News March 20, 2025

‘ஹெபடைடிஸ் பி’ தடுப்பூசி விலை பல மடங்கு அதிகரிப்பு

image

குழந்தைகளுக்கு கல்லீரல் சுருக்கம், கல்லீரல் புற்றுநோயைத் தடுக்கும் ‘Hepatitis B’ தடுப்பூசி விலை பல மடங்கு விலை உயர்ந்துள்ளதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். 3 தவணைகளாக செலுத்தப்படும் இது, ஒரு டோஸ் ₹20 – ₹50க்கு விற்கப்பட்டது. திடீரென 3 டோஸ் கிட்டத்தட்ட ₹1,700 வரை விலை உயர்ந்துள்ளதால், நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக இதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

News March 20, 2025

அடுத்த 6 நாட்கள் மழை பெய்யக் கூடும்: வானிலை ஆய்வு மையம்

image

தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், TNஇல் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் மார்ச் 25 வரை TNஇல் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலில் சிலப் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.

News March 20, 2025

கற்றாழை.. காக்கும் உடலை…

image

*உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் சிகிச்சைக்கு உதவுகிறது.
*செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது.
*நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
*இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது.
*சருமத்தை பாதுகாத்து தலை முடியை வலுவாக்கும்.
*சொரியாசிஸ் நோய் சிகிச்சைக்கு நல்லது.
*காயம் குணமடைய உதவும்.

News March 20, 2025

மாறும் 2026 தேர்தல் கூட்டணி களம்.. அதிமுகவின் வியூகம்?

image

2026 தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், திரைமறைவில் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. ADMK தலைமையில் பலம் வாய்ந்த கூட்டணி அமைக்க வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது. அதில், பாஜக அல்லாமல் PMK, DMDK, NTK, TVK உள்ளிட்ட கட்சிகள் (அ) BJP, PMK, DMDK, NTK உடன் கூட்டணி எனப் பேச்சு அடிபடுகிறது. சீமானின் அண்மைக் கால பேச்சுகள் கூட்டணியை நோக்கி நகர்வதையே காட்டுகிறது. உங்கள் கருத்து என்ன?

News March 20, 2025

ஆண்டுதோறும் உயரும் சென்னையின் கடல் மட்டம்

image

1993 முதல் 2020 வரை சென்னை பகுதியில் கடல் மட்டம், ஆண்டுக்கு 4.31 மில்லி மீட்டர் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. காலநிலை மாற்றம் தொடர்பாக மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு இந்த தகவலை பதிலாக அளித்துள்ளது. இதே காலகட்டத்தில் மும்பையில் 4.59 மி.மீ., கொச்சியில் 4.10 மி.மீ., பாராதீப்-ல் 4.43 மி.மீ., அளவுக்கு கடல் மட்டம் உயர்ந்துள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.

News March 20, 2025

காய்கறிகளில் ஒளிந்துள்ள நன்மையின் ரகசியம்!

image

*பச்சை மிளகாய் – சருமப் பிரச்னைகளை தடுக்கும்.
*கொத்தவரங்காய் – சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.
*மொச்சைக்காய் – ரத்த கொதிப்பை குறைக்கும்.
*நூக்கல் – உடல் எடையை குறைக்கும்.
*மாங்காய் – கொழுப்பை குறைக்க உதவும்.
*வாழைக்காய் – சிறுநீரக பாதிப்பை தடுக்கும்.
*சின்ன வெங்காயம் – நோய் தொற்று வராமல் தடுக்கும்.

News March 20, 2025

இந்த இரண்டுமே தனித்தனி தான்: ஷுப்மன் கில்

image

கேப்டன் பொறுப்பையும், பேட்டிங் செய்வதையும் தனித்தனியாக பார்ப்பதுதான் நல்லது என ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். களத்திற்கு வெளியே கேப்டன் பொறுப்பு குறித்து அதிகமாக சிந்திப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பேட்டிங் செய்யும் போது அதில் மட்டுமே கவனம் செலுத்துவது சிறந்ததாக அமையும் என்றார். நடப்பு ஐபிஎல் சீசனில், குஜராத் அணியை ஷுப்மன் கில் வழிநடத்துவது குறிப்பிடத்தக்கது.

News March 20, 2025

மார்ச் 20: வரலாற்றில் இன்று!

image

*1915 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது பொதுச்சார்பியற் கோட்பாட்டை வெளியிட்டார்.
*1948 – சிங்கப்பூரில் முதலாவது தேர்தல் நடைபெற்றது.
*1956 – பிரான்சிடம் இருந்து துனீசியா விடுதலை பெற்றது.
*2015 – வலய மறைப்பு, சம இரவு நாள், பெருமுழுநிலவு அனைத்தும் ஒரே நாளில் நிகழ்ந்தன.
*உலக சிட்டுக்குருவிகள் தினம்
*சர்வதேச மகிழ்ச்சி தினம் *உலக ஜோதிட தினம்.

News March 20, 2025

மணிப்பூர் செல்லும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்

image

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய் உள்பட 6 பேர், வரும் 22ஆம் தேதி மணிப்பூர் செல்ல உள்ளதாக தேசிய சட்ட சேவைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. அப்போது, வன்முறையால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியுள்ள மக்களை அவர்கள் சந்திக்கின்றனர். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2 ஆண்டுகளாக வன்முறை சூழல் நிலவுகிறது. மெய்தி – குகி இன மக்களுக்கு இடையிலான இடஒதுக்கீடு பிரச்னை வன்முறைக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

News March 20, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: ஒப்புரவறிதல் ▶குறள் எண்: 212
▶குறள்: தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.
▶பொருள்: தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும்.

error: Content is protected !!