India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று (மார்ச் 19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
என்னதான் சாதி, மதம்னு அடிச்சிக்கிட்டாலும் கடைசியா ஜெயிக்கிறது மனிதம்தான். அப்படி ஒற்றுமைக்கு உதாரணமான சம்பவம் கொல்கத்தாவுல நடந்திருக்கு. கிட்னி பாதிக்கப்பட்ட இந்து பெண் சங்கீதாவுக்கு அவசரமா ரத்தம் தேவைப்பட்டிருக்கு. இத தெரிஞ்சிகிட்ட முஸ்லீம் பையன் நசிம் மலிதா, ரம்ஜான் நோன்புக்கு நடுவுலயும் ரத்தம் கொடுத்து அந்த பெண்ணுக்கு உதவி இருக்காரு. மதங்கள தாண்டி நாம எல்லாம் எப்பவும் ஒன்னுதான்!
மதத்தை வைத்து அரசியல் செய்ய நினைத்தவர்களுக்கு மக்கள் சம்மட்டி அடி கொடுத்துள்ளதாக அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார். திருச்செந்தூர் மற்றும் ராமேஸ்வரம் கோயில்களில் 2 பக்தர்கள் உடல்நலக் குறைவு காரணமாகவே உயிரிழந்ததாகவும், அதை திசைத் திருப்ப அண்ணாமலை போன்றோர் முயல்வதாகவும் அவர் சாடியுள்ளார். கூட்ட நெரிசலில் உயிரிழந்ததாக இந்து சமய அறநிலையத்துறை மீது பாஜகவினர் களங்கம் கற்பிப்பதாகவும் கூறியுள்ளார்.
பேட்டிங்கில் எந்த வரிசையிலும் களமிறங்கி கலக்கக் கூடியவர் KL ராகுல். ஐபிஎல் தொடர்களில் ஓப்பனராக களமிறங்கி வரும் அவரை, டெல்லி அணி ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால், டெல்லி அணியில் அவர் ஓப்பனர் இல்லையாம். டு பிளெசிஸ், அபிஷேக் போரெல் ஆகியோர்தான் ஓப்பனர்களாக களமிறங்குவர் என்றும், KL ராகுல் மிடில் ஆர்டரில் விளையாடுவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி உங்க கருத்து என்ன?
ராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசையைச் சேர்ந்தவர் அருள்நேசன் (29). இவர் கடந்த 2017ஆம் ஆண்டு 14 வயது சிறுமி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றம், அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
வெளிநாட்டு பயணங்களில் வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் குறிப்பிட்ட நாட்கள் மட்டும் தங்கலாம் என்ற விதியை BCCI மறுபரிசீலனை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய நடைமுறை வீரர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் எனவும், குடும்பத்தின் ஆதரவு எப்போதும் முக்கியம் என்றும் கோலி அதிருப்தி தெரிவித்திருந்தார். இந்நிலையில், விதியில் மாற்றம் கொண்டு வர BCCI முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
குழந்தை பெற்ற தாய்மார்கள் வரி கட்ட வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது, இது இந்தியாவில் அல்ல, ஹங்கேரியில். மக்கள் தொகை குறைந்து வருவதால் அந்நாட்டு PM விக்டர் ஆர்பன் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், ‘1 குழந்தை பெற்ற பெண்கள் 30 வயது வரையும், 2 குழந்தைகள் பெற்றால் வாழ்நாள் முழுவதும் வருமான வரி கட்ட வேண்டாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் இந்த நிலை வருமா?
நாக்பூரில் நிகழ்ந்த கலவரம் திட்டமிட்ட சதிச் செயல் என மஹாராஷ்டிரா CM தேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கலவரம் குறித்து பேசிய அவர், அவுரங்கசீப்புக்கு எதிராக மக்கள் கொந்தளிக்க சாவா திரைப்படமே காரணம் என விளக்கம் அளித்தார். இக்கட்டான சூழலில் மக்கள் அமைதி காக்குமாறு கேட்டுக் கொண்டார். கலவரம் பாதித்த பகுதிகளில் ஊரடங்கு அமலில் உள்ளதால் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது.
சென்னையை சேர்ந்த டாக்டர் பாலமுருகன், தனது மனைவி மற்றும் 2 பிள்ளைகளுடன் கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. வட்டிக்கு கடன் வாங்கிய பாலமுருகனிடம், ஒரே நாளில் ரூ.1 கோடி தர வேண்டும் என கந்துவட்டிக்காரர்கள் மிரட்டியுள்ளனர். ஆனால், ஒருநாளில் ரூ.1 கோடி திரட்ட முடியாததால், பயத்தில் குடும்பத்துடன் அவர் தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
2008 முதல் ஐபிஎல் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் சாம்பியன் பட்டம் வென்ற அணிகளை பார்க்கலாம். *ராஜஸ்தான் ராயல்ஸ் (2008) *டெக்கான் சார்ஜர்ஸ் (2009)*சிஎஸ்கே (2010) *சிஎஸ்கே (2011)* கேகேஆர் (2012)*மும்பை (2013)*கேகேஆர் (2014)*மும்பை (2015)*ஹைதராபாத் (2016) *மும்பை (2017) *சிஎஸ்கே (2018) *மும்பை (2019 ) *மும்பை (2020) *சிஎஸ்கே (2021) *குஜராத் (2022) *சிஎஸ்கே (2023) *கேகேஆர் (2024).
Sorry, no posts matched your criteria.