News March 18, 2025

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நீக்கம்

image

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக இருந்த தர்மசெல்வன், அண்மையில் ஆட்சியர், எஸ்பியை மாற்றி விடுவேன் என <<15605340>>பேசியது<<>> சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அப்பதவியில் இருந்து தர்மசெல்வன் நீக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக மணி எம்பி நியமனம் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 18, 2025

இதுதான் நாகதோஷமோ?… துரத்தி துரத்தி கடிக்கும் பாம்பு

image

ஆந்திராவில் விநோத நிகழ்வால் அவதிப்பட்டு வருகிறார் 50 வயதான சுப்ரமணியம். எங்கு சென்றாலும், தன்னை விரட்டி விரட்டி பாம்பு கடிப்பதாக அவர் குமுறுகிறார். 20 வயதில் தொடங்கி இப்போதுவரை பல டஜன் முறைகள் தன்னை பாம்பு கடித்ததாக கூறும் சுப்ரமணியம், வேறு மாநிலங்களுக்கு குடிபெயர்ந்தாலும் பாம்பு கடி தொல்லைக்கு தீர்வு கிடைக்கவில்லை என கவலை தெரிவிக்கிறார். சம்பாதிப்பது எல்லாமே சிகிச்சைக்கே செலவாகி விடுகிறதாம்.

News March 18, 2025

ரயில் விபத்துக்கள் 80% குறைந்துள்ளன: வைஷ்ணவ்

image

2014-15 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது நிகழ்ந்த ரயில் விபத்துக்கள் 80% குறைந்துள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். லாலு, மம்தா அமைச்சர்களாக இருந்த போது ரயில் விபத்துக்களின் எண்ணிக்கையை விட தற்போது விபத்துகள் குறைந்துள்ளதாகவும், இது மேலும் கட்டுப்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார். ரயில் பாதுகாப்பை உறுதி செய்வதில் மத்திய அரசு அதிக அக்கறை காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News March 18, 2025

மீனவர் கைது: மத்திய அரசுக்கு ஸ்டாலின் மீண்டும் கடிதம்

image

TN மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் விவகாரத்தில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு CM ஸ்டாலின் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். அதில், 3 ராமேஸ்வரம் மீனவர்கள் கைதாகி இருப்பதை சுட்டிக்காட்டி, கடந்த 3 மாதங்களில் இது 10வது சம்பவம் என கூறியுள்ளார். மேலும், இலங்கை சிறைக் காவலில் வைக்கப்பட்டுள்ள 110 தமிழக மீனவர்கள், படகுகளை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

News March 18, 2025

மலரும் நினைவுகள்… ஸ்ட்ரீட் கிரிக்கெட் ஞாபகம் இருக்கா?

image

மறக்க முடியாத குழந்தை பருவ நினைவுகளில், தெருக்களில் கிரிக்கெட் விளையாடியதும் ஒன்று. பக்கத்து வீட்டிற்குள் பந்து போனால் அவுட், ஒன் பிட்ச் கேட்ச் அவுட் என நாம் வைப்பதே ரூல்ஸ். தெரு கிரிக்கெட் தொடர்பான ஆய்வில், டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்வது வருத்தமான முடிவு என தெரியவந்துள்ளது. 2வது இன்னிங்க்ஸ் பெரும்பாலும் ரத்தாவதால் அவர்கள் பேட்டிங் செய்ய முடியாத சூழல் உள்ளதாம். Share your Experience

News March 18, 2025

மாநில அரசே வன்முறையை தூண்டுகிறது: ஓவைசி காட்டம்

image

மகாராஷ்டிராவில் அரசே வன்முறையை தூண்டுகிறது என AIMIM தலைவர் ஓவைசி குற்றம் சாட்டியுள்ளார். முதல்வர் மற்றும் அம்மாநில அமைச்சர்கள் கொடுக்கும் அறிக்கைகள் & அவர்களது பேச்சுகளே வன்முறையை தூண்டும் வகையில் இருக்கின்றன என்றும், தங்களுடைய பொறுப்புகளை கூட அவர்கள் அறிந்திருக்கவில்லை எனவும் அவர் கூறினார். நாக்பூர் வன்முறை, மகாராஷ்டிர அரசின் மிகப்பெரிய தோல்வி என்றும் ஓவைசி விமர்சித்துள்ளார்.

News March 18, 2025

தனுஷின் அடுத்த பட ஹீரோயின் யார் தெரியுமா?

image

நடிகராகவும், இயக்குநராகவும் தமிழ் சினிமாவை கலக்கி வரும் தனுஷின் அடுத்த திரைப்படம் (D55) பற்றிய அசத்தலான அப்டேட் தற்போது கிடைத்துள்ளது. போர்த்தொழில், அமரன் படங்களின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி டைரக்ட் செய்வதால், இப்போதே இப்படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தில், இன்றைய இளசுகளின் சென்சேஷனலான மமிதா பைஜு, ஹீரோயினாக கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News March 18, 2025

அமைதியை விரும்பாத இஸ்ரேல்

image

காசாவில் இஸ்ரேல் தாக்குதலில் 300-க்கு மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். போர் நிறுத்தம் அமலில் இருக்கும்போது, வீடின்றி, வாழ்வாதாரம் இழந்து, கையறு நிலையில் இருக்கும் அப்பாவி மக்களை குண்டு வீசி கொல்கிறது இஸ்ரேல். 59 இஸ்ரேல் பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்க தாமதம் செய்கிறது என்று கூறி நூற்றுக்கணக்கான குழந்தைகள், பெண்களை கொலை செய்யும் இஸ்ரேல், பேச்சுவார்த்தைகளை வேண்டுமென்றே தாமதம் செய்கிறதாம்.

News March 18, 2025

ஓய்வு பெற்ற எஸ்.ஐ. கொலைக்கான பின்னணி?

image

நெல்லையில் ஓய்வுபெற்ற எஸ்.ஐ. ஜாகீர் உசேன் கொல்லப்பட்டதற்கு, டவுன் காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரை முழுமையாக விசாரிக்காததே காரணம் எனக் கூறப்படுகிறது. வக்பு வாரிய சொத்துகள் தொடர்பாக இருதரப்பினர் இடையே மோதல் இருந்துள்ளது. இந்த பிரச்னை தொடர்பாக அவர் புகார் அளித்ததாகவும், ஆனால் போலீஸ் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

News March 18, 2025

தமிழகத்தில் ட்ரெக்கிங் செய்ய முதல்வர் அழைப்பு

image

தமிழக மலைகளில் ட்ரெக்கிங் செய்ய சுற்றுலா பயணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். ஏப்ரல் முதல் மலைப்பாதைகள் மீண்டும் திறக்கப்படவுள்ளதால் ட்ரெக்கிங் செய்பவர்கள் தமிழகத்தின் அழகை கண்டு ரசிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். Trek TamilNadu மூலம் கடந்த 3 மாதங்களில் 4,792 பேர் மலையேறியுள்ளதாகவும், இதன் மூலம் அரசுக்கு ரூ.63.43 லட்சம் வருவாய் கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!