India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
எதிரெதிர் துருவங்களாக திரும்பியிருக்கும் EPS, OPS & செங்கோட்டையன் மூவரும் இன்று சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக ஒரே அணியில் நின்றனர். சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத்தலைவர் R.B. உதயகுமார் கொண்டுவந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் செங்கோட்டையனும், ஓ.பன்னீர்செல்வமும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். இருப்பினும், வாக்கெடுப்பில் தீர்மானம் தோல்வி கண்டது.
டாஸ்மாக்கிற்கு எதிரான பாஜகவின் போராட்டத்தை வரவேற்பதாக, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிகவின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். கூட்டணிக் கட்சியாக இருந்தாலும், மது ஒழிப்பு வாக்குறுதியை நிறைவேற்ற திமுகவை வலியுறுத்தி வருகிறோம் எனக் குறிப்பிட்ட அவர், மதுபானம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். அதுதான் எங்களின் கொள்கை, அதற்கு ஆதரவாக யார் குரல் கொடுத்தாலும் வரவேற்போம் என்றும் கூறியுள்ளார்.
2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை டாஸ்மாக் ஊழல் பணத்தை வைத்து திமுக நடத்த திட்டமிட்டுள்ளதாக, <<15788153>>அண்ணாமலை <<>>குற்றம் சாட்டியுள்ளார். செந்தில் பாலாஜி என்ன உத்தமரா?, காந்தியவாதி போல் திமுகவினர் வேடமிடுகின்றனர் என்று விமர்சித்த அவர், தலை முதல் கால் வரை ஊழல் ஆட்சி நடைபெறும் அமைச்சரவையில் உள்ளவர்தான் செந்தில் பாலாஜி என்றும் சாடியுள்ளார்.
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்த நிலையில், அப்பாவு மீண்டும் தனது இருக்கையில் அமர்ந்தார். தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பின்னர், அப்பாவு அவையை விட்டு வெளியேறினார். தற்போது, மீண்டும் இருக்கையில் அமர்ந்திருக்கும் அவர், “தவறு செய்திருந்தால் நானே திருத்தியிருப்பேன். அல்லது முதல்வரால் திருத்தப்பட்டிருப்பேன்” என்று பேசினார்.
சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக, அதிமுகவினர் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம், டிவிஷன் வாக்கெடுப்பிலும் தோல்வியடைந்தது. தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்ட பின்னர், துணை சபாநாயகர் நடத்திய குரல் வாக்கெடுப்பில் அது தோல்வி கண்டது. பின்னர், EPS கோரிக்கையை ஏற்று நடத்தப்பட்ட டிவிஷன் வாக்கெடுப்பிலும் தீர்மானம் தோல்வி கண்டுள்ளது. தீர்மானத்துக்கு ஆதரவாக 63 பேரும் எதிராக 154 பேரும் வாக்களித்தனர்.
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை டிவிஷன் முறையில் நடத்த வேண்டும் என்று இபிஎஸ் வலியுறுத்தினார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின், கடந்த கால சம்பவங்களுக்கும், அப்பாவுவிற்கும் என்ன சம்பந்தம் என கேள்வி எழுப்பிய அவர், நாங்களும் பேச ஆரம்பித்தால் அவையில் மீண்டும் கூச்சல் ஏற்படும். இதனால் அமைதியாக இருக்கிறோம் என்று இபிஎஸ்-க்கு பதிலடி கொடுத்தார்.
சபாநாயகர் அப்பாவு கனிவானவர், கண்டிப்பானவர் என CM ஸ்டாலின் புகழ்ந்துள்ளார். சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது உரையாற்றிய அவர், ஜனநாயக கொள்கையில் நம்பிக்கை உடையவர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீதும் பாசமும், பற்றும் உடையவர் என பாராட்டியுள்ளார். உண்மைக்கு முரணான செய்திகள் தீர்மானத்தில் உள்ளன. எதிர்க்கட்சியினரின் அம்பை இந்த அவை ஏற்காது என தெரிவித்தார்.
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்ததாக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி அறிவித்துள்ளார். அதிமுகவினர் கொண்டுவந்த இந்த தீர்மானத்தின் மீது காலை முதல் விவாதம் நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பை அப்பாவுவே நடத்த முடியாது என்பதால் பிச்சாண்டி நடத்தினார். அப்போது, குரல் வாக்கெடுப்பில், தீர்மானத்திற்கு எதிரான வாக்குகள் அதிகம் வந்ததால் தீர்மானம் தோல்வியடைந்தது.
சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பை டிவிஷன் முறையில் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் EPS கோரிக்கை வைத்துள்ளார். தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியவுடனே சபாநாயகர் அப்பாவு வெளியேறிவிட்டார். இந்நிலையில், பேரவைச் செயலாளர் முன்னிலையில் டிவிஷன் முறை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அதிமுக முன்வைத்துள்ளது.
இந்தியாவின் முன்னணி நிறுவனமான மாருதி சுசூகி வரும் 1ஆம் தேதி முதல் கார்கள் விலையை 4% வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் பங்குகள் 1.99% உயர்ந்து ₹11,737.10 ஆக BSE சந்தையில் வர்த்தகமாகிறது. மாருதி சுசூகி பிப்ரவரி 2025 மாதத்தில் மொத்தமாக 1,99,400 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டு அதே மாதத்தில் விற்பனையான 1,97,471 யூனிட்களை விட, 0.97% அதிகமாகும்.
Sorry, no posts matched your criteria.