News March 21, 2025

ராசி பலன்கள் (21.03.2025)

image

➤மேஷம் – சிக்கல் ➤ரிஷபம் – ஆதரவு ➤மிதுனம் – பணிவு ➤கடகம் – தோல்வி ➤சிம்மம் – பயம் ➤கன்னி – செலவு ➤துலாம் – சுகம் ➤விருச்சிகம் – கவலை ➤தனுசு – வெற்றி ➤மகரம் – முயற்சி ➤கும்பம் – நன்மை ➤மீனம் – பயம்.

News March 21, 2025

இந்தியாவுக்கு தனி பிரவுசர்.. சூப்பர் மேட்டர் ஆச்சே

image

பயனாளர்களின் தரவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்தியாவிற்கு தனி பிரவுசரை உள்நாட்டிலேயே உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக நடத்தப்பட்ட போட்டியில் ஸ்டார்ட் ஆப் நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள் என பலர் பங்கேற்றனர். நமது நாட்டின் பாதுகாப்பு சட்டத்திற்கு உட்பட்ட பிரவுசர் என்பதால், நமது குடிமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

News March 21, 2025

உண்ணாவிரத போராட்டம்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

image

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வரும் 23ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். சேப்பாக்கம் எழிலகம் முன்பு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த போராட்டம் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளனர். 2021இல் அரசு ஊழியர்களுக்கு திமுக அறிவித்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை எனவும் அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

News March 21, 2025

ரயில்வேயில் 642 பணியிடங்கள்.. ₹1.60 லட்சம் வரை சம்பளம்!

image

ரயில்வேயில் ஜூனியர் மேனேஜர் உள்பட பல்வேறு பிரிவுகளில் 642 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. வேலைப்பிரிவுகளுக்கு ஏற்றபடி கல்வித்தகுதி வேறுபடுகிறது. குறைந்தபட்சம் மாதம் ₹16,000, அதிகபட்சம் ₹1.60 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் 18- 30 வயதுக்குள் இருக்க வேண்டும். வரும் 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலதிக தகவல்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கே<<>> க்ளிக் செய்யவும்.

News March 20, 2025

H.ராஜா தமிழ்நாட்டுக்கு பிடித்த ஏழரை நாட்டு சனி: சேகர்பாபு

image

தமிழக அரசை அவதூறாக பேசும் H.ராஜா தமிழ்நாட்டுக்கு பிடித்த ஏழரை நாட்டு சனி என அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார். திமுக ஆட்சியில் தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருப்பதை பாஜக விரும்பவில்லை என்றும், அப்பாவி தொண்டர்களை தூண்டிவிட்டு சட்ட ஒழுங்கை கெடுக்க முயற்சி செய்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். பாஜகவோடு எந்த மோதலுக்கும் திமுக தயாராக இருப்பதாகவும் சூளுரைத்துள்ளார்.

News March 20, 2025

கல்பனா சாவ்லா – சுனிதா 2 பேருக்கு பிடிச்சது இதுதான்

image

இந்தியா வம்சாவளியான கல்பனா சாவ்லாவின் விண்வெளி பயணம் சோகத்தில் முடிந்தாலும், சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமி திரும்பியது இந்தியர்களுக்கு மகிழ்ச்சி. இந்திய வம்சாவளிகளான இருவரும் நாசாவில் நண்பர்களாக இருந்துள்ளனர். இருவருக்குமே சமோசானா அலாதி பிரியமாம். 2006 விண்வெளி பயணத்தின் போதும்கூட சுனிதா சமோசாவையும் எடுத்துட்டு போனாங்கன பாத்துக்கோங்களேன்… உங்களுக்கு சமோசா பிடிக்குமா?

News March 20, 2025

பாட்டில்ல பால் கொடுக்க வேணாம் மம்மி

image

குழந்தைகளுக்கு வழக்கமாக தாய்மார்கள் பாட்டில்ல பால் கொடுக்குறது தான் வழக்கம். ஆனா குழந்தை பிறந்து 6 மாசம் ஆச்சுனா அத நிறுத்திடனும்னு சொல்றாங்க டாக்டர்ஸ். ஏன்னா, பாட்டில்ல பாலை குடிக்க குழந்தைகள் நீண்ட நேரம் எடுத்துக்கொள்வதால் சர்க்கரை பற்களில் ஒட்டி பாக்டீரியா ஏற்படுமாம். அதனால் கப்பில் உணவை கொடுப்பதே சிறந்ததாம். குழந்தைகளின் ஈறுகளை சுத்தம் செய்வதோடு, சீரான உணவுப் பழக்கத்தை பழக்குவது அவசியம்.

News March 20, 2025

‘எம்புரான்’ அற்புதமான படைப்பு: ரஜினி வாழ்த்து

image

எம்புரான் திரைப்படம் அற்புதமான படைப்பு என நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். என் அருமை மோகன்லால் மற்றும் பிருத்விராஜின் எம்புரான் திரைப்பட டிரெய்லரை பார்த்தேன். அற்புதமான படைப்பு. வாழ்த்துகள் என X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முன்னதாக படத்தின் இயக்குநரும், நடிகருமான பிரித்விராஜ், நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 20, 2025

கெத்தான 10 கேப்டன்கள்.. வந்துருச்சு புது கோப்பை

image

IPL திருவிழா வந்தாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது. அண்ணன் தம்பியாக இருந்த ரசிகர்கள் கூட அடுத்த 2 மாதங்களுக்கு எதிரும் புதிருமாக தான் இருப்பார்கள். இதனிடையே மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 10 அணி கேப்டன்களும் பங்கேற்றனர். அனைத்து கேப்டன்களும் கோப்பையுடன் இருக்கும் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த வருஷம் கப்ப தூக்கப் போறது யாரு?

News March 20, 2025

கற்றல் திறனை மேம்படுத்தும் காலை உணவுத் திட்டம்!

image

காலை உணவுத் திட்டம் குழந்தைகளிடம் கற்றல் திறனை மேம்படுத்தி நினைவாற்றலை அதிகரித்து உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், குழந்தைகள் பள்ளிகளில் சிறந்து விளங்குவதற்கு சத்தான உணவுகள் ஊக்கமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். காலை உணவுத் திட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல்நலக் குறைவு குறைந்திருப்பதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!