News March 20, 2025

ஏப்ரல் 1 முதல் புதிய TDS விதிமுறைகள் அமல்

image

ஏப்.1ம் தேதி முதல் புதிய TDS விதிமுறைகள் நடைமுறைக்கு வருகின்றன. மூத்த குடிமக்களின் ஆண்டு வருமானம் ₹1 லட்சம் வரை இருந்தால், அவர்களின் FD & RDக்கு TDS பிடித்தம் செய்யப்படாது. தற்போது அது ₹50,000ஆக உள்ளது. 60 வயதிற்கு உட்பட்டவர்கள் எனில், FD & RDக்கான வட்டி வருமானம் ₹50,000 தாண்டவில்லை என்றால், TDS பிடித்தம் செய்யப்படாது. காப்பீட்டு முகவர்களின் ஆண்டு கமிஷன் ₹20,000க்கு மேல் இருந்தால் TDS பொருந்தும்.

News March 20, 2025

BREAKING: கைதியை சுட்டுப்பிடித்த போலீஸ்!

image

சிதம்பரம் அருகே அண்ணாமலை நகரில் தப்பியோடிய கைதியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்துள்ளனர். 27 கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய கைதி ஸ்டீபன் போலீசாரின் பிடியிலிருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது. அப்போது அவரை, காவல் ஆய்வாளர் அம்பேத்கர் சுட்டுப்பிடித்த நிலையில், காலில் காயங்களுடன் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகிறார்.

News March 20, 2025

30 நாள் போர் நிறுத்தத்திற்கு சம்மதம்

image

உள்கட்டமைப்புகள், ஆற்றல் மையங்களில் 30 நாள்கள் தாக்குதல் நடத்தக்கூடாது என்ற ஒப்பந்தத்திற்கு உக்ரைன் சம்மதம் தெரிவித்துள்ளது. டிரம்ப் நேற்று ரஷ்ய அதிபர் புடினுடன் பேசிவிட்டு, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடனும் பேசி இருநாடுகளையும் சம்மதிக்க வைத்துள்ளார். இருப்பினும், எப்போது இது அமலுக்கு வரும் என்ற தகவல் வெளியாகவில்லை. இந்த வார இறுதியில் சவுதி அரேபியாவில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

News March 20, 2025

பிரியங்காவின் இதயத்தை வென்ற ரோட்டுக்கடை பெண்

image

நடிகை பிரியங்கா சோப்ரா, விசாகப்பட்டினம் ஏர்போர்ட் செல்லும் வழியில், ரோட்டில் ஒரு பெண்ணிடம் கொய்யா பழங்களை வாங்கியுள்ளாராம். ஒரு கிலோ ₹150 என அந்த பெண் சொல்ல, இவர் ₹200ஐ நீட்டி மீதியை வைத்துக் கொள்ள சொல்லி இருக்கிறார். ஆனால், அதை அப்பெண் மறுத்து, மீதி காசுக்கு சில கொய்யா பழங்களை கொடுத்துள்ளார். நேர்மையின் அடையாளமான அப்பெண், தனது இதயத்தை வென்றதாக இன்ஸ்டாவில் பிரியங்கா தெரிவித்துள்ளார்.

News March 20, 2025

டாக்டர் பரிந்துரையின்றி இந்த மாத்திரைகளை சாப்பிடாதீர்!

image

கோடைக் காலத்தில் ஏற்படும் வெப்ப வாதம் உள்ளிட்ட பாதிப்புகளை தடுக்க, Aspirin, paracetamol மாத்திரைகளை டாக்டர் பரிந்துரையின்றி உட்கொள்ளக் கூடாது என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மயக்கம், உடல்சோர்வு, தலைவலி ஏற்பட்டால், டாக்டரை சந்திக்க வேண்டும். வெப்ப வாத பாதிப்பை, காய்ச்சல் என நினைத்து, Aspirin, paracetamol மாத்திரைகளை உட்கொண்டால், ஆபத்தான எதிர்விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளது.

News March 20, 2025

பேரிடரில் வெயிலை சேர்க்க பரிந்துரை

image

பேரிடர் மேலாண்மை திட்டங்களில் வெப்ப அலைகள் போன்ற புதிய பேரிடர்களை சேர்க்க வேண்டும் என நாடாளுமன்ற குழு பரிந்துரைத்துள்ளது. மேலும் பேரிடர் மேலாண்மை சட்டம் பொருத்தமானதாகவும், வளர்ந்து வரும் பேரிடர் அபாயங்களுக்கு ஏற்பவும் இருக்க வேண்டும். வல்லுநர்கள் குழுவுடன் ஆலோசித்து பேரிடர் பட்டியலை அவ்வப்போது மதிப்பாய்வு செய்து புதுப்பிக்கும் வழிமுறையையும் நிறுவ வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

News March 20, 2025

விவசாய நிலத்தை மனையாக மாற்ற அனுமதி இல்லை

image

விவசாய நிலங்களைப் பிரித்து மனைகளாக விற்க அனுமதியில்லை என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், விவசாய நிலத்தைப் பிரித்து வீட்டு மனையிடங்களாக மாற்ற முடியாது என்றார். மேலும், நிலங்களைப் பதிவு செய்வதைப் பொருத்தவரை, கிராம நத்தமாக உள்ள இடங்களைப் பொதுமக்களின் வசதிக்காக எந்த மாற்றமும் இல்லாமல் பதிவு செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.

News March 20, 2025

இலங்கை கடற்படையின் அட்டூழியம்.. 11 மீனவர்கள் கைது

image

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இலங்கை சிறையில் ஏற்கனவே தமிழக மீனவர்கள் 110 பேர் உள்ளனர். சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கவும், கைது நடவடிக்கைகளை தடுக்க கோரியும் பல முறை CM ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனாலும் பல ஆண்டுகளாக தொடரும் இப்பிரச்னைக்கு விடிவுகாலம் பிறக்கவே இல்லை.

News March 20, 2025

குப்பையில் இருந்து மின்சாரம்: K.N.நேரு

image

குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க உள்ளதாக அமைச்சர் K.N.நேரு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர் சென்னை, கோவை, மதுரையில் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகக் கூறினார். மேலும், நகரங்களை விரிவாக்கம் செய்யும்போது குப்பைகள் கொட்டும் இடம் மையப்பகுதிக்கு வந்துவிடுவதாகக் குறிப்பிட்ட அவர், குப்பைகள் வெளியே பறக்காமல் இருக்க, குப்பைக் கிடங்கைச் சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்படுகிறது என்றார்.

News March 20, 2025

‘ஹெபடைடிஸ் பி’ தடுப்பூசி விலை பல மடங்கு அதிகரிப்பு

image

குழந்தைகளுக்கு கல்லீரல் சுருக்கம், கல்லீரல் புற்றுநோயைத் தடுக்கும் ‘Hepatitis B’ தடுப்பூசி விலை பல மடங்கு விலை உயர்ந்துள்ளதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். 3 தவணைகளாக செலுத்தப்படும் இது, ஒரு டோஸ் ₹20 – ₹50க்கு விற்கப்பட்டது. திடீரென 3 டோஸ் கிட்டத்தட்ட ₹1,700 வரை விலை உயர்ந்துள்ளதால், நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக இதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

error: Content is protected !!