News March 20, 2025

விண்வெளியில் விவசாயம் பார்த்த சுனிதா!

image

ISSல் சுனிதா வில்லியம்ஸ் என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா? வேற்று கிரகத்தில் பூமியில் உள்ள தாவரங்கள் சிலவற்றை வளர்க்க முடியுமா என்ற சாத்தியக்கூறுகளை ஆராய லெட்யூஸ் என்ற கீரையை வளர்க்கும் ஆய்வில் ஈடுபட்டிருந்தார். 286 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்தபோது, ஒரு நாளைக்கு 16 முறை என்ற அளவில் 4,592 தடவை சூரிய உதயம், அஸ்தமனம் பார்த்திருக்கிறார்.

News March 20, 2025

ஹமாஸுடன் தொடர்பு.. USAவில் இந்தியர் கைது

image

யூதர்களுக்கு எதிராக பிரசாரம் மற்றும் ஹமாஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கூறி இந்தியாவைச் சேர்ந்த பதர் கான் சூரியை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர். அவரது விசா ரத்து செய்யப்பட்டு, விரைவில் நாடு கடத்தப்பட உள்ளார். ஆனால் தனது மனைவி பாலஸ்தீனைச் சேர்ந்தவர் என்பதால், தான் குறிவைக்கப்பட்டுள்ளதாக சூரி தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலை.யில் ஆராய்ச்சி மாணவராக சூரி உள்ளார்.

News March 20, 2025

மஸ்க் ஒரு பைத்தியம்.. பீதியில் டெஸ்லா கார் ஓனர்கள்

image

அமெரிக்க அரசு ஊழியர்களை தொடர்ந்து வேலையை விட்டு நீக்குவதால், <<15811222>>எலான் மஸ்கின்<<>> டெஸ்லா நிறுவன கார்கள் அந்நாட்டில் தீ வைத்து கொளுத்தப்பட்டு வருகின்றன. இதிலிருந்து தங்கள் கார் தப்பிக்க உரிமையாளர்கள் செய்த செயல் பேசுபொருளாகியுள்ளது. டிரம்ப் நிர்வாகத்தில் மஸ்க் இணையும் முன்னரே கார் வாங்கிவிட்டதாகவும், ஆனால் கண்டிப்பாக மஸ்க் ஒரு பைத்தியம்தான் எனவும் அவர்கள் தங்கள் கார்களில் ஸ்டிக்கர் ஒட்டி வைத்துள்ளனர்.

News March 20, 2025

நாங்கள் அடிமைகள் அல்ல ராஜதந்திரிகள்: கே.பி.முனுசாமி

image

தமிழகத்தின் ஆட்சி அதிகாரம் ஸ்டாலின் கையில் இல்லை, பல பேரின் கையில் உள்ளதாக அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி விமர்சித்துள்ளார். திமுகவினர் தங்களை பாஜகவின் அடிமைகள் என கூறுவதாகவும், ஆனால் தாங்கள் அடிமைகள் இல்லை, ராஜதந்திரிகள் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஒரு மாநில முதல்வரால், மத்திய அரசிடம் இருந்து நிதியைக் கூட வாங்கித் தர முடியவில்லை எனவும் ஸ்டாலினை சாடியுள்ளார்.

News March 20, 2025

அதிமுக நிர்வாகிக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை!

image

கொலை முயற்சி வழக்கில் அதிமுக நிர்வாகி நடராஜனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளரான நடராஜன் 2021இல் ஊர்குளத்தை ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட பிரச்னையில் வீரையன் என்பவரைத் தாக்கியுள்ளார். இதனால் அவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில், திருவாரூர் கோர்ட், நடராஜனுக்கு 5 ஆண்டுகள் சிறை, ₹6,000 அபராதம் விதித்துள்ளது.

News March 20, 2025

இன்று IPL கேப்டன்கள் கூட்டம்.. வரப்போகும் முக்கிய மாற்றம்?

image

IPL அணிகளின் கேப்டன்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில் விதிகளில் ஒரு முக்கிய மாற்றம் செய்வது பற்றி விவாதிக்கப்பட உள்ளது. பந்து மீது எச்சிலைப் பயன்படுத்துவதற்கான தடையை நீக்குவது குறித்து இன்றைய கூட்டத்தில் பரிசீலிக்கப்பட உள்ளது. எச்சிலைப் பயன்படுத்தினால், வேகப்பந்து வீச்சாளர்கள் எளிதாக ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடியும். கொரோனா பரவல் காலங்களில் இந்த முறைக்கு ICC தடைவிதித்தது.

News March 20, 2025

அரசுக் கல்லூரிகளில் 2வது ஷிப்ட் அறிமுகம்

image

TNல் அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் படிக்க அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனர். அதில், 100 இடங்கள் மட்டுமே உள்ள சில படிப்புகளுக்கு 2,000 மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனர். அதுபோன்ற பாடங்களுக்கு இந்தாண்டு முதல் 15,000 மாணவர்களை கூடுதலாக சேர்க்கும் வகையில், 2ம் ஷிப்ட் முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தி, ஆசிரியர்களை கூடுதலாக்கவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

News March 20, 2025

நடிகர் வடிவேலுவுக்கு காத்திருந்த அதிர்ச்சி

image

மதுரை திருப்புவனம் அருகே நடிகர் வடிவேலுவுக்கு சொந்தமான இடத்தில் பேரூராட்சி நிர்வாகம் கடந்த 6 மாதங்களாக குப்பைகளை கொட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது. பழையூரில் வடிவேலுவுக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் 6 மாதக் காலமாக அப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால், நிலம் மாசடைவதாக அவரது உதவியாளர்கள் புகாரளித்தும், நடவடிக்கை இல்லை என குற்றஞ்சாட்டியுள்ளனர்.

News March 20, 2025

TNல் சட்டம் ஒழுங்கு மோசம்: ஓபிஎஸ் விமர்சனம்

image

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டதாக, முன்னாள் CM ஓபிஎஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். சாலைகளில் மக்கள் நடமாட முடியாத அளவிற்கு சட்டம் ஒழுங்கு, மோசமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். சமூக விரோத செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மக்களை வன்முறையில் இருந்து காப்பாற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

News March 20, 2025

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை!

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 20) சவரனுக்கு ₹160 உயர்ந்துள்ளது. இதனால், வரலாறு காணாத புதிய உச்சமாக 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,310க்கும், சவரன் ₹66,480க்கும் விற்பனையாகிறது. அதேநேரம், வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி ஒரு கிராம் ₹114க்கும், பார் வெள்ளி கிலோ ₹1,14,000க்கும் விற்பனையாகிறது.

error: Content is protected !!