News April 28, 2025

மோசமான ஃபார்ம் குறித்து பண்ட் விளக்கம்

image

நடப்பு ஐபிஎல் சீசனில் மோசமான ஃபார்ம் குறித்த கேள்விக்கு, இது பற்றி அதிகமாக யோசிக்கவில்லை என LSG கேப்டன் ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார். இதுபோன்ற ஒரு சீசனில், நமக்கு சாதகமாக நடக்காதபோது, ஒரு வீரராக நம் மீது கேள்வி எழுவது உண்மைதான், ஆனால் அதை பற்றி மட்டும் தீவிரமாக யோசிக்க கூடாது எனவும், இது ஒரு டீம் விளையாட்டு என்பதால், தனி வீரர்களை மட்டுமே எப்போதும் நம்ப முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

News April 28, 2025

டிரெஸ்ஸை கழட்டிட்டு உட்கார சொன்னாரு: நடிகை பகீர்

image

நடிகை நவீனா போலே பாலிவுட் இயக்குநர் சஜித் கான் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 2004-ம் ஆண்டில் நடந்த முதல் சந்திப்பிலேயே டிரெஸ்ஸை கழட்டிவிட்டு தன் முன் உட்கார சொன்னதாகவும், டிரெஸ் இல்லாமல் தனது உடல் எப்படி இருக்கும் என்பதை பார்க்க விரும்புவதாக சஜித் கூறியதாகவும் நடிகை குற்றஞ்சாட்டியுள்ளார். உடனே அந்த அறையை விட்டு வெளியேறியதாகவும் தெரிவித்துள்ளார்.

News April 28, 2025

ஏப்ரல் 28: வரலாற்றில் இன்று

image

*1876 – பிரிட்டன் இந்தியாவின் அரசியாக விக்டோரியா மகாராணி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. *1925 – நீதிக்கட்சி நிறுவனர் சர் பிட்டி தியாகராயர் இறந்தநாள். *2000 – இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான விடுதலைப் புலிகளின் தொடர் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தது. *1987 – நடிகை சமந்தா பிறந்தநாள். *உலக தொழிலாளர் நினைவு நாள்.

News April 28, 2025

3 ஆண்டுகள் சிறை.. பாக். குடிமக்களுக்கு எச்சரிக்கை!

image

நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு முடிவதற்குள் இந்தியாவை விட்டு வெளியேறாத பாகிஸ்தானியர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. கடந்த 4-ம் தேதி அமலான குடியேற்றம் மற்றும் வெளிநாட்டவர் சட்டத்தின்படி, 3 ஆண்டுகள் சிறை அல்லது ₹3 லட்சம் அபராதம் அல்லது இது இரண்டுமே விதிக்கப்படும் என கூறியுள்ளது. மெடிக்கல் விசாவில் இந்தியாவில் இருப்பவர்களுக்கு நாளையே கடைசி நாளாகும்.

News April 28, 2025

சிறுநீரை குடித்து காயத்தில் இருந்து மீண்ட நடிகர்!

image

தனது சொந்த சிறுநீரை குடித்து முழங்கால் காயத்தில் இருந்து குணமானதாக பாலிவுட் நடிகர் பாரேஷ் ராவல் தெரிவித்துள்ளார். பட ஷூட்டிங்கின் போது காலில் காயம் ஏற்பட்டதாகவும், அப்போது மறைந்த இயக்குநர் வீரு தேவ்கன் தன்னை சந்தித்து, தினமும் எழுந்ததும் சிறுநீரை குடிக்கச் சொன்னதாகவும் அவர் கூறியுள்ளார். 15 நாள்கள் தொடர்ந்து குடித்துவிட்டு, டாக்டரை பார்க்கச் சென்றபோது, அவரே ஆச்சரியப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

News April 28, 2025

பாஜகவிற்கு ஆதரவாக பேசிய சசிதரூர்.. காங். பதிலடி

image

J&K தீவிரவாத தாக்குதலுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று கூறுவதை நிறுத்திவிட்டு, தற்போதைய நெருக்கடியை தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என காங். எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் – ஹமாஸ் போரை முன்னுதாரணம் காட்டி, அனைத்து நாடுகளிலும் பாதுகாப்பு குறைபாடு இருக்கத்தான் செய்யும் எனவும் அவர் கூறியுள்ளார். ஆனால், பக்கா பாஜககாரர் போல அவர் பேசுவதாக காங். பதிலடி கொடுத்துள்ளது.

News April 28, 2025

நெல்சன் மண்டேலா பொன்மொழிகள்

image

*ஞானிகள் அமைதியாக இருக்கும்போது முட்டாள்களின் எண்ணிக்கை பெருகும். *செய்து முடிக்கும் வரை மட்டுமே அது சாத்தியமற்றதாகத் தோன்றும். *என் வெற்றியை வைத்து என்னை மதிப்பிடாதீர்கள். எத்தனை முறை கீழே விழுந்து மீண்டும் எழுந்தேன் என்பதை வைத்து மதிப்பிடுங்கள். *இந்த உலகை மாற்றுவதற்கான மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் கல்வி. *பின்னால் இருந்து வழிநடத்துங்கள் – மற்றவர்கள் தாங்கள் முன்னால் இருப்பதாக நம்பட்டும்.

News April 28, 2025

இந்தியா vs பாக்.. உன்னிப்பாக கவனிக்கிறோம்: சீனா

image

இந்தியா – பாக். இடையேயான பதற்றமான சூழலை உன்னிப்பாக கவனித்து வருவதாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார். நிலைமை குறித்து பாக். வெளியுறவு அமைச்சர் முகமது இஷக்குடன் ஆலோசித்த பின்னர் அவர் கூறும்போது, தீவிரவாத தாக்குதல் தொடர்பான பாக். அரசின் விசாரணையை ஆதரிப்பதாகவும், இருதரப்பும் கட்டுப்பாட்டுடன் நடப்பதுடன், பதற்றத்தை தணிக்க இணைந்து செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

News April 28, 2025

விரைவில் உருவாகும் நாட்டின் முதல் AI..!

image

இந்தியாவின் முதல் உள்நாட்டு AI அடித்தள மாதிரியை உருவாக்க சர்வம் AI நிறுவனத்தை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. 67 நிறுவனங்களிடம் இருந்து திட்ட அறிக்கை பெறப்பட்ட நிலையில், மேற்கூறிய நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வம் AI, கடந்த 2023-ல் தொடங்கப்பட்டது. இதன் நிறுவனர்களில் ஒருவரான விவேக் ராகவன், ஆதார் அமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியவர்.

News April 28, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: இன்னாசெய்யாமை ▶குறள் எண்: 320 ▶குறள்: நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர். ▶பொருள்: தீங்கு செய்தவருக்கே தீங்குகள் வந்து சேரும்; எனவே தீங்கற்ற வாழ்வை விரும்புகிறவர்கள், பிறருக்குத் தீங்கிழைத்தல் கூடாது.

error: Content is protected !!