India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திரையுலகில் தற்போது எடுக்கப்படும் பிரம்மாண்ட படங்களுக்கு அளவு கோலே பாகுபலிதான். இந்திய திரையுலகை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்ற ‘பாகுபலி’ முதல் பாகம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனால் பிரபாஸின் பிறந்தநாளான அக்டோபர் 23ஆம் தேதி, ‘பாகுபலி’ ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ரவுண்டுக்கு நீங்க ரெடியா?
மார்ச் 31ஆம் தேதி ரம்ஜான் பண்டிகையன்று 32 லட்சம் ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு பாஜக சார்பில் ‘Saughat-e-Modi’ பரிசு பெட்டகம் வழங்கப்படவுள்ளது. பாஜக சார்பில் 32,000 பேர் இதற்காக நியமிக்கப்பட்டு, முஸ்லிம்களின் தேவை குறித்து மசூதிகளில் விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது. ரம்ஜான் அன்று மோடி பரிசு பெட்டகத்தை விநியோகிக்க பாஜக சிறுபான்மை பிரிவு சார்பில் மாவட்ட அளவில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
பல நேரங்களில் சிறிய அலட்சியம் கூட, பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடலாம். கேரளாவில் பாலக்காட்டில் 3 வயது சிறுமி நேகா ரோஸ், காலையில் எழுந்ததும் பல் துலக்க பாத்ரூம் சென்றுள்ளாள். பேஸ்ட் என நினைத்து, அங்கு வைக்கப்பட்டிருந்த எலி பேஸ்ட்டை எடுத்து பிரஷ் செய்தவுடன் மயங்கி விழுந்துள்ளாள். பெற்றோர் பதறியடித்து குழந்தையை ஹாஸ்பிடலில் சேர்த்தும் காப்பாற்ற முடியவில்லை. குழந்தைகள் விஷயத்தில் கவனமா இருங்க, ப்ளீஸ்!
சென்னையில் இருந்து நாகை வரையிலான கடற்பகுதிகள் இன்று கொந்தளிப்புடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தக் கடற்பகுதிகளில் 8 முதல் 12 அடி வரை அலைகள் மேலெழும்பும் என்பதால், பொதுமக்கள் கடல் அருகே செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். ஏதாவது ஒரு கடற்பகுதி கொந்தளிப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால், கிட்டத்தட்ட மாநிலத்தின் பாதி கடற்கரை பகுதிகளில் இந்நிலை என்பது விசித்திரமாக உள்ளது.
ரஷ்யா – உக்ரைன் இடையே 3 ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. போரை நிறுத்துவதற்கான முயற்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புடினுடன் அவர் நாளை பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகத் தெரிவித்துள்ளார். போரை தங்களால் நிறுத்த முடியலாம், (அ) நிறுத்த முடியாமலும் போகலாம். ஆனால், நல்ல வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன் என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
விக்ரமின் 62 படமான ‘வீர தீர சூரன்’ படத்தை சித்தா பட இயக்குநர் அருண்குமார் இயக்கியுள்ளார். மார்ச் 27ஆம் தேதி படம் வெளியாக உள்ளதால், ட்ரெய்லர் வெளியீடு குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில்
‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா வரும் 20ஆம் தேதி மாலை 7 மணிக்கு ஆவடி வேல் டெக் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளது.
TVK தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. இதுகுறித்து Fact Check செய்த Way2News குழு, விஜய், புஸ்ஸி ஆனந்த், TVK ஆகியோரது X பக்கங்களில் தேடிப் பார்த்ததில், அப்படியான அறிவிப்பு எதுவும் இல்லை. அதன் பின்னர், அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் CTR. நிர்மல்குமார் இத்தகவலை அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளார். ஆக, அந்த செய்தியில் உண்மையில்லை.
முன்னாள் மத்திய அமைச்சர் தேவேந்திர பிரதான் மறைவுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த தேவேந்திர பிரதான், தற்போதைய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தந்தை ஆவார். இவருக்கு X பக்கத்திலும் இரங்கல் தெரிவித்திருக்கும் மோடி, ஒடிஷாவில் பாஜகவை வளர்த்ததில் தேவேந்திர பிரதானுக்கு முக்கிய பங்கு உண்டு என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 54 லட்சம் பெண்களுக்கு மாநில அரசு அடையாள அட்டை வழங்கவுள்ளது. அந்த அட்டை எப்படி இருக்கும் எனத் தெரிந்து கொள்வோம். அந்த அட்டையில், சம்பந்தப்பட்ட பெண்ணின் புகைப்படம், சுய உதவிக்குழு உறுப்பினருக்கான அடையாளக் குறியீடு, அவரின் பெயர், குழு உருவாக்கப்பட்ட தேதி, பிறந்த தேதி, ரத்தவகை, செல்போன் எண், முகவரி, அஞ்சலக குறியீடு உள்ளிட்டவை இருக்கும்.
54 லட்சம் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது. இதில் கிடைக்கும் பயன்களை தெரிந்து கொள்ளலாம். *அரசு பஸ்களில் 25 கிலோ வரை பொருள்களை இலவசமாக கொண்டு செல்லலாம் *கோ ஆப்டெக்ஸ் துணிகள் விலையில் 5% கூடுதல் தள்ளுபடி *கடனுதவி திட்டங்களில் முன்னுரிமை *சலுகை விலையில் ஆவின் நிறுவன பொருள்கள் *இணைய சேவை மையங்களில் 10% தள்ளுபடி *CM மருத்துவ காப்பீடு திட்ட பிரதான அத்தாட்சி.
Sorry, no posts matched your criteria.