News March 21, 2025

சாதிவாரி கணக்கெடுப்பு: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

image

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளதாக ஐகோர்ட் மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது. தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் பிஹார், தெலங்கானா மாநிலங்களில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து வாதிடப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

News March 21, 2025

பாகிஸ்தானுக்கு ஆறுதல் வெற்றி.. 44 பந்துகளில் சதம்..

image

நியூசிலாந்துக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் பாகிஸ்தான் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சாம்பியன் டிராபியில் தொடர் தோல்வி, நியூசிலாந்து தொடரின் முதல் 2 போட்டிகளில் தோல்வி என துவண்டு போயிருந்த பாகிஸ்தானுக்கு இது ஆறுதலாக அமைந்துள்ளது. முதலில் ஆடிய நியூசிலாந்து 204 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தானில், இளம் வீரர் ஹசன் நவாஸ் சதம் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

News March 21, 2025

மீண்டும் அஜித் VS விஜய்… தியேட்டர்கள் தெறிக்கப் போகுது!

image

சினிமாவில் போட்டியாளர்களாக இருக்கும் அஜித், விஜய் படங்கள் ஒரே நாளில் வெளியானால் திரையரங்குகளில் கொண்டாட்டம் களைகட்டும். 2023-ல் துணிவு, வாரிசு ஆகிய படங்கள் வெளியாகின. இந்நிலையில், ஏப். 10-ல் குட் பேட் அக்லி படம் வெளியாகும் நிலையில், விஜய்யின் சச்சின் திரைப்படம் ஏப். 18-ல் ரீரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வார இடைவெளியில் 2 பேரின் படங்களும் வெளியாவது ரசிகர்களுக்கு ஹேப்பி தான்!

News March 21, 2025

புதிய மாடல் ஐபோன்… விலை எவ்வளவு தெரியுமா?

image

ஐபோன் வைத்திருக்க வேண்டும் என பலருக்கும் ஆசை. அண்மையில் ஐபோன் 16e மாடல் அறிமுகமான நிலையில், மடித்து பயன்படுத்தும் புதிய மாடல் ஐபோனை அறிமுகம் செய்ய ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 7.8 இன்ச் நீளம் கொண்ட FOLDABLE ஐபோன் அடுத்தாண்டு இறுதியிலோ (அ) 2027ம் ஆண்டு தொடக்கத்திலோ அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ.2 லட்சம் என்ற அளவில் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

News March 21, 2025

வார விடுமுறை: 616 சிறப்பு பஸ்கள் இயக்கம்

image

நாளையும், நாளை மறுநாளும் வாரயிறுதிநாள் விடுமுறையாகும். இந்த விடுமுறைக்கு சொந்த ஊருக்கு மக்கள் செல்ல ஏதுவாக 616 சிறப்பு பஸ்களை அரசு போக்குவரத்து கழகம் இன்றும், நாளையும் இயக்குகிறது. இதில் அதிகபட்சமாக சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று 270, நாளை 275 பஸ்களை இயக்குகிறது. கோயம்பேட்டில் இருந்து இன்றும், நாளையும் தலா 51 பஸ்களும், மாதவரத்தில் இருந்து தலா 20 பஸ்களும் இயக்கப்படுகின்றன.

News March 21, 2025

நிதிஷ்குமாருக்கு மனநல பாதிப்பு: மிசா பாரதி

image

நிதிஷ் குமாருக்கு உடல் மற்றும் மன ரீதியான பாதிப்பு உள்ளதாக லாலு மகளும், எம்.பி.யுமான மிசா பாரதி கூறியுள்ளார். முதல்வர் தொடர்ந்து பெண்களை அவமதித்து வருவதாகவும், பிரதமரும், உள்துறை அமைச்சரும் பிஹார் யாருடைய கைகளில் இருக்கிறது என்பது குறித்து சிந்திக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக, அரசு நிகழ்ச்சியில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது அதை அவமதிக்கும் விதமாக நிதிஷ் நடந்துகொண்டார்.

News March 21, 2025

ஜட்ஜ் வீட்டில் ₹100 கோடி? காட்டிக் கொடுத்த தீ விபத்து!

image

டெல்லி ஐகோர்ட் ஜட்ஜ் யஷ்வந்த் வர்மா வீட்டில் தீ விபத்து நேரிட்டது. தீயை அணைக்க சென்ற தீயணைப்பு வீரர்கள் அவரது வீட்டில் இருந்த பணக்குவியலை கண்டு மலைத்துப் போயுள்ளனர். ₹11 கோடி தீயில் எரிந்த நிலையில், ₹100 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அவர் அலகாபாத் ஐகோர்ட்டுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

News March 21, 2025

கிரிக்கெட் வீரர் ‘அஷ்வின்’ பெயரில் சாலை?

image

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ராமகிருஷ்ணாபுரம் 1வது தெருவுக்கு கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் பெயரை சூட்ட சென்னை மாநகராட்சி கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. கார்த்திக் என்பவர் முன்வைத்த இந்த கோரிக்கையை ஏற்ற மாமன்றம், தீர்மானம் நிறைவேற்ற ஒப்புதலுக்காக கூட்டத்தில் சமர்ப்பித்துள்ளது. மாநகராட்சியின் இந்த நடவடிக்கை அஷ்வின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

News March 21, 2025

WC கால்பந்துக்கு தகுதி பெற்ற முதல் அணி இதுதான்

image

உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு முதல் அணியாக ஜப்பான் தகுதி பெற்று அசத்தியுள்ளது.
சொந்த மண்ணில் நடைபெற்ற தகுதி சுற்று ஆட்டத்தில் ஜப்பான் அணி 2-0 என பக்ரைனை நேற்று வீழ்த்தியதன் மூலம் உலகக் கோப்பைக்குள் நுழைந்துள்ளது. 2026 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா நாடுகளில் நடைபெறுகிறது. தொடரை நடத்துவதால் இந்த 3 அணிகளும் நேரடியாக தகுதி பெற்றிருந்தன.

News March 21, 2025

500 டான்ஸர்களுடன் ஆட்டம் போடும் சூர்யா

image

சூர்யாவின் 45ஆவது படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வருகிறார். இருவரின் காம்பினேஷன் எப்படி இருக்கப் போகிறது என்ற ஆவலில் சூர்யா ரசிகர்கள் உள்ளனர். இதனிடையே படத்தின் பாடல் ஒன்றுக்காக 500க்கும் அதிகமான நடன கலைஞர்களுடன் சூர்யா மற்றும் த்ரிஷா ஆட உள்ளனர். சூர்யா படத்தில் இதுவரை இல்லாத பிரம்மாண்டம் இப்படத்தில் இருக்கும் என படக்குழு தரப்பில் சொல்லப்படுகிறது. படம் வந்தாதான் வொர்த்தா இல்லையானு தெரியும்..

error: Content is protected !!