News August 16, 2025

Way2News விநாடி வினா கேள்வி பதில்கள்

image

கேள்விகள்:
1. இந்தியாவில் எந்த மாநிலம் ‘மசாலாப் பொருள்களின் தோட்டம்’ என்று அழைக்கப்படுகிறது?
2. பெண்கள் நாடாளுமன்றத்துக்கு முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு?
3. விதையின் எப்பகுதி தண்டாக வளர்கிறது?
4. மியான்மர் நாட்டின் பழைய பெயர்?
5. எவர் கையிலும் சிக்காத கல், எங்கும் விற்காத கல் அது என்ன?
பதில்கள் மதியம் 12:30 மணிக்கு Way2News-ல் வெளியிடப்படும்.

News August 16, 2025

தலைமைச் செயலகத்தில் ED ரெய்டு?

image

அமைச்சர் ஐ.பெரியசாமிக்குச் சொந்தமான இடங்களில் காலை முதல் ED சோதனை நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையிலும் சோதனை நடத்தலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. அத்துடன், அவரது அறைக்குச் செல்லும் நுழைவாயிலுக்கு தலைமைச் செயலக அதிகாரிகள் பூட்டு போட்டுள்ளனர்.

News August 16, 2025

திருவாரூர் அர.திருவிடம் காலமானார்

image

திக – திமுகவினரால் பெரிதும் போற்றப்படும் திருவாரூர் அர.திருவிடம் காலமானார். பெரியாரின் தொண்டன், கருணாநிதி, ஸ்டாலினின் ஆதரவாளரான அவர், தேர்தல் நேரத்தில் திமுக வெற்றிக்காக தீவிர பரப்புரை மேற்கொண்டவர். ‘கலைஞரின் காலடிச் சுவடுகள்’, ‘திமுக பெற்ற வெற்றிகளும் வீரத்தழும்புகளும்’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். சமீபத்தில் அவரின் ‘திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை’ நூலை உதயநிதி வெளியிட்டிருந்தார்.

News August 16, 2025

யார் இந்த ஐ.பெரியசாமி?

image

‘MGR-ஐ வத்தலகுண்டுக்குள் வரவிட மாட்டேன்’ என 1973-ல் கூறி கவனம்பெற்று, திமுக ஒன்றிய தலைவரானவர் ஐ.பெரியசாமி. ஆத்தூர் MLA-வாக 1989-ல் முதல்முறையாக சட்டப்பேரவையில் நுழைந்தவர், பின்னர் மாவட்டச் செயலாளராகவும் கட்சியில் உயர்வு பெற்றார். 1996-ல் முதல்முறையாக அமைச்சராகப் பதவியேற்ற அவர், 2009 வரை மு.க.அழகிரியுடன் நெருக்கம் காட்டினார். அதன்பிறகு, தற்போது வரை ஸ்டாலினின் தீவிர ஆதரவாளராக வலம் வருகிறார்.

News August 16, 2025

இன்று வாஜ்பாயின் நினைவு தினம்!

image

Ex PM அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் நினைவு தினம் இன்று. மக்கள் நலனே தனது அரசியலின் நோக்கமாகக் கொண்டு பணியாற்றியவர், பல நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா மூலம் கிராமங்களுக்கு சாலை, சர்வஜனிக் கல்வி திட்டம் மூலம் கல்வி, – அந்த்யோதயா அன்ன யோஜனா மூலம் குறைந்த விலையில் அரிசி, கோதுமை வழங்கும் திட்டம் என மக்களுக்காக பல திட்டங்களை நிறைவேற்றியவர்.

News August 16, 2025

எத்தகைய சீர்கேட்டிலும் பாஜக ஈடுபடும்: கார்கே

image

ஆட்சியில் தொடர எத்தகைய சீர்கேட்டிலும் பாஜக ஈடுபடுமென கார்கே காட்டமாக விமர்சித்துள்ளார். பிஹாரில் 65 லட்சம் பேரின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய அவர், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் யார் பலனடைகின்றனர் என்பது தெளிவாகி உள்ளதாக தெரிவித்தார். மேலும், மோசடிகளை அம்பலப்படுத்தும் எதிர்க்கட்சிகளின் போராட்டம் ஜனநாயகம், அரசியலமைப்புச் சட்டத்தை காப்பதற்கானது எனக் கூறினார்.

News August 16, 2025

PAN கார்டு அப்ளை பண்றீங்களா.. இத கவனியுங்க!

image

பான் கார்டு சேவைகளை பெற விரும்புவோர் இத்தகவலை கவனித்துக் கொள்ளுங்கள். இன்று நள்ளிரவு(ஆகஸ்ட் 17) 12 மணி முதல் ஆகஸ்ட் 19-ம் தேதி வரை வருமான வரித்துறையின் இணையதளம் வேலை செய்யாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இணையதளத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக, சேவைகள் நிறுத்தப்படுகிறது. எனவே, சேவைகளை பெற விரும்புவோர் 3 தினங்கள் கழித்து விண்ணப்பிக்கும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News August 16, 2025

அனிருத்துக்கு திருமணம்? தந்தை பதில்

image

அனிருத்துக்கு எப்போது திருமணம் என்ற டாபிக் மீண்டும் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், ‘கூலி’ படம் பார்க்க வந்த அவரது தந்தையும், நடிகருமான ரவி ராகவேந்திராவிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது. அதற்கு, தனக்கு அதைப் பற்றி தெரியவில்லை என்றார். உங்களுக்கு (செய்தியாளர்கள்) தெரிந்தால் சொல்லுங்கள், என்னையும் கூப்பிடுங்கள் என கிண்டலாக கூறியுள்ளார். ஏற்கெனவே காவ்யா மாறனுடன் அனிருத் கிசுகிசுக்கப்பட்டார்.

News August 16, 2025

கழிப்பறை பற்றாக்குறை: கங்கனா ரனாவத்

image

அரசியல் வாழ்க்கை சற்று கடினமாக இருப்பதாக ஏற்கெனவே பாஜக MP கங்கனா ரனாவத் கூறியிருந்தார். இந்நிலையில், அரசியல் சுற்றுப்பயணங்களின் போது கழிப்பறை பற்றாக்குறை உள்ளதாக தெரிவித்துள்ளார். சினிமாவில், பெண்கள் மாதவிடாய் நேரத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் நாப்கின்களை மாற்ற நேரமும், இடமும் இருக்கும் என்ற அவர், அரசியலில் அதன் நிலைமை தலைகீழாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். உங்கள் கருத்து என்ன?

News August 16, 2025

ஒருபுறம் ED ரெய்டு .. மறுபுறம் ஸ்டாலின் ஆலோசனை

image

அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது மகனும் MLA-வுமான செந்தில்குமார் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ED ரெய்டு நடந்து வருகிறது. குறிப்பாக, MLA விடுதியில் உள்ள செந்தில்குமார் அறையின் பூட்டை உடைத்து ED அதிகாரிகள் சோதனையில் ஈடுபட முடிவெடுத்துள்ளனர். இந்த பரபரப்பு ரெய்டுக்கு மத்தியில், மு.க.ஸ்டாலின் கட்சியினருடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!