News March 20, 2025

என் பேச்சை சரியாக புரிந்து கொள்ளவில்லை: வேல்முருகன்

image

தான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை புரிந்துக்கொள்ளாமல் அவையில் பேசுவதாக தவாக தலைவர் வேல்முருகன் வேதனை தெரிவித்துள்ளார். தனது பேச்சை அமைச்சர்கள் முதல் அதிமுக உறுப்பினர்கள் வரை தவறாக புரிந்துகொண்டதாக கூறிய அவர், தமிழை ஆட்சி மொழியாக, அலுவல் மொழியாக ஆக்க வேண்டுமென்றே தான் பேசியதாக விளக்கமளித்தார். மேலும், <<15824134>>சபாநாயகர் என்ன நடவடிக்கை எடுத்தாலும்<<>>, அதற்கு கட்டுப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

News March 20, 2025

பிளே ஆஃப் சுற்றுக்கு சிஎஸ்கே செல்லாது: டி வில்லியர்ஸ்

image

சிஎஸ்கே அணி இந்த முறை பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிப் பெறாது என டி வில்லியர்ஸ் ஆருடம் தெரிவித்துள்ளார். மும்பை, பெங்களூரு, கொல்கத்தா மற்றும் குஜராத் அணிகளே இம்முறை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் எனவும் அவர் கணிப்பு வெளியிட்டுள்ளார். இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும், ரசிகர்கள் எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

News March 20, 2025

ஏப்ரலில் இந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை

image

ரிசர்வ் வங்கி அறிவிப்பின்படி, வரும் ஏப்ரலில் வங்கிகளுக்கு, தமிழ்நாட்டில் மொத்தம் 4 நாட்கள் விடுமுறை வருகிறது. •ஏப்ரல் 6- ராம நவமி •ஏப்ரல் 10- மகாவீர் ஜெயந்தி. •ஏப்ரல் 14- தமிழ் புத்தாண்டு •ஏப்.18 – புனித வெள்ளி. தவிர 4 ஞாயிறு, 2 & 4ஆம் சனிக்கிழமையும் விடுமுறை என்பதால் மொத்தம் 10 நாட்கள் வங்கிகள் செயல்படாது. வாரம் 5 நாட்கள் வேலைநாள் அமலுக்கு வந்தால் மேலும் 2 நாள் விடுமுறை அதிகரிக்கும்.

News March 20, 2025

சில்க் ஸ்மிதா கொலையா? – சகோதரர் பகீர் குற்றச்சாட்டு

image

கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா இறந்து சுமார் 30 ஆண்டுகளாகியும் அவரது மரணத்தில் இருக்கும் மர்மத்திற்கு இன்னமும் விடை கிடைக்கவில்லை. இந்நிலையில், சில்க்கை அவரது உதவியாளர் ராதாகிருஷ்ணன் கொலை செய்துவிட்டு சொத்துகளை அபகரித்து விட்டதாக சில்கின் சகோதரர் நாக வரபிரசாத் குற்றஞ்சாட்டியுள்ளார். ராதாகிருஷ்ணன் எங்கே இருக்கிறார் என அறிந்தால் வழக்குத் தொடுப்பேன் என்றும் சில்கின் சகோதரர் கூறியுள்ளார்.

News March 20, 2025

மீண்டும் தாக்கிய இஸ்ரேல்: காசாவில் மரண ஓலம்

image

காசா மக்களின் வாழ்க்கை மீண்டும் கண்ணீர்க் கடலில் தத்தளிக்கத் தொடங்கியுள்ளது. பணயக் கைதிகளை விடுவிப்பதில் ஹமாஸ் அமைப்பு போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக மீண்டும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், இன்று நடத்திய தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News March 20, 2025

குருபெயர்ச்சி: கோடியில் புரளப்போகும் 3 ராசிகள்!

image

குருபகவான் வரும் மே 14ஆம் தேதி ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்கு செல்கிறார். குருவின் இந்தப் பெயர்ச்சியால் 3 ராசிகள் கோடிகளில் புரளப் போகின்றனர். 1) ரிஷபம்: தொழில் சிக்கல்கள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பல வழிகளில் பணம் வரும். 2) சிம்மம்: திருமண யோகம் உண்டு. திடீர் பண வரவால் வாழ்க்கை மாறும். 3) தனுசு: வியாபாரத்தில் பெரிய லாபம் கிடைக்கும். இல்லறத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

News March 20, 2025

சுனிதா அல்ல… விண்வெளியில் அதிக நாள்கள் இருந்தது இவரே!

image

9 மாத விண்வெளி பயணத்திற்கு பிறகு பூமிக்கு திரும்பியுள்ளார் இந்திய வம்சாவளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ். ஆனால், அதிக நாள்கள் விண்வெளியில் இருந்தவர்கள் பட்டியலில் சுனிதாவுக்கு இரண்டாமிடம்தான். முதலில் இருப்பவர் அமெரிக்க விண்வெளி வீராங்கனை பெக்கி வைட்சன். இவர் 675 நாள்கள் விண்வெளியில் இருந்து சாதனை படைத்துள்ளார். 608 நாள்கள் விண்வெளியில் இருந்த சுனிதா வில்லியம்ஸ், அதற்கு அடுத்த இடத்தில் உள்ளார்.

News March 20, 2025

IPL-லில் கொட்டும் பணமழை!! CSKவின் மதிப்பு என்ன?

image

IPL என்றாலே பணமழை கொட்டும் என்ற அளவுக்கு கடந்த 17 ஆண்டுகளாக, அதன் மதிப்பு கூடிக்கொண்டே செல்கிறது. அதிக ரசிகர்கள் படையை கொண்ட CSK அணியின் மதிப்பும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. தற்போது ₹1055 கோடியுடன் CSK பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் MI ₹1029 கோடியுடனும்,RCB ₹1012 கோடியுடனும், KKR ₹943 கோடியுடனும் உள்ளன. LSG ₹519 கோடியுடன் கடைசியில் இடத்தில் உள்ளது.

News March 20, 2025

கடைசி ‘லெஜெண்ட்’ வீரர் காலமானார்

image

2-ம் உலகப் போரின் மகத்தான விமானப்படை வீரன் என்ற புகழ்பெற்ற ஜான் பேடி ஹெமிங்வே, தனது 105-வது வயதில் காலமானார். 1941-ல் ஹிட்லரின் படை பிரிட்டன் மீது பெருந்தாக்குதல் நடத்திய போது, பிரிட்டனின் விமானப்படையே (RAF) அதை தடுத்து நிறுத்தியது. அதில் முக்கிய பங்காற்றியவர் ஜான் பேடி. தொடர்ந்து பல போர்முனைகளில் இவர் பங்காற்றியுள்ளார், பலமுறை இவரது விமானம் சுடப்பட்டும் தப்பிப் பிழைத்துள்ளார்.

News March 20, 2025

பெரியார் விருதை திருப்பி அளிக்கும் சினிமா இயக்குநர்

image

தமிழ்நாட்டில் ஒரு தலித், அரசியல் கேள்விகளை எழுப்புவது பெரியாரிய, திராவிட சித்தாந்தவாதிகளுக்கு கோபத்தை எழுப்புவதாக அறம் பட இயக்குநர் கோபி நயினார் குற்றஞ்சாட்டியுள்ளார். ‘அறம்’ கதைக்கு விருது வழங்கிய தி.க., அதனை நிஜ வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தும்போது தன்னை எதிரியாக சித்தரிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார். தி.க. வழங்கிய பெரியார் விருதை திருப்பி அளிப்பதாகவும் கோபி நயினார் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!