India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்தது. அதேவேளையில், ஒருசில இடங்களில் வெப்பமும் வாட்டி வதைத்தது. மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு வெப்பக்காற்று வீசியது. அந்தவகையில் ஈரோடு, வேலூர், நாகை, கடலூர், திருச்சி, சென்னை மீனம்பாக்கம், மதுரை நகரம், மதுரை விமான நிலையம் உள்ளிட்ட 8 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது.
2006-ல் அதிமுகவுடன் மதிமுக கூட்டணி வைத்தது குறித்து வைகோ முதல்முறையாக பேட்டியளித்துள்ளார். திருச்சி திமுக மாநாட்டிற்கு செல்ல இருந்த தாம், அங்கு செல்லாமல் ஜெயலலிதாவை நேரில் சந்தித்தது தவறு என்றும், அதிமுகவுடன் தேர்தல் கூட்டணி வைத்தது மாபெரும் பிழை எனவும் அவர் கூறியுள்ளார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடனான கூட்டணி நீடிக்கும், திமுக வெற்றிக்காக மதிமுக பாடுபடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இரவில் பலரும் துக்கத்தை கெடுத்து கொள்ளக்கூடாது என்பதற்காக, அப்படியே சிறுநீரை அடக்குவார்கள். ஆனால், அது நோய்களுக்கு காரணமாகலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சிறுநீர்ப்பை, நரம்புகளில் இது பாதிப்பை ஏற்படுத்தும். சிறுநீர் கழிக்கும் தூண்டுதலை உதாசினப்படுத்தினால், இடுப்பு தசைகள் வலுவிழக்கும். இதனால், கிட்னியில் கல் உண்டாகலாம். சிறுநீர்ப்பாதை தொற்றும் ஏற்படும். அடுத்த வாட்டி யோசியுங்க!
வாகனம் மற்றும் கணினி வாங்க கடன் பெற விரும்பும் ஆசிரியர்கள் உரிய விவரங்களை சமர்ப்பிக்கும்படி பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறையின் நிதிக்கட்டுப்பாட்டு அலுவலகம், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிக்கை அனுப்பியுள்ளது. அதில், கடன் பெற விரும்புவோர் தற்போது அளிக்கப்பட்டுள்ள புதிய படிவத்தை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
அகமதாபாத் விமானம் விபத்து குறித்த முதல்நிலை விசாரணை அறிக்கை இந்த வார இறுதியில் தாக்கல் செய்யப்படவுள்ளது. 260 பேர் பலியான இந்த விபத்து குறித்து விமான விபத்து புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. இந்தக் குழுவின் இயக்குநர், போக்குவரத்து, சுற்றுலா விவகார நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு ஆஜரானார். அப்போது அவர், விசாரணை சரியான பாதையில் செல்வதாகவும், முதல்நிலை அறிக்கை விரைவில் தாக்கலாகும் என்றார்.
அரசுப் பள்ளிகளில் 1,996 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ளது. அதில் தமிழ் 216, ஆங்கிலம் 197, கணிதம் 232, இயற்பியல் 233, வேதியியல் 217 பணியிடங்கள் உள்பட 1996 இடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு ஆன்லைனில் இன்று முதல் அடுத்த மாதம் 12-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினி, கமல் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் நடித்தவர் நிசா நூர். பாலசந்தர், விசு உள்ளிட்டோரின் இயக்கத்திலும் அவர் நடித்துள்ளார். இதில் ஸ்ரீ ராகவேந்திரா, டிக் டிக் டிக், இளமை கோலம், எனக்காக காத்திரு, கல்யாண அகதிகள் படங்கள் முக்கியமானவை ஆகும். பிரபல நடிகர்களுடன் நடித்தும் உச்சம் செல்லாத நிசா, வறுமை நிலை சென்றார். விபசாரத்திலும் தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் எய்ட்ஸ் வந்து உயிரிழந்தார்.
மகளிர் உரிமைத் திட்ட விதிகளை CM ஸ்டாலின் தளர்த்தியிருப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் நடந்த அரசு நலத்திட்ட விழாவில் பேசிய அவர், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம், கடந்த 22 மாதங்களாக
1.15 கோடி மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருவதாக கூறினார். மேலும், இந்த திட்டத்தில் இன்னும் புதிதாக விண்ணப்பிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் உதயநிதி கூறினார்.
சமூக செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான காந்திமதிநாதன் தவெகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். புஸ்ஸி ஆனந்திற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தென் மாவட்டங்களில் மிகப்பெரிய சமூகத்தை சார்ந்தவர்களுக்கு மா.செ. பதவி வழங்காததால் அந்த சமூகத்தின் வாக்குகளை தவெகவால் பெற முடியாது என அதிருப்தி தெரிவித்துள்ளார். தனது அரசியல் பயணத்தை முடித்துக் கொள்வதாகவும் காந்திமதிநாதன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் இரவு 10 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. அதன்படி, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாமக்கல், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடுமாம். அதேபோல் சேலம் மற்றும் தருமபுரியில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாம். உங்க ஊரில் இப்போ மழை பெய்யுதா?
Sorry, no posts matched your criteria.