India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கும்பமேளா நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்த சம்பவத்தை, மரண கும்பமேளா என மே.வங்க CM மம்தா விமர்சித்திருந்தார். இந்நிலையில், பர்கானாஸில் ஹோலியின்போது ஏற்பட்ட மோதலில் இளைஞர் பலியானதை சுட்டிக்காட்டியுள்ள உ.பி CM யோகி ஆதித்யநாத், சிறிய தொந்தரவுகளை கூட கட்டுப்படுத்த முடியாதவர்கள், மகாகும்பமேளாவை விமர்சிக்கின்றனர் என்றார். நடந்தது மரண கும்பமேளா இல்லை; மரணத்தை வென்ற கும்பமேளா என்றும் கூறியுள்ளார்.
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் 9 மாதங்களாக தவித்து வந்த சுனிதா வில்லியம்ஸ் நாளை பூமிக்கு திரும்புவார் என நாசா உறுதிப்படுத்தியுள்ளது. ஸ்பேஸ்X விண்கலம் மூலம் ISSல் இருந்து சுனிதா வில்லியம்ஸூம், புட்ச் வில்மோரும் உள்ளூர் நேரப்படி நாளை மாலை 5.57 மணிக்கு பூமிக்கு திரும்புவார்கள். அதன் பின் கேப்சூல் மூலம் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள கடற்கரையில் தரையிறக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை பிந்துகோஷ் சிகிச்சைக்காக உதவி கேட்டும், முன்னணி நடிகர்கள் யாரும் உதவி செய்யவில்லை. தவிர, அவர் இறந்துவிட்டதாக பல முறை வதந்திகள் தான் வந்தன; ஆனால், இப்போது நிஜமாகவே பிரிந்து சென்றுவிட்டார். அவரது கடைசி நொடிகளும், கண்ணீரும் வலியுமாய் கரைந்துவிட்டது. அவர் மறைவை அடுத்து, ‘வாழும்போது நிம்மதியில்லாமல் வாழ்ந்த நீங்கள், இனியாவது நிம்மதியாக உறங்குங்கள்’ என பலரும் இரங்கல் தெரிவிக்கின்றனர்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் பெயரை பயன்படுத்தி தன்னிடம் ₹2.8 கோடி மோசடி செய்யப்பட்டிருப்பதாக 60 வயது மூதாட்டி புகார் தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபரான அவர், காபி பவுடர் கம்பெனிக்கு கிறிஸ் கெயில் தான் புரமோட்டராக இருந்து முதலீடுகளை ஈர்ப்பதாக கூறி மோசடி செய்ததாக கூறியுள்ளார். இதில் தனது சகோதரர் உள்பட 6 பேர் உடந்தையாக இருந்ததாகவும் புகார் அளித்துள்ளார்.
ஆறுமுககுமார் இயக்கத்தில் விஜய்சேதுபதியின் 51வது படமாக உருவாகும் ‘Ace’ படத்தின் முதல் பாடலான ‘உருகுது உருகுது’ பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது. டைட்டில் டீசர் வெளியானதில் இருந்தே இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கோடை விடுமுறையில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குரூப்-1, குரூப்-4 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் அடுத்த மாதம் வெளியிடப்படும் என TNPSC தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார். 2024இல் வெளியிடப்பட்ட நடப்பாண்டுக்கான தேர்வு திட்டத்தில் குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட 7 தேர்வுகள் இடம்பெற்றுள்ளன. திட்டமிட்டபடி ஏப். மாதத்தில் குரூப்-1, குரூப்-4 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. குரூப்-4 தேர்வு எழுத நீங்கள் ரெடியா?
வெளிமாநிலங்களிலிருந்து காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளதால் மாநிலம் முழுவதும் பரவலாக காய்கறிகள் விலை சரிவைக் கண்டுள்ளது. இதனால், ஒட்டன்சத்திரம் சந்தையில் வரலாறு காணாத வகையில் பச்சை மிளகாய் விலை கிலோ ₹10ஆக குறைந்துள்ளது. அதேபோல், தருமபுரியின் வெள்ளிச்சந்தை, கிருஷ்ணகிரியின் ராயக்கோட்டையில் ஒரு கிலோ தக்காளி ₹3க்கு விற்பனையாவதால் விவசாயிகள் கண்ணீருடன் சாலையோரங்களில் கொட்டிச் செல்கின்றனர்.
சந்திரயான் 5 திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியுள்ளார். சந்திரயான் 3 திட்டம் மூலம் 25 கிலோ எடை கொண்ட பிரக்யான் ரோவரும், விக்ரம் லேண்டரும் நிலவுக்கு கொண்டு செல்லப்பட்டது. சந்திரயான் 5 திட்டத்தில் 250 கிலோ ரோவர் எடுத்துச் செல்லப்படும். ஜப்பான் உதவியுடன் இந்த திட்டம் முடிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
TN சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. சட்டப்பேரவை கூடியதும் மறைந்த எம்எல்ஏக்கள் மற்றும் டாக்டர் செரியன் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, கேள்வி நேரம் தொடங்கும். அதன் பின் அதிமுக சார்பில் சபாநாயகர் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு கோரப்படலாம். உடனடியாக அதை ஏற்கும்பட்சத்தில் துணை சபாநாயகர் அவையை வழிநடத்திச் செல்வார்.
TNல் வெப்பத்தின் தாக்கம் இன்று முதல் ஒரு வாரத்துக்கு அதிகரிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். மேற்கு மற்றும் உள்மாவட்டங்களில் அதன் தாக்கத்தை அதிகமாக உணர முடியுமாம். குறிப்பாக திருப்பத்தூர், வேலூர், ஈரோடு, கரூர், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயரக்கூடும் என கூறப்படுகிறது. வெளியே செல்லும்போது குடையை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்.
Sorry, no posts matched your criteria.