News March 17, 2025

அதிக நேரம் ரம்ஜான் நோன்பு இருப்பவர்கள் யார் தெரியுமா?

image

ரம்ஜான் மாதத்தில் அதிகாலை முதல் மாலை வரை உண்ணாமல், நீர் அருந்தாமல் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள். சூரிய உதயம், மறைவை பொறுத்து ஒவ்வொரு நாட்டிலும் நோன்பு நேரம் மாறுபடுகிறது. கிரீன்லாந்து, ஐஸ்லாந்து நாட்டு மக்கள் ஒருநாளில் 16 மணி 30 நிமிடங்கள் நோன்பு இருக்கிறார்களாம். இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் 13 மணி 45 நிமிடங்கள் நோன்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

News March 17, 2025

காலமானார் முன்னாள் மத்திய அமைச்சர்

image

முன்னாள் மத்திய அமைச்சரும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தந்தையுமான தேபேந்திர பிரதான் மரணம் அடைந்துள்ளார். 84 வயதான அவர் டெல்லியில் உள்ள அவரது மகனின் இல்லத்தில் உடல்நலக் குறைவால் காலமானார். MBBS படித்த தேபேந்திர பிரதான், தனது பாதையை அரசியல் பக்கம் திருப்பினார். 1998 – 2001 காலகட்டத்தில் வாஜ்பாய் அரசில் மத்திய சாலை போக்குவரத்து, வேளாண்துறை இணையமைச்சராக அவர் பதவி வகித்துள்ளார்.

News March 17, 2025

அதிமுகவில் பிளவா? இபிஎஸ் பதில்

image

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இபிஎஸ்சிடம் அதிமுகவில் பிளவு ஏற்படப் போவதாக வெளியாகும் செய்திகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், அதிமுகவில் பிளவு எதுவும் இல்லை என்று கூறினார். தாம் முதல்வரானது முதல் அதிமுகவை உடைக்க முயற்சி நடந்ததாகவும், ஆனால் அது நடக்கவில்லை என்றும், அதிமுகவை உடைக்க நினைப்பவர்கள்தான் உடைந்து போவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

News March 17, 2025

வந்தே பாரத் ரயில் வேகம் குறைய என்ன காரணம்?

image

நவீனமடைந்து வரும் இந்திய ரயில்வே, அதிவேக சேவையை வழங்க வந்தே பாரத் ரயிலை அறிமுகம் செய்தது. மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. ஆனால், அதன் வேகம் குறைக்கப்பட்டதால் பார்லிமென்டில் இது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில் மீது எந்த குறையும் இல்லை; தண்டவாள உள்கட்டமைப்புகள் தான் அப்டேட் செய்ய வேண்டியிருக்கிறது என்றார்.

News March 17, 2025

அப்பாவு மாறவே இல்லை: EPS

image

சபாநாயகர் அப்பாவு மீண்டும் பழையபடியே செயல்படுவதாகக் குற்றம்சாட்டி, சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இன்று காலை அவையில் பேசிய EPS, எதிர்க்கட்சித் தலைவர்களின் பேச்சு நேரலை செய்யப்படுவதில்லை என்று புகார் தெரிவித்திருந்தார். ஆனால், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்த பின்னரும் கூட சபாநாயகர், இன்றைய தனது பேச்சை நேரலை செய்யவில்லை என்று EPS சாடியுள்ளார்.

News March 17, 2025

IPLஐ இனி இலவசமாக பார்க்க முடியாது

image

டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் காலம் தொடங்கியதில் இருந்து IPL கிரிக்கெட் போட்டிகளை இலவசமாக கண்டு களித்து வந்த ரசிகர்கள், இனி அதனை கட்டணமின்றி பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமத்தை பெற்றுள்ள ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம், குறைந்தபட்சமாக ஜியோ பயனர்களுக்கு ₹299 ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தில், 90 நாள்கள் ஹாட்ஸ்டார் பயன்படுத்திக் கொள்ளலாம்.

News March 17, 2025

கல்யாணம் செய்ய மறுத்த காதலியை கொன்ற இளைஞர்!

image

போலீஸ் அதிகாரியாகும் கனவில் இருந்த இளைஞர் காதல் விவகாரத்தால் தற்போது கம்பி எண்ணி வருகிறார். தி.மலை கலசபாக்கத்தில் தனியார் பயிற்சி மையத்தில் படித்து வந்த ரோஷினி – சக்திவேலுக்கு காதல் மலர்ந்துள்ளது. ரோஷினி திடீரென சக்திவேலிடம் இருந்து விலகி வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை கல்யாணம் செய்யத் திட்டமிட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சக்திவேல், ரோஷினியை கொலை செய்து உடலை கிணற்றில் வீசியுள்ளார்.

News March 17, 2025

ஆஸ்கர் விருது… அசத்தலாக பதிலளித்த கங்கனா..

image

நடிகை கங்கனா நடிப்பில் OTTயில் வெளியான எமர்ஜென்சி திரைப்படம் ஆஸ்கர் வெல்லும் என நெட்டிசன்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். ஆனால், இதற்கு கங்கனா அளித்த பதில் தான் சரவெடி. வளர்ந்த நாடுகள் மீது அடக்குமுறையை ஏவிய அமெரிக்காவின் உண்மை முகம் இப்படத்தில் தோலுரிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்நாடு ஆஸ்கர் தர விரும்பாது. ஆஸ்கர் அவர்களிடமே இருக்கட்டும்; நமக்கு தேசிய விருது இருக்கிறது என பதிவிட்டுள்ளார்.

News March 17, 2025

அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து

image

அமைச்சர்கள் பெரியகருப்பன், சிவசங்கர் மீதான வழக்குகளை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கக் கோரி 2018இல் அரியலூரில் போராட்டம் நடத்தியது தொடர்பாகவும், அதேபோல் 2021இல் பதிவான தேர்தல் விதிமீறல் வழக்கை ரத்து செய்யக் கோரியும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், அனுமதியின்றி போராடியது, தேர்தல் வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

News March 17, 2025

இபிஎஸ்-க்கு ஆதரவாக களமிறங்கிய ஓபிஎஸ்

image

சட்டப்பேரவையில் காரசாரமாக விவாதம் நடந்து வரும் நிலையில், EPSக்கு ஆதரவாக OPS குரல் கொடுத்தார். கடன் வாங்காமல் இருக்க அமைத்த குழு என்ன செய்கிறது என இபிஎஸ் கேள்வி எழுப்பினார். அவரின் பேச்சை இடைமறித்து, அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் சொல்ல முயற்சித்தார். இதை பார்த்த உடன், சட்டென்று எழுந்த OPS, கடன்களை மூலதனங்களுக்கே செலவிட வேண்டும் என EPSக்கு ஆதரவாக பேசினார். இதை அங்கிருந்த அனைவரும் உற்று நோக்கினர்.

error: Content is protected !!