News March 19, 2025

கோலி அதிருப்தி எதிரொலி: விதியை மாற்றும் பிசிசிஐ?

image

வெளிநாட்டு பயணங்களில் வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் குறிப்பிட்ட நாட்கள் மட்டும் தங்கலாம் என்ற விதியை BCCI மறுபரிசீலனை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய நடைமுறை வீரர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் எனவும், குடும்பத்தின் ஆதரவு எப்போதும் முக்கியம் என்றும் கோலி அதிருப்தி தெரிவித்திருந்தார். இந்நிலையில், விதியில் மாற்றம் கொண்டு வர BCCI முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

News March 19, 2025

2 குழந்தைகள் பெற்றால் வரி இல்லை… எங்கு தெரியுமா?

image

குழந்தை பெற்ற தாய்மார்கள் வரி கட்ட வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது, இது இந்தியாவில் அல்ல, ஹங்கேரியில். மக்கள் தொகை குறைந்து வருவதால் அந்நாட்டு PM விக்டர் ஆர்பன் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், ‘1 குழந்தை பெற்ற பெண்கள் 30 வயது வரையும், 2 குழந்தைகள் பெற்றால் வாழ்நாள் முழுவதும் வருமான வரி கட்ட வேண்டாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் இந்த நிலை வருமா?

News March 19, 2025

நாக்பூர் கலவரம் திட்டமிட்ட சதி: பட்நாவிஸ்

image

நாக்பூரில் நிகழ்ந்த கலவரம் திட்டமிட்ட சதிச் செயல் என மஹாராஷ்டிரா CM தேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கலவரம் குறித்து பேசிய அவர், அவுரங்கசீப்புக்கு எதிராக மக்கள் கொந்தளிக்க சாவா திரைப்படமே காரணம் என விளக்கம் அளித்தார். இக்கட்டான சூழலில் மக்கள் அமைதி காக்குமாறு கேட்டுக் கொண்டார். கலவரம் பாதித்த பகுதிகளில் ஊரடங்கு அமலில் உள்ளதால் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது.

News March 19, 2025

4 பேர் தற்கொலைக்கு இதுதான் காரணமா?

image

சென்னையை சேர்ந்த டாக்டர் பாலமுருகன், தனது மனைவி மற்றும் 2 பிள்ளைகளுடன் கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. வட்டிக்கு கடன் வாங்கிய பாலமுருகனிடம், ஒரே நாளில் ரூ.1 கோடி தர வேண்டும் என கந்துவட்டிக்காரர்கள் மிரட்டியுள்ளனர். ஆனால், ஒருநாளில் ரூ.1 கோடி திரட்ட முடியாததால், பயத்தில் குடும்பத்துடன் அவர் தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

News March 19, 2025

ஐபிஎல் சாம்பியன்கள் யார்-யார்?

image

2008 முதல் ஐபிஎல் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் சாம்பியன் பட்டம் வென்ற அணிகளை பார்க்கலாம். *ராஜஸ்தான் ராயல்ஸ் (2008) *டெக்கான் சார்ஜர்ஸ் (2009)*சிஎஸ்கே (2010) *சிஎஸ்கே (2011)* கேகேஆர் (2012)*மும்பை (2013)*கேகேஆர் (2014)*மும்பை (2015)*ஹைதராபாத் (2016) *மும்பை (2017) *சிஎஸ்கே (2018) *மும்பை (2019 ) *மும்பை (2020) *சிஎஸ்கே (2021) *குஜராத் (2022) *சிஎஸ்கே (2023) *கேகேஆர் (2024).

News March 19, 2025

JOB ALERTS: இந்தோ திபெத் படையில் வேலைவாய்ப்பு

image

இந்தோ-திபெத்திய பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 133 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளன. இதற்கு கல்வித் தகுதி 10ஆம் வகுப்புத் தேர்ச்சி. வயது வரம்பு 18-23 வரை. வேலையில் சேர விரும்புவோர் இந்தோ-திபெத்திய பாதுகாப்புப் படை இணையதளமான <>இதில் <<>>விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 2ஆம் தேதி கடைசி நாளாகும். SHARE IT.

News March 19, 2025

இஸ்ரேல் தாக்குதலில் 400 பேர் பலி: ஹமாஸ்

image

இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் 400 பேர் பலியாகி இருப்பதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. 59 பணயக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் நிபந்தனை விதித்ததால், 2 மாத சண்டை நிறுத்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. இதில் ஹமாஸ் தலைவர் உள்ளிட்ட 400 பேர் உயிரிழந்து இருப்பதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது. இதனிடையே, தாக்குதலை தீவிரபடுத்த போவதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

News March 19, 2025

ராசி பலன்கள் (19.03.2025)

image

➤மேஷம் – நன்மை ➤ரிஷபம் – மேன்மை ➤மிதுனம் – நேர்மை ➤கடகம் – லாபம் ➤சிம்மம் -களிப்பு ➤கன்னி – சுகம் ➤துலாம் – பயம் ➤விருச்சிகம் – போட்டி ➤தனுசு – பாராட்டு ➤மகரம் – பரிவு ➤கும்பம் – தெளிவு ➤மீனம் – அன்பு.

News March 19, 2025

ஹலால், அவுரங்கசீப் கல்லறை.. பற்றி எரியும் மகாராஷ்ட்ரா

image

மகாராஷ்டிராவில் ஹலால் இறைச்சி, ஜத்கா இறைச்சி ஆகிய 2 முறைகளை வைத்து கடந்த சில மாதங்களாக விவாதம் நடக்கிறது. இந்நிலையில் அவுரங்கசீப்பின் கல்லறையை வைத்து மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அக்கல்லறையை அப்புறப்படுத்தக்கோரி இந்து அமைப்புகள் நாக்பூரில் நேற்று நடத்திய போராட்டத்தில் வெடித்த வன்முறையால் பதற்றம் நிலவுகிறது. இதனால் அங்கு பல பகுதிகளில் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News March 19, 2025

14,000 பேரை பணிநீக்கம் செய்கிறது அமேசான்

image

இ-காமெர்ஸ் நிறுவனமான அமேசான் 14,000 பேரை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. செலவின குறைப்பு நடவடிக்கையாக கடந்த நவம்பரில் 18,000 பேரை அமேசான் பணிநீக்கம் செய்தது. இதன் தொடர்ச்சியாக கார்ப்பரேட் பதவிகளில் உள்ள 14,000 பேரை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆட் குறைப்பால் ஆண்டுதோறும் ரூ.31,000 கோடிக்கும் மேல் சேமிக்க முடியும் என அமேசான் கருதுகிறது.

error: Content is protected !!