India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மகளிர் உரிமைத்தொகை திட்ட விரிவாக்கம் ஜூலை 15-ல் தொடங்குகிறது. இதற்கு விண்ணப்பிக்க குடும்பத் தலைவிகள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், இத்திட்ட விரிவாக்கத்துக்கு அரசு ₹7 கோடி மட்டுமே கூடுதலாக ஒதுக்கியுள்ளதாகவும், புதிதாக 5,833 பேருக்கு மட்டுமே ₹1,000 கொடுக்க முடியும் என்றும் <<17013157>>அன்புமணி<<>> குண்டை தூக்கி போட்டுள்ளார். புதிய பயனர்களுக்கு பணம் கிடைக்க தாமதமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் ரிஷப் பண்டுக்கு காயம் ஏற்பட்டதால் அவர் மைதானத்தில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதில் துருவ் ஜுரேல் விக்கெட் கீப்பிங் செய்து வருகிறார். பும்ரா வீசிய 33-வது ஓவரில் அவரின் விரலில் பந்து வலுவாக தாக்கியது. பிசியோ உடனடியாக சிகிச்சை அளிக்க, வலி குறையாததால் பண்ட் வெளியேறினார். ரிஷப் பண்ட்டால் தொடந்து விளையாட முடியவில்லை என்றால் இந்தியாவுக்கு பெரும் இழப்பு ஏற்படும்.
இபிஎஸ்ஸை கண்டித்து கோவையில் 14-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது. இதுகுறித்து திமுக மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி வெளியிட்ட அறிவிப்பில், கல்லூரிகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்ததை இபிஎஸ் விமர்சித்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். கல்லூரிகள் திறப்பது பாவம், உங்களுக்கெல்லாம் கல்வி எதற்கு என சங்கிகள் குரலாய் இபிஎஸ் ஒலிக்கிறார் எனவும் ராஜீவ்காந்தி சாடியுள்ளார்.
பல தடைகளை உடைத்து நடிகரான விஷ்ணு விஷால் வளரும்போது தனக்கு ஏற்பட்ட கஷ்டங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். ‘நான்’, ‘காதல்’ போன்ற படங்களில் இருந்து நீக்கப்பட்டதால் சினிமா ஆசையை கைவிட முடிவெடுத்தாராம் அவருக்காக DIG-யாக இருந்த அவரது தந்தையும் வாய்ப்புக்கு அலைந்ததால் இந்த முடிவை எடுத்துள்ளார். அந்த வலிகளை தாண்டி இன்று நடிகர், தயாரிப்பாளர் என அசத்தி வருகிறார். Never give up.
ஆரோக்கியமான ஆணின் 1 மில்லி விந்துவில் மில்லியன் கணக்கான விந்தணுக்கள் இருக்கும். அதிகளவு புகை, மது பழக்கம், போதைப்பொருள் உட்கொள்ளுதல், அதிக உடல் எடை, வெப்பநிலை உள்ளிட்டவை விந்தணு உற்பத்தியை பாதிக்கும் என டாக்டர்கள் கூறுகின்றனர். துத்தநாகம், வைட்டமின் சி, ஃபோலிக் அமிலம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவுகள் விந்தணுவை வேகமாக உற்பத்தி செய்ய உதவுகின்றன. விழிப்போடு இருப்பது நலம் நண்பர்களே..!
இபிஎஸ்ஸுக்கு தெரிந்தது எல்லாம் துரோகம் செய்வது மட்டுமே என்று முதல்வர் ஸ்டாலின் சாடியுள்ளார். திருவாரூர் விழாவில் பேசிய அவர், வெளிமாநில மக்கள் கூட தமிழகம் குறித்து பெருமையாக பேசுவதாகவும், ஆனால் இபிஎஸ்ஸுக்கு இது தெரியாது, அவருக்கு தெரிந்தது துரோகம் மட்டுமே என்றார். பதவிக்கு கொண்டு வந்தவருக்கும் (சசிகலா), அதிமுக, அதிமுக தொண்டர்களுக்கும் துரோகம் இழைத்தவர் இபிஎஸ் என்றும் ஸ்டாலின் சாடினார்.
‘Kill bill’ நடிகர் மைக்கேல் மேட்சன் மரணம் குறித்த காரணம் வெளிவந்து ரசிகர்களை அதிரவைத்துள்ளது. அவருக்கு தொடர்ந்து குடிப்பழக்கம் இருந்ததாகவும், அதனால் உண்டான இருதய பிரச்னையால் தான் அவர் மரணமடைந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக புகழ் பெற்ற ‘Reservoir Dogs’, ‘Kill bill’ போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்த இவர் கடந்த 3ம் தேதி மரணமடைந்த நிலையில், திரைத்துறையினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்திய டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ்(25) என்பவரை, அவரது தந்தையே சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவில் அவரது வீட்டில் இச்சம்பவம் நடந்துள்ளது. 3 முறை சுடப்பட்டு ராதிகா ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதையடுத்து அவரது தந்தையை போலீஸ் கைது செய்துள்ளனர். ராதிகா ரீல்ஸ் மோகத்தில் இருந்தது தந்தைக்கு பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கு எதிராக வைகோவும், வைகோவுக்கு எதிராக மல்லை சத்யாவும் இன்று வைத்த குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனால் இனி மதிமுகவில் மல்லை சத்யாவால் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆதலால் மதிமுகவில் இருந்து விலகி விரைவில் திமுகவில் மல்லை சத்யா இணையக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை நடப்பதாகவும் சொல்லப்படுகிறது.
சிறுநீரில் ரத்தம் கலந்து வருவது பின்வரும் பாதிப்புகளின் ஏதேனும் ஒன்றின் அறிகுறியாக இருக்கலாம்: *சில உணவுகளின் நிறம் சிறுநீரை சிவப்பாக்கலாம். இதனால் ஆபத்தில்லை *சிறுநீர்ப்பை தொற்று *சிறுநீரக தொற்று *சிறுநீரகக் கல் * சிறுநீரக அழற்சி *சிக்கில் செல் அனீமியா *சில வகை மருந்துகள் உட்கொள்வதால் *அரிதாக கேன்சர் அறிகுறி. சிறுநீரில் ரத்தம் கலந்து வருவதாக தெரிந்தால், உடனே டாக்டரை அணுகுவதே சிறந்தது.
Sorry, no posts matched your criteria.