India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியாவில் உள்ள தனித்துவமான முக்கிய அம்சங்களில், சித்ராகூட் எனும் மாவட்டம் 2 மாநிலங்களில் அமைந்திருப்பதும் ஒன்று. இந்த மாவட்டத்தின் பெரும் பகுதி உ.பி.யிலும், சிறிய பகுதி மட்டும் ம.பி.யிலும் உள்ளன. சட்டம், நிர்வாகம், நிர்வாகத்தை 2 மாநிலங்களுமே கவனிக்கின்றன. தற்போது 2 மாநிலங்களிலும் பாஜக அரசு உள்ளதால், நிர்வாகத்தில் குழப்பம் இல்லை. வனவாசத்தின்போது இந்த மாவட்டத்தில் ராமர் இருந்ததாக கூறப்படுகிறது.
சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் நேற்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி, சக நாட்டு வீரர் எச்.எஸ்.பிரனாய் உடன் மோதினார். இதில் தொடக்கம் முதலே அசத்திய ஸ்ரீகாந்த் 23-21, 23-21 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். நாளை நடைபெறும் 2வது சுற்றில் ஸ்ரீகாந்த் சீன வீரர் லீ ஷிபெங் உடன் மோதுகிறார்.
வசதி படைத்தவர்கள் வெளிநாட்டு உயர்ரக நாய்களை வளர்ப்பதை பொழுதுபோக்காக வைத்திருப்பர். அதுபோன்ற உயர்ரக நாய் ஒன்றை பெங்களூரைச் சேர்ந்த சதீஷ் விலைக்கு வாங்கியுள்ளார். அந்த நாய், ஓநாய், வொய்ட் செப்பர்ட் இன நாயின் கலப்பு. Cadabom Okami என்பது அதன் இனம். 8 மாதமே ஆகும் நிலையில், அதன் உடல் எடை 75 கிலோ ஆக உள்ளது. உயரமும் 30 இன்ச்சாகும். தினமும் 3 கிலோ சமைக்காத கோழிக்கறியை சாப்பிடுகிறது.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக வரும் 22ஆம் தேதி சென்னையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள பஞ்சாப் முதல்வரின் இல்லத்தில் வைத்து, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் அழைப்பிதழை வழங்கினர். ஏற்கனவே எதிர்க்கட்சி தலைவர்கள் பலருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் Wall என்று வர்ணிக்கப்படுபவர் ராகுல் டிராவிட். கடைசிவரை போராடுவதில் அவர் கில்லி. அப்படிப்பட்டவர் காயத்தால் முடங்கிவிடுவாரா என்ன?.. பெங்களூரு கிளப் போட்டியின் போது ராகுல் டிராவிட்டுக்கு காலில் காயம் ஏற்பட்டது. ஆனாலும் ராஜஸ்தான் அணியின் கோச்சிங் பாதிக்கப்படக்கூடாது என்று, வீல் சேரில் மைதானத்தை சுற்றி வருகிறார். டிராவிட்டின் டெடிகேஷனை பார்த்து அனைவரும் வியக்கின்றனர்.
நாடு முழுக்க விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு 10 மடங்கு அபராதம் விதிக்கும் மத்திய அரசின் புதிய விதிமுறைகள் மார்ச் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, போதையில் வாகனம் ஓட்டினால் ₹10,000 + லைசன்ஸ் 3 மாதம் ரத்து, ஹெல்மெட் அணியவில்லை எனில் ₹1,000, வாகனம் ஓட்டுகையில் மொபைல் பயன்படுத்தினால் ₹5,000, லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ₹5,000, டிரிபிள்ஸ் போனால் ₹1,000 அபராதம் விதிக்கப்படும். SHARE IT!
பெரும்பாலானோர் தினமும் வெள்ளை அரிசி சாதத்தையே சாப்பிடுகிறார்கள். ஆனால், வெள்ளை சாதத்தை விட ப்ரவுன் அரிசியில் (பழுப்பு அரிசி) சமைக்கப்படும் சாதம் உடலுக்கு மிகவும் நல்லது என டாக்டர்கள் கூறுகின்றனர். இதில் நார்ச்சத்து, வைட்டமின், மினரல்கள் அதிகமாக உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நார்ச்சத்து இருப்பதால் உடல் பருமன் ஏற்படுவதை தடுக்கிறது. ரத்த அழுத்தத்தையும், சர்க்கரையையும் குறைக்கிறது.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இலங்கை சிறையில் ஏற்கனவே தமிழக மீனவர்கள் 110 பேர் உள்ளனர். சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கவும், கைது நடவடிக்கைகளை தடுக்க கோரியும் பல முறை முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதிவிட்டார். ஆனால் பல ஆண்டுகளாக தொடரும் இப்பிரச்னைக்கு விடிவுகாலம் பிறக்கவே இல்லை.
திருநெல்வேலியில் நேற்று ஓய்வு பெற்ற காவல் அதிகாரி படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி மறைவதற்குள், இன்று ஈரோட்டில் ஜான் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தினந்தோறும் படுகொலைகள் நடப்பதாகவும் x தளத்தில் அவர் விமர்சித்துள்ளார். காவல் நிலையங்கள் செயல்படுகின்றனவா அல்லது திமுகவினர் அதை பூட்டிவிட்டார்களா என தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
➤மேஷம் – பக்தி ➤ரிஷபம் – வெற்றி ➤மிதுனம் – வரவு ➤கடகம் – துன்பம் ➤சிம்மம் – நிறைவு ➤கன்னி – பணிவு ➤துலாம் – சிரமம் ➤விருச்சிகம் – இரக்கம் ➤தனுசு – பிரீதி ➤மகரம் – சுகம் ➤கும்பம் – நலம் ➤மீனம் – தொல்லை.
Sorry, no posts matched your criteria.