமிழகம் வரவிருக்கிறார். நெல்லையில் நாளை(ஆக.17) நடைபெற இருந்த பாஜக பூத் முகவர்கள் மாநாடு, நாகலாந்து கவர்னர் இல.கணேஷன் மறைவையடுத்து வரும் 22-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. அதில் கலந்துகொள்ளவே அமித்ஷா வருகை தர உள்ளார். முன்னதாக, கடந்த ஜூன் மாதம் மதுரையில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பேசிய அவர், இனி ஒவ்வொரு மாதமும் தமிழகம் வரவிருப்பதாக கூறியிருந்தார்.

News August 16, 2025

தொப்பை குறைய ஸ்கிப்பிங் செய்யுங்க…

image

உடல் எடை குறைத்து ஃபிட்டாக வைத்துக்கொள்ள ஓட்டம், நடைபயிற்சியை விட ஸ்கிப்பிங் சிறந்தது. ஸ்கிப்பிங் செய்யும்போது ஒரு நிமிடத்துக்கு தோராயமாக 15 – 20 கலோரிகள், அதாவது 30 நிமிடங்களில் 400 கலோரி வரை எரிக்கப்படும். இதனால் உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும், தசைகள், எலும்புகள் மற்றும் உள்ளுறுப்புகள் பலம் பெறும். உடல் சமநிலை அதிகரிக்கும். இதயம் பலம் பெற்று, உங்கள் சுவாசத் திறன் அதிகரிக்கும்.

News August 16, 2025

GOOD NEWS: பெற்றோர்களே, இதை கவனிங்க!

image

வீடுகள், பள்ளிகளுக்கு வெளியே இயற்கை சூழல்களில் குழந்தைகள் விளையாடுவது, அவர்களின் உடல் மற்றும் மனநலத்துக்கு பெரும் நன்மை செய்வதாக அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலை., விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். `வெளியே’ என்பது கட்டடத்துக்கு வெளியே என்பதல்ல, மரம், செடிகள் மற்றும் இயற்கை தன்மை மிகுந்த இடங்களாக இருக்க வேண்டும் என்கின்றனர். எப்போதும் ஸ்மார்ட்போனுடன் தலை கவிழ்ந்திருக்கும் நம் குழந்தைகளின் நிலை?

News August 16, 2025

10 விநாடி விளம்பரத்திற்கு ₹16 லட்சம்

image

2025 ஆசிய கோப்பை தொடர் வரும் செப்., 9-ம் தேதி தொடங்கவுள்ளது. இத்தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகளின்போது வரும் விளம்பரங்களுக்கு அதிக டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக IND vs PAK மோதும் போட்டிகளின்போது, 10 விநாடி விளம்பரங்களுக்கு ₹14 முதல் ₹16 லட்சம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிவி, டிஜிட்டல் என இந்த தொடரின் முழு ஒளிபரப்பு உரிமமும் சோனி பிக்சர்ஸ் நிறுவனம் வசம் உள்ளது.

error: Content is protected !!