India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
IPL 2025 போட்டிகள், கொல்கத்தாவில் நாளை இரவு தொடங்குகின்றன. இதையடுத்து மே மாதம் 25ஆம் தேதி வரை போட்டி நடைபெறவுள்ளன. இப்போட்டிகளை நேரலையாக ஒளிபரப்பும் உரிமத்தை ஸ்டார் குழுமம் பெற்றுள்ளது. இதனால் ஸ்டார் குழும டிவி சேனல்களில் பல்வேறு மொழிகளிலும் போட்டிகளை நேரலையாகக் கண்டு களிக்கலாம். போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்கும். செயலி எனில் ஜியோ ஹாட்ஸ்டாரில் நேரலையாக காணலாம்.
அமெரிக்காவின் உயரமான மனிதரும், முன்னாள் போலீசுமான ஜார்ஜ் பெல் (67) காலமானார். 7 அடி 8 அங்கும் உயரம் கொண்ட அவர், அமெரிக்கன் ஹாரர் ஸ்டோரி படம், சில சீரியல்களிலும் நடித்துள்ளார். இவர் வர்ஜீனியா காவல்துறையில் துணை செரீப்பாக பணிபுரிந்துள்ளார். கடந்த 2007ஆம் ஆண்டு வரை உலகின் உயரமான மனிதர் என்ற கின்னஸ் சாதனையையும் அவர் புரிந்திருந்தார். இவரது மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
IPL 2025ஆம் ஆண்டு போட்டிகள் நாளை தொடங்குகின்றன. தொடக்க நாள் விழாவை கேகேஆர் அணி நிர்வாகம் நாளை மாலை 6 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடத்துகிறது. விழாவில் நடிகர், நடிகைகளின் கண்கவர் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன் பின்னர் இரவு 7.30 மணியளவில் போட்டித் தொடங்கும். முதல் போட்டியில் கொல்கத்தா ரைடர்ஸ், ஆர்சிபி அணிகள் மோதவுள்ளன.
டெல்லி ஐகோர்ட் நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் <<15836861>>₹100 கோடிக்கும்<<>> அதிகமாக பணமும் தங்கமும் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, அவரை அலகாபாத் ஐகோர்ட்டுக்கு பணிமாற்றம் செய்து கொலீஜியம் உத்தரவிட்டுள்ளது. இதுவே சாதாரண மக்களாக இருந்தால், பணமோசடி வழக்குப் போட்டு சிறையில் தள்ளப்படுவர். ஆனால், நீதிபதிகளாக இருந்தால் வேறு கோர்ட்டுக்கு மாற்றப்படுவார்கள். இது எப்படி நீதியாகும் என்று கேட்கின்றனர் நெட்டிசன்கள்.
நடிப்புத் தொழிலில் இருந்து முழுவதும் விலகுவதாக புகழ்பெற்ற சின்னத்திரை நடிகை ஸ்ரீ கோபிகா அறிவித்துள்ளார். சன்டிவியில் வெளியான ‘சுந்தரி’ சீரியல் மூலம் பிரபலமானவர் ஸ்ரீ கோபிகா. இதையடுத்து, சூர்யா டிவியில் ‘மாங்கல்யம் தந்நுனானே’ சீரியலில் நடித்து வந்தார். இந்நிலையில், அந்த சீரியலில் இருந்தும், நடிப்புத் தொழிலில் இருந்தும் விலகுவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ரீ கோபிகா பதிவிட்டுள்ளார்.
மாநில CMகளை ஒருங்கிணைத்து தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் குறித்து திமுக சார்பில் சென்னையில் நாளை ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இந்நிலையில், திமுக அரசைக் கண்டித்து பாஜக சார்பில் நாளை வீடுகளுக்கு முன் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடக்கும் என அண்ணாமலை அறிவித்துள்ளார். அரசு மீது மக்களுக்கு எழுந்துள்ள கோபத்தை திசை திருப்பவே மறுசீரமைப்பு நாடகத்தை திமுக அரங்கேற்றி வருவதாகவும் அண்ணாமலை சாடியுள்ளார்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளதாக ஐகோர்ட் மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது. தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் பிஹார், தெலங்கானா மாநிலங்களில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து வாதிடப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
நியூசிலாந்துக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் பாகிஸ்தான் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சாம்பியன் டிராபியில் தொடர் தோல்வி, நியூசிலாந்து தொடரின் முதல் 2 போட்டிகளில் தோல்வி என துவண்டு போயிருந்த பாகிஸ்தானுக்கு இது ஆறுதலாக அமைந்துள்ளது. முதலில் ஆடிய நியூசிலாந்து 204 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தானில், இளம் வீரர் ஹசன் நவாஸ் சதம் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.
சினிமாவில் போட்டியாளர்களாக இருக்கும் அஜித், விஜய் படங்கள் ஒரே நாளில் வெளியானால் திரையரங்குகளில் கொண்டாட்டம் களைகட்டும். 2023-ல் துணிவு, வாரிசு ஆகிய படங்கள் வெளியாகின. இந்நிலையில், ஏப். 10-ல் குட் பேட் அக்லி படம் வெளியாகும் நிலையில், விஜய்யின் சச்சின் திரைப்படம் ஏப். 18-ல் ரீரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வார இடைவெளியில் 2 பேரின் படங்களும் வெளியாவது ரசிகர்களுக்கு ஹேப்பி தான்!
ஐபோன் வைத்திருக்க வேண்டும் என பலருக்கும் ஆசை. அண்மையில் ஐபோன் 16e மாடல் அறிமுகமான நிலையில், மடித்து பயன்படுத்தும் புதிய மாடல் ஐபோனை அறிமுகம் செய்ய ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 7.8 இன்ச் நீளம் கொண்ட FOLDABLE ஐபோன் அடுத்தாண்டு இறுதியிலோ (அ) 2027ம் ஆண்டு தொடக்கத்திலோ அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ.2 லட்சம் என்ற அளவில் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.