India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பாமக வலியுறுத்தி வரும் நிலையில், கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக தமிழக அரசு, மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதா என அன்புமணி மாநிலங்களவையில் கேள்வி எழுப்பிய நிலையில், அவ்வாறு எந்த கோரிக்கையும் வரவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ராகு பகவான் உத்தர பத்ரபாத நட்சத்திரத்தில் இருந்து பூரட்டாதி நட்சத்திரத்திற்கு இடம் மாறியதால் 3 ராசியினர் பணமழையில் நனையப் போகின்றனர். 1) ரிஷபம்: நிதி நிலைமை முன்னேறும். திருமணம், காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 2) மகரம்: மன அழுத்தம் விலகி ஓடும். நீண்டகால சிக்கல்கள் தீரும். பணவரவு அதிகரிக்கும். 3) மீனம்: தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொட்ட காரியம் துலங்கும். பொருளாதார நிலைமை மேம்படும்.
*திருமணமாகாத பெண்களும் குழந்தையை தத்தெடுக்கலாம். *நிறுவனங்கள் 26 வாரங்கள் சம்பளத்துடன் கூடிய கட்டாய மகப்பேறு விடுமுறையை வழங்க வேண்டும். *யாரேனும் Stalking செய்தால் 3 ஆண்டுகள் வரை சிறை. *பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானால், உடனடி இலவச மருத்துவ சிகிச்சை பெறலாம். *மாஜிஸ்திரேட் அனுமதி இல்லாமல், ஒரு பெண்ணை இரவிலோ, அதிகாலையிலோ கைது செய்ய முடியாது. *ஒரு ஆண் போலீஸ் ஒரு பெண்ணை உடல்ரீதியாக பரிசோதிக்க கூடாது.
ஜியோ, ஏர்டெல் ஆகியவை 5ஜி சேவையை வழங்கி வருகின்றன. இதையடுத்து வோடாபோன் ஐடியா நிறுவனமும் தற்போது 5ஜி சேவையை தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக, மும்பையில் தனது சேவையை தொடங்கியுள்ளது. இதையடுத்து, படிப்படியாக நாட்டின் பிற நகரங்களில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. ப்ரீபெய்டு அன்லிமிடெட் 5ஜி திட்டத்தின் தொடக்க கட்டணமாக ரூ.299ஐ நிர்ணயித்துள்ளது. இது ஜியோ, ஏர்டெல்லை விட குறைந்த கட்டணமாகும்.
பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தும், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் கட்டிப் பிடிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை FACT CHECK செய்து பார்த்தபோது, அது உண்மையில்லை எனவும், சீன ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வீடியோ என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2021இல் 2 பேரும் சந்திக்கையில் எடுத்த வீடியோவை இதற்காக பயன்படுத்தியதும் தெரிய வந்துள்ளது.
கணவர் <<15809593>>செளரப்பை <<>>ஆண் நண்பருடன் சேர்ந்து கொன்று கூறுபோட்ட முஸ்கான், சிக்கிவிடக் கூடாது எனத் திட்டமிட்டுள்ளார். கொலைக்கு பிறகு செளரப் செல்போனுடன் ஹிமாச்சல் சென்ற இருவரும், அங்கிருந்து செளரப் தங்கைக்கு, வாட்ஸ்அப்பில் மெசேஜ்கள் அனுப்பியுள்ளார். ஹோலிக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார். ஆனால் போன் அழைப்பை மட்டும் தவிர்த்துள்ளார். எனினும், போலீசில் சிக்கிவிட்டார்.
கடந்த மார்ச் 8ஆம் தேதி லண்டனில் சிம்பொனியை அரங்கேற்றம் செய்து இசைஞானி இளையராஜா சாதனை படைத்தார். இதற்கு பிரதமர், முதல்வர், திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் அவரை வாழ்த்து மழையில் நனைத்தனர். அந்த வகையில் நடிகர் சிவக்குமார், அவரது மகன் சூர்யா மற்றும் மகள் பிருந்தாவுடன் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்தினார். அப்போது சிவகுமார் தங்க சங்கிலியை அவருக்கு பரிசாக அணிவித்தார்.
திருமணத்தை பதிவு செய்ய வேண்டுமா? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். இதுகுறித்து 2006இல் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. பெண்கள் நலனுக்காக திருமணப் பதிவு கட்டாயம் என சுப்ரீம் கோர்ட் ஆணையிட்டது. அதன்படி, 1955 இந்து திருமணச் சட்டம் (அ) 1954 சிறப்பு திருமணச் சட்டத்தின்கீழ் 90 நாட்களுக்குள் பதிவு செய்யலாம். அந்த சான்று, சொத்துரிமை, விவாகரத்து, குழந்தை பாதுகாப்புக்கு மிகவும் அவசியம் ஆகும்.
செல்போன் வெடித்து ஒருவருக்கு ஆணுறுப்பே பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ம.பி.,யில் மார்க்கெட் சென்றுவிட்டு பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்த இளைஞரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த போன் திடீரென வெடித்தது. இதில் அவரின் ஆணுறுப்பு சேதம் அடைந்ததுடன், கீழே விழுந்ததால் தலையிலும் காயமடைந்தார். செகன்ட் ஹேண்ட் போனை இரவு முழுவதும் சார்ஜ் போட்டதே இதற்கு காரணம் என்கின்றனர். ஓவர் சார்ஜ் போடாதீங்க BROTHERS!
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் குடும்பத்திற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை விராட் கோலி அண்மையில் விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள பிசிசிஐ செயலாளர் சாக்கியா, சிலர் கோபப்படுவதற்காக பிசிசிஐ விதிகள் மாற்றப்படாது எனக் கூறினார். முன்னதாக, வெளிநாடுகளில் விளையாட செல்லும் இந்திய அணி வீரர்கள், தங்கள் குடும்பத்தினரை அழைத்துச் செல்லக்கூடாது என பிசிசிஐ உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.