News March 17, 2025

அரிய வகை புற்றுநோய்: பிரபல நடிகை மரணம்

image

கான் விருது உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விருதுகளை வென்ற நடிகை எமிலி டெய்க்யூன்(43), உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அட்ரினோ கார்ட்டிகல் கார்சினோமா என்ற அரிதான புற்றுநோயால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். ‘ரோசெட்டா’ படத்துக்கு கான் விருது வென்றதன் மூலம் புகழ்பெற்ற எமிலி, Our Children, The girl on the train உள்ளிட்ட படங்கள் மூலம் பிரெஞ்சு திரையுலகின் முக்கிய நடிகையாக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 17, 2025

அதிமுக பிளவுக்கு இதுதான் காரணம்: மருது அழகுராஜ்

image

அதிமுகவுக்கு சர்வாதிகார ஜனநாயகம் தான் சரியாக வரும் என நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் கருத்து தெரிவித்துள்ளார். இபிஎஸ் – செங்கோட்டையன் இடையே விரிசல் ஏற்பட்டிருப்பதால், அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற சர்வாதிகார தலைமை இல்லாததுதான், இப்படியான பிளவுகளுக்கு காரணம் என மருது அழகுராஜ் கூறியுள்ளார்.

News March 17, 2025

CSK போட்டி.. ரசிகர்களுக்கு கட்டுப்பாடு

image

CSK – MI அணிகளுக்கிடையே மார்ச் 23ஆம் தேதி நடைபெறும் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் 19ஆம் தேதி விற்பனை செய்யப்படுகிறது. டிக்கெட் விலை ₹1,700 முதல் ₹7,500 வரை. ஒரு நபருக்கு 2 டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும்; பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வரக்கூடாது. கார், இருசக்கர வாகனங்களை நிறுத்துவோர் போட்டி தொடங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னரே வர வேண்டும் என ரசிகர்களுக்கு கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளன.

News March 17, 2025

தமிழகத்தை செழிப்பாக்கும் ஆறுகள்! (1/2)

image

சம்மர் லீவுக்கு ஊட்டி, கொடைக்கானல் போகப் போறீங்களா. உங்க லிஸ்டுல 4 அழகான ஆறுகளையும் சேர்த்துக்கோங்க. முதல்ல பார்க்க, தமிழ்நாட்டோட ஜீவாதாரமான காவிரி ஆறு. மேற்குத் தொடர்ச்சி மலையில ஆரம்பிச்சு ஒகேனக்கல்ல சீறிப் பாய்ந்து வர்ற அழகே தனி. இரண்டாவதா, வைகை. மதுரைக்கு சித்திரைத் திருவிழா மட்டுமில்ல, வைகை ஆறோட வனப்பும் அழகு தான். மீனாட்சி அம்மனோட அருளால ஓடுற ஆறுனு இதுக்கு புராண பெருமையும் இருக்கு.

News March 17, 2025

தமிழகத்தை செழிப்பாக்கும் ஆறுகள்! (2/2)

image

நெல்லை, தூத்துக்குடி பகுதிகளை செழிப்பாக்கும் தாமிரபரணிக்கு தனி வரலாற்றுக் கதையே இருக்கு. இலக்கிய காலத்துல பொருநை என அழைக்கப்பட்ட தாமிரபரணி, பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையில இருந்து தூத்துக்குடியோட சங்குமுகம் வரைக்கும் பாயுது. நீலகிரியில் இருந்து கோவை, ஈரோடு மாவட்டங்கள் வழியா பாய்ந்து வரும் ஆறு பவானி. வனப்பகுதி வழியா ஓடும் பவானியோட அழகே தனி. கடைசியாக காவிரியுடன் சங்கமித்துவிடும்.

News March 17, 2025

த்ரில்லர் படம் இயக்குவதே கனவு.. பிரபல நடிகையின் ஆசை

image

சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழில் பிரபலமானவர் மஞ்சிமா மோகன். தற்போது OTT-யில் வெளியாகியுள்ள சுழல் வெப் தொடரின் 2ஆம் பாகத்தில் இவர் நடித்துள்ளார். இதனிடையே பேட்டி ஒன்றில் தனக்கு த்ரில்லர் படம் இயக்க ஆசை எனத் தெரிவித்துள்ளார். தன்னால் திரைக்கதை எழுத முடியாவிட்டாலும், எழுத்தாளர் எழுதும் கதையைத் திரையில் கொண்டு வர முடியும் எனக் கூறியுள்ளார்.

News March 17, 2025

சட்டப்பேரவையில் EPS, செங்கோட்டையன் பேச்சு

image

கடந்த சில நாள்களாக EPSஐ சந்திப்பதை தவிர்த்துவந்த செங்கோட்டையன், இன்று சட்டப்பேரவையில் அவருடன் பேசினார். டிவிஷன் வாரியான வாக்கெடுப்பு நடைபெற்றபோது அதன் விதிகள் புரியாமல் அதிமுகவினர் அமளியில் ஈடுபட, அதனை செங்கோட்டையன் EPSக்கு தெளிவாக புரிய வைத்தார். பின்னர், பேரவைக்கு வெளியே பேட்டி கொடுத்த EPS, தனக்கும் செங்கோட்டையனுக்கும் எந்தவித மோதலும் இல்லை என்று கூறினார்.

News March 17, 2025

அதிக நேரம் ரம்ஜான் நோன்பு இருப்பவர்கள் யார் தெரியுமா?

image

ரம்ஜான் மாதத்தில் அதிகாலை முதல் மாலை வரை உண்ணாமல், நீர் அருந்தாமல் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள். சூரிய உதயம், மறைவை பொறுத்து ஒவ்வொரு நாட்டிலும் நோன்பு நேரம் மாறுபடுகிறது. கிரீன்லாந்து, ஐஸ்லாந்து நாட்டு மக்கள் ஒருநாளில் 16 மணி 30 நிமிடங்கள் நோன்பு இருக்கிறார்களாம். இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் 13 மணி 45 நிமிடங்கள் நோன்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

News March 17, 2025

காலமானார் முன்னாள் மத்திய அமைச்சர்

image

முன்னாள் மத்திய அமைச்சரும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தந்தையுமான தேபேந்திர பிரதான் மரணம் அடைந்துள்ளார். 84 வயதான அவர் டெல்லியில் உள்ள அவரது மகனின் இல்லத்தில் உடல்நலக் குறைவால் காலமானார். MBBS படித்த தேபேந்திர பிரதான், தனது பாதையை அரசியல் பக்கம் திருப்பினார். 1998 – 2001 காலகட்டத்தில் வாஜ்பாய் அரசில் மத்திய சாலை போக்குவரத்து, வேளாண்துறை இணையமைச்சராக அவர் பதவி வகித்துள்ளார்.

News March 17, 2025

அதிமுகவில் பிளவா? இபிஎஸ் பதில்

image

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இபிஎஸ்சிடம் அதிமுகவில் பிளவு ஏற்படப் போவதாக வெளியாகும் செய்திகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், அதிமுகவில் பிளவு எதுவும் இல்லை என்று கூறினார். தாம் முதல்வரானது முதல் அதிமுகவை உடைக்க முயற்சி நடந்ததாகவும், ஆனால் அது நடக்கவில்லை என்றும், அதிமுகவை உடைக்க நினைப்பவர்கள்தான் உடைந்து போவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

error: Content is protected !!