News March 21, 2025

டிரைவர், கண்டக்டர் வேலை: இன்றே விண்ணப்பிக்கலாம்!

image

அரசு வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 3,274 டிரைவர், கண்டக்டர் பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி <>www.arasubus.tn.gov.in <<>>என்ற இணையதளத்தில் சென்று தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். ஏப்.21 ஆம் தேதிக்குள் பதிவு செய்து விடுங்கள்.

News March 21, 2025

IPLல் 2 பந்து: புதிய விதி அறிமுகம்

image

IPL போட்டியின் நடப்பு சீசனில் புதிய விதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. இரவு நேர ஆட்டங்களில் பந்து ஈரமாகி விடுவதால், 2 ஆவது இன்னிங்ஸில் புதிய பந்து பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 10 ஆவது ஓவருக்கு பின், நடுவரிடம் முறையிட்டு புதிய பந்து கேட்கலாம். பந்தின் மீது எச்சில் தேய்ப்பதற்கு விதிக்கப்பட்ட தடையும் நீக்கப்பட்டது. IMPACT வீரர் விதிமுறை 2 ஆண்டுகளுக்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 21, 2025

வெயில் காலம் வருது.. இது முக்கியம் மக்களே

image

வெயில் காலம் ஆரம்பிச்சா வெளியில தலை காட்ட முடியாது. ஆனால் வெளில போகலன்னா பொழப்பு ஓடாது. வெயில் காலத்துல வெப்பத்தின் காரணமாக, உடல் உறுப்புகள் திடீரென்று செயலிழந்து `ஹீட் ஸ்ட்ரோக்’ வரலாம். உடலில் நீர்ச்சத்து இழப்பு, மயக்கம், தலைசுற்றல் போன்ற அறிகுறிகளுடன் ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்பவாத பாதிப்பு ஏற்படும். இதனால் வெயில் நேரத்தில் வெளியே செல்வதை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது.

News March 21, 2025

80 நாள்களில் 113 நக்சல்கள் சுட்டுக்கொலை!

image

சத்தீஸ்கரில் பிஜப்பூர், கான்கெர் மாவட்டங்களில் நடந்த இரு வேறு என்கவுன்ட்டர்களில் 30க்கும் மேற்பட்ட நக்சல்கள் கொல்லப்பட்டிருந்தனர். இதனுடன் சேர்த்து கடந்த 80 நாளில் மட்டும் 113 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பிஜப்பூரில் மட்டும் 91 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நக்சல் இல்லாத நாட்டை உருவாக்கும் முயற்சியில் நமது படை வீரர்கள் மகத்தான வெற்றியை பெற்று வருகின்றனர் என அமித் ஷா பாராட்டியுள்ளார்.

News March 21, 2025

Gpay, PhonePe பயன்படுத்துகிறீர்களா?

image

ஏப்.1ஆம் தேதி முதல் NPCI (National Payments Corporation of India) புதிய வழிகாட்டுதல்களை அமல்படுத்த உள்ளது. பயன்பாட்டில் இல்லாத, செயலற்ற மொபைல் எண்களை வரும் 31ஆம் தேதிக்குள் நீக்க வங்கிகள், UPI செயலிகளுக்கு NPCI உத்தரவிட்டுள்ளது. இதனால், உங்கள் வங்கிக் கணக்கு செயலற்ற மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருந்தால், அது நீக்கப்படும். அதன் பின், அந்த எண்ணுடன் இணைக்கப்பட்ட PhonePe, Gpay சேவைகளைப் பெற முடியாது.

News March 21, 2025

மீண்டும் நிலநடுக்கம்; அலறிய பொதுமக்கள்…!

image

ஆப்கானிஸ்தானில் ஒரே மாதத்தில் 2ஆவது முறையாக நிலநடுக்கம் நிகழ்ந்தது. கடந்த 13 ஆம் தேதி ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவான நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டடங்கள் லேசாக குலுங்கின. இந்தச் சூழலில், இந்திய நேரப்படி நள்ளிரவு 1 மணி அளவில் 4.9 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் நேரிட்டது. இதனால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். உயிர்ச்சேதம் குறித்து உடனடி தகவல்கள் வெளியாகவில்லை.

News March 21, 2025

பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை விடப்படுமா?

image

ஒடிசாவில் கடும் கோடை வெயில் காரணமாக 1-12ம் வகுப்பு வரை அரைநாள் மட்டும் (காலை 6.30 – 10.30 வரை) செயல்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. தமிழகத்திலும் கடந்த சில நாள்களாக வெயில் கொளுத்தி வருவதால், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி, ஒடிசாவை போலவே இங்கும் (TN) பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை அளிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

News March 21, 2025

பங்குச்சந்தையில் அதிக முதலீடு: எச்சரிக்கும் மத்திய அரசு

image

மக்கள் தங்கள் வங்கி முதலீடுகளை, பங்குச்சந்தைக்கு மாற்றுவது ஆபத்தாக அமையும் என மத்திய நிதியமைச்சகம் எச்சரித்துள்ளது. அதிக வருவாய் கிடைக்கும் என்ற எண்ணத்தில் முறையான ஆய்வுகள் செய்யாமல், மக்கள் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வதால் இழப்புகளை சந்திக்க நேரிடும் என்றும் கூறியுள்ளது. மக்களின் முதலீடே வங்கிகளுக்கான நிதி ஆதாரமாகும். அந்த முதலீடுகள் குறைவது, வங்கிகளுக்கு சவாலாகும் என்றும் தெரிவித்துள்ளது.

News March 21, 2025

அடுத்த 6 நாட்கள் மழை பெய்யக் கூடும்: வானிலை ஆய்வு மையம்

image

தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று முதல் மார்ச் 26 வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலில் சில பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என முன்னறிவித்துள்ளது.

News March 21, 2025

அமெரிக்காவில் கல்வித் துறையை மூடிய டிரம்ப்

image

அமெரிக்காவில் கல்வித் துறையை மூடுவதற்கான உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அரசின் செலவினங்களை குறைக்கும் வகையில் அவர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். அதே நேரம் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான நிதியுதவி, மானியம் உள்ளிட்ட சலுகைகள் தொடரும் என அவர் அறிவித்துள்ளார். இந்த புதிய உத்தரவு மூலம் கல்வித் துறையை நிர்வகிக்கும் பொறுப்பு இனி அந்தந்த மாகாண அரசுகளிடமே ஒப்படைக்கப்படும்.

error: Content is protected !!