News March 18, 2025

என் வாழ்க்கை மாறிவிட்டது: ஹர்திக் பாண்ட்யா

image

ரசிகர்களால் கொண்டாடப்பட்டு, பின்னர் தூக்கியெறியப்பட்டவர் ஹர்திக் பாண்ட்யா. தற்போது ரசிகர்களின் அன்பை அவர் மீண்டும் பெற்றிருக்கிறார். இதுபற்றி பேசிய அவர், என்னை சுற்றி நடந்த தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்தாமல், கடினமாக உழைத்தேன். டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பிறகு, எனது வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது. எனக்கு எதிராக இருந்த ரசிகர்களின் அன்பு, எனக்கு மீண்டும் கிடைத்துள்ளது எனக் கூறினார்.

News March 18, 2025

ஆண் குழந்தைதான் வேணும்… கொடூரத் தாயால் விபரீதம்!

image

ராஜஸ்தானில் ஆண் குழந்தை பெறாத விரக்தியில், பிறந்து 17 நாட்களே ஆன பெண் குழந்தையை பெற்றத் தாயே கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. பெண் குழந்தை பிறந்ததால் மன உளைச்சலில் இருந்த அந்த பெண், தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து பச்சிளம் குழந்தையை கொலை செய்துள்ளார். கணவர் கொடுத்த புகாரின் பேரில் அந்த பெண்ணை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். ஆணோ, பெண்ணோ அனைவரும் சமம் என்பதை சமூகம் எப்போதுதான் உணருமோ?

News March 18, 2025

தெரு நாயை கொன்றால் என்ன தண்டனை தெரியுமா?

image

தெருவில் திரியும் நாய், பூனை, பசு போன்ற விலங்குகளுக்கும் நமது சட்டத்தில் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. வேண்டுமென்றே வாகனங்களால் மோதி அவற்றை கொன்றாலோ, காயப்படுத்தினாலோ காவல்நிலையத்தில் புகார் தரலாம். அங்கு IPC சட்டத்தின் 428,429ஆவது பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்த வேண்டும். அந்த பிரிவில் வழக்குப்பதிவானால், ரூ.2,000 அபராதம் (அ) 5 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்க வழி ஏற்படும்.

News March 18, 2025

ஜல்லிக்கட்டு வீரர் உயிரிழப்பு: CM ஸ்டாலின் இரங்கல்

image

மதுரை மாவட்டம் கீழக்கரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்தினருக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டில் உட்கரை கச்சிராயிருப்பை சேர்ந்த மகேஸ்பாண்டி உயிரிழந்ததை கேள்விப்பட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்ததாக அவர் கூறியுள்ளார். அவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்கவும் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

News March 18, 2025

ஸ்டார் ஸ்போர்ட்ஸுடன் இணைந்த ஸ்போர்ட்ஸ் 18

image

ஸ்போர்ட்ஸ் 18 என்ற பெயரில் 4 விளையாட்டு சேனல்களை ரிலையன்ஸ் ஒளிபரப்பியது. அண்மையில் ஜியோ, வால்ட் டிஸ்னியின் ஹாட்ஸ்டார் ஒன்றாக இணைக்கப்பட்டன. அப்போது சேனல்களை இணைக்கவும் முடிவானது. அதன்படி, வால்ட் டிஸ்னி குழுமத்தின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களுடன் ஸ்போர்ட்ஸ் 18 சேனல்கள் ஒன்றாக இணைந்தன. இதனால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளன.

News March 18, 2025

கிரிக்கெட் களத்தில் உயிரிழந்த வீரர்… சோகம்!

image

பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஜுனைத் கான், ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. ரம்ஜான் நோன்பு கடைபிடித்துக் கொண்டிருந்தவர், எதுவும் உண்ணாமல் கடும் வெயிலில் விளையாடியதால், தாக்குபிடிக்க முடியாமல் பலியானார். முன்னதாக, போட்டியின் போது கூல்டிரிங்ஸ் குடித்து, ரம்ஜான் நோன்பை கடைப்பிடிக்க தவறியதாக ஷமி மீது விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

News March 18, 2025

இந்தியாவுக்கு வாருங்கள்: சுனிதாவுக்கு மோடி அழைப்பு!

image

இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், 9 மாதங்களுக்கு பிறகு நாளை அதிகாலை பூமிக்கு திரும்பவுள்ளார். இந்நிலையில், சுனிதாவுக்கு பிரதமர் மோடி எழுதியுள்ள கடிதத்தில், ‘நீங்கள் பல ஆயிரம் மைல் தூரத்தில் இருந்தபோதும், எங்கள் இதயத்தின் அருகிலேயே இருக்கிறீர்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார். பூமி திரும்பியதும் இந்தியாவுக்கு வருமாறு சுனிதாவுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

News March 18, 2025

அதிமுகவை விஜய் ஏன் விமர்சிப்பது இல்லை?

image

கட்சி ஆரம்பித்தது முதல் திமுக அரசையும், மத்திய பாஜக அரசையும் விஜய் சாடி வருகிறார். ஆனால் அதிமுகவை இதுவரை ஒருமுறை கூட விமர்சித்தது இல்லை. தலைவா படத்தால் அதிமுக, விஜய் இடையே முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனினும், கட்சி ஆரம்பித்தபிறகு அதுபற்றியும் விஜய் பேசவில்லை. இதை சுட்டிக்காட்டும் அரசியல் ஆர்வலர்கள், 2026 தேர்தலில் 2 கட்சிகளும் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதோ என கேள்வி எழுப்புகின்றனர்.

News March 18, 2025

ஆல் டைம் சிறந்த IPL அணியை தேர்வு செய்த ஷஷாங்க் சிங்

image

பஞ்சாப் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஷஷாங்க் சிங் தன்னுடைய ஆல் டைம் ஐபிஎல் லெவனை தேர்வு செய்துள்ளார். அந்த அணியில் 9 இந்திய வீரர்களும், 2 வெளிநாட்டு வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். தொடக்க வீரர்களாக சச்சின் மற்றும் ரோஹித் ஷர்மாவின் பெயரை அவர் குறிப்பிட்டுள்ளார். கோலி, ரெய்னா, டிவில்லியர்ஸ், தோனி, பாண்ட்யா, சாஹல், சந்தீப் சர்மா, பும்ரா, மலிங்கா உள்ளிட்டோர் அந்த அணியில் இடம் பெற்றுள்ளனர்.

News March 18, 2025

ரயில் ரத்தானால் டிக்கெட் கட்டணம் என்னவாகும்?

image

விபத்துகள், வெள்ளம், பந்த் உள்ளிட்டவற்றால் ரயில் ரத்து செய்யப்படுமாயின், ஏற்கெனவே டிக்கெட் எடுத்தோருக்கு அக்கட்டணத்தை ரயில்வே திருப்பித் தரும். கவுன்ட்டர்களில் டிக்கெட் எடுத்திருக்கும்பட்சத்தில், டிக்கெட்டை 3 நாட்களுக்குள் எந்த கவுன்ட்டர்களிலும் திருப்பி அளிக்கலாம். முழு பணமும் திருப்பித் தரப்படும். ஆன்லைனில் டிக்கெட் எடுத்திருந்தால், அது தானாகவே ரத்தாகி பணம் வரவு வைக்கப்படும்.

error: Content is protected !!